சாம்சங் கேலக்ஸி எஸ்8 : ஏன் வாங்க கூடாது என்பதற்கான 3 காரணங்கள்.!?

மிகவும் எதிர்பார்த்தாலே ஏமாற்றம் தான்.!

|

முதலில் இதை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். புதிய எஸ்8 மற்றும் எஸ்8 + மிகவும் அழகான மற்றும் மிகவும் விரும்பி தேடப்படும் ஒரு ஸ்மார்ட்போன்களாக உள்ளன என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், நீங்கள் இப்போதைக்கு இந்த தொலைபேசியை வாங்குவதை தவிர்க்கலாம் என்பதை பற்றிய தொகுப்பே இது

ஏன்.?? என்ற உங்களின் கேள்விக்கு எங்களிடம் மூன்று காரணங்கள் உள்ளன. சாம்சங் நிறுவனத்தின் நோட் 7 படுதோல்விக்கு பின்னர் நிறுவனத்தின் பிராண்ட் பெயரே பாழாய் போனது என்பது வெளிப்படை. அதற்கு பதிலடியாகவும் நிறுவனத்தின் பெயரை மீண்டும் செங்குத்தாய் தூக்கி நிறுத்தவும் வடிவமைக்கபட்ட கருவிதான் சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போன். அதிலும் குறைகள் (பேட்டரி வெடிப்பு சம்பவங்கள் அல்ல) இருப்பது சற்று ஏமாற்றமாகத்தான் உள்ளது. சரி இப்போதைக்கு கேலக்ஸி எஸ்8 தொலைபேசியை ஏன் வாங்க கூடாது.? என்ன காரணங்கள்.!?

காரணம் #01 : இன்பினிட்டி டிஸ்ப்ளே

காரணம் #01 : இன்பினிட்டி டிஸ்ப்ளே

கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8+ கருவியின் க்வாட் எச்டி+ இரட்டை முனைகள் கொண்ட டிஸ்ப்ளே கொண்டு வருகின்றன. இந்த புதிய டிஸ்ப்ளே அழகாக இருக்கிறதா.? ஆம் அதில் சந்தேகமே இல்லை. நாம் இதை கடந்த எஸ்6 எட்ஜ் மற்றும் எஸ்7 எட்ஜ் ஆகிய சாம்சங் வடிவமைப்பில் பார்த்திருக்கிறோம்.

கீழே விழுந்தால்.?

கீழே விழுந்தால்.?

ஒருவேளை இக்கருவி கைத்தவறி கீழே விழுந்தால் என்னவாகும்.? அனைத்து டிஸ்ப்ளேக்களை போலவே, அது என்ன கொரில்லா கிளாஸ் ஆதரவு கொண்டுள்ளது என்பது இங்கே விடயமே இல்லை. ஆனால் அது உடைப்புக்கும், விரிசல்களுக்கும், கீறல்களுக்கும் ஆளாகும் என்பதில் சந்தேகமில்லை.

ஓராண்டு திரை மாற்று உத்தரவாதம்

ஓராண்டு திரை மாற்று உத்தரவாதம்

இன்னும் சொல்லப்போனால் சாம்சங் எஸ்7 எட்ஜ் கருவிகள் ஓராண்டு திரை மாற்று உத்தரவாதத்தோடு தான் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது. ஆக, இக்கருவியின் இன்பினிட்டி டிஸ்ப்ளே என்பது ஒரு பிரதான பின்னடைவாகும்.

காரணம் #02 : இரட்டை கேமரா அமைப்பு இல்லை

காரணம் #02 : இரட்டை கேமரா அமைப்பு இல்லை

சிறிய நிறுவனங்கள் கூட 2016-ல் இருந்தே இரட்டை கேமரா போன்கள் வெளியிட ஆரம்பித்து விட்ட நிலைப்பாட்டில் 2017-ல் ஒரு இரட்டை கேமரா அமைப்பு இல்லாமல் சாம்சங் அதன் கருவியை வெளியிட்டுள்ளது என்பது நிச்சயமாக ஒரு பெரிய ஏமாற்றம் தான்.

அதே இரட்டை பிக்சல் தொழில்நுட்பம்

அதே இரட்டை பிக்சல் தொழில்நுட்பம்

எஸ்8+ கருவியின் இரட்டை கேமரா அமைப்பானது எஸ்7 மற்றும் எஸ்7 எட்ஜ் கருவியல் கொண்டிருந்த அதே கேமரா மெகாபிக்சல் எண்ணிக்கை மற்றும் அதே இரட்டை பிக்சல் தொழில்நுட்பம் கொண்டுள்ளது என்பது சாம்சங் நிறுவனமும் பாதுகாப்பான ஒரு விளையாட்டை ஆடுவதை உறுதி செய்கிறது.

காரணம் #03 : பிக்ஸ்பை

காரணம் #03 : பிக்ஸ்பை

நிறுவனத்தின் பிக்ஸ்பை (Bixby) ஆனது கூகுள் நிறுவனத்தின் கூகுள் அசிஸ்டென்ட் அம்சத்தின் ஒரு உறவினர் போல் தெரிகிறது. சாம்சங் அதன் சொந்த செயற்கை அறிவுத்திறன் கொண்டு இயங்கும் குரல் கட்டுப்பாட்டிலான ஸ்மார்ட் கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 ப்ளஸ் அசிஸ்டன்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

மற்றொரு பதிப்பு

மற்றொரு பதிப்பு

இது சிரி அல்லது அலெக்சாவின் மற்றொரு பதிப்பு போலவே தான் உள்ளது. பலர் இது வித்தியாசமாக வேலை செய்கிறது என்று கூறலாம், வாதிடலாம். அந்த வாதத்தை நிறுத்திக்கொள்ள நீங்கள் கூகுள் அல்லா பயன்பாட்டை ஒருமுறை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி பாருங்கள், உங்களுக்கே புரியும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

சூடுபிடிக்கும் ஆட்டம் : நோக்கியா, ஆப்பிளுக்கு சாம்சங் சரியான பதிலடி.!

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S8: Three Reasons Why I Won't Be Buying The Next Galaxy. Read more about this is in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X