பிரீமியம் கருவியான கேலக்ஸி எஸ்8+ என்னென்ன அம்சங்கள் கொண்டிருக்கும்.?!

கேலக்ஸி எஸ்8+ ஒரு பெரிய 6.2-அங்குல சூப்பர் அமோ எல்இடி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்பது உறுதியாகிறது. மேலும் என்னென்ன அம்சங்கள் கொண்டிருக்கும்.??

Written By:

மற்றொரு நாளான இன்று மற்றொரு புதிய சாம்சங் நிறுவனத்தின் வரவிருக்கும் பிரீமியம் கருவியான கேலக்ஸி எஸ்8+ ஸ்மார்ட்போன் தொடர்பான லீக்ஸ் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த முறை ஒரு படி மேல் சென்ற லீக்ஸ் தகவல்கள் கேலக்ஸி எஸ்8+ கருவியின் (கிட்டத்தட்ட) முழு அம்சங்களையும் வெளிப்படுத்தியுள்ளது.

சாம்சங் கருவிகள் பற்றி எப்போதும் நம்பகமான தகவல்களை வழங்கும் இவான் ப்ளாஸ் (@evleaks) வெளியிட்டுள்ள இந்த நிறைவான தகவலின்கீழ் கேலக்ஸி எஸ்8+ உண்மையில் ஒரு பெரிய 6.2-அங்குல சூப்பர் அமோ எல்இடி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்பது உறுதியாகிறது. மேலும் என்னென்ன அம்சங்கள் கொண்டிருக்கும்.??

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

க்யூஎச்டி+ திரை தீர்மானம்

வெளியான தகவலானது இந்த ஸ்மார்ட்போன் 4ஜி எல்டிஇ ஆதரவு கொண்ட ஒரு க்யூஎச்டி+ திரை தீர்மானம் கொண்டு வரும் என்று காட்டுகிறது.

கேமரா

கேலக்ஸி எஸ்8+ 12 மெகாபிக்சல் கொண்ட 'இரட்டை பிக்சல்' முதன்மை கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் கொண்ட செல்பீ கேமரா பேக் என்றும் கூறப்படுகிறது.

தூசி மற்றும் நீர் எதிர்ப்பு

கேலக்ஸி எஸ்7 போன்றே கேலக்ஸி எஸ்8 கருவிகள் ஆனது தூசி மற்றும் நீர் எதிர்ப்பு கொண்ட ஒரு ஐபி68-மதிப்பீடு கொண்டு வெளிவர வேண்டும்.

கருவிழி ஸ்கேனர்

இந்த புதிய கேலக்ஸி எஸ்8 தொடர்கருவிகளின் மிகப்பெரிய சிறப்பம்சமாக ஒரு கருவிழி ஸ்கேனர் அம்சம் இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் அதை இந்த புதிய கசிவு உறுதிப்படுத்தவில்லை.

ரேம்

உடன் இந்த கேலக்ஸி எஸ்8 + கருவியானது 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு மற்றும் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்ட 4ஜிபி ரேம் கொண்டு சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் பே ஆப் உடன் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

வயர்லெஸ் சார்ஜ்

சாம்சங் நாக்ஸ், வயர்லெஸ் சார்ஜ் ஆதரவு, மற்றும் ஏகேஜி மூலமான இயர் போன்ஸ் ஆகிய இதர அம்சங்களும் இந்த கருவியில் இடம்பெறும் என்று பிற லீக்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய வரிசை

எது உண்மையோ இல்லையோ.. சாம்சங் நிறுவனம் அதன் எட்ஜ் கருவிகளை ஓரங்கட்டிவிட்டு புதிய வரிசையான ப்ளஸ் கருவிகளை சந்தைக்குள் களமிறக்க உள்ளது என்பது மட்டும் உறுதி.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Samsung Galaxy S8+ Specifications List Leaked. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்