கற்பனைக்கு எட்டாத அசத்தல் கேமரா அம்சங்களுடன் கேலக்ஸி எஸ்8.!

ஒப்பீட்டில் இனி ஆப்பிள் கருவிகளின் கேமராக்களில் ஒரு சிறப்பும் இருக்காது.!

Written By:

சாம்சங் நிறுவனத்தின் தொகுக்கப்படாதொரு நிகழ்வு நெருக்கமாகி கொண்டே வருகிறது. அதனை தொடர்ந்து வழக்கத்திற்கும் அதிகமான கசிவுகள் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்8 கருவி சார்ந்த வதந்திகள் வெளியான வண்ணம் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக சாம்சங் எஸ்8+ கருவி சார்ந்த தகவல்களும் வெளியான வண்ணம் உள்ளது.

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள சமீபத்திய சாம்சங் கேலக்ஸி எஸ்8 கருவியானது அதன் பின்புற கேமராவில் சோனியின் ஒரு சூப்பர் ஸ்லோ மோஷன் இயக்க வீடியோ சுட திறன் கொண்டிருக்கும் என்கிறது அதுமட்டுமின்றி மேலும்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

சூப்பர் ஸ்லோ மோஷன்

ஒரு சில வாரங்களுக்கு முன்பு, சோனி 'மோஷன் ஐ' என்ற ஒரு முற்றிலும் புதிய கேமரா முறையை அறிமுகப்படுத்தியது. இந்த கேமரா ஒரு சூப்பர் ஸ்லோ மோஷன் இயக்க வீடியோவை பதிவு செய்ய அனுமதிக்கும் அளவிலான வேகமாக நினைவக திறன் பதிக்கப்பட்ட ஒன்றாகும்.

எக்ஸ்பீரியா

இதே தொழில்நுட்பம் வரவிருக்கும் எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் மற்றும் எக்ஸ்இசெட் பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது சாம்சங் கருவியில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மோஷன் ஐ

சோனியின் 'மோஷன் ஐ' கேமரா நொடிக்கு 960 ப்ரேம்கள் வீடியோ பதிவு செய்ய முடியும் போது, கேலக்ஸி எஸ்8 கருவியின் 12எம்பி பின்புற கேமராவானது நொடிக்கு 1000 ப்ரேம்கள் என்ற அளவிலான வீடியோ பதிவு ஆதரவுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசாதாரணமான வேகத்தில்

ஒப்பிடுகையில் ஐபோன் 7 கருவியானது நொடிக்கு 120 ப்ரேம்கள் (1080) என்ற ஸ்லோ மோஷன் வீடியோ அல்லது நொடிக்கு 240 ப்ரேம்கள் (720) என்ற வேகத்தில் தான் நிகழ்த்தும். அப்படியாக சாம்சங் ஆனது மிகவும் அசாதாரணமான வேகத்தில் ஸ்லோ மோஷன் வீடியோவை பதிவு செய்யும்.

செல்பீ

இக்கருவியின் முன்பக்க கேமராவை பொறுத்தமட்டில் செல்பீகளுக்கான கவனம் கொண்ட ஒரு 8எம்பி கேமரா இடம்பெறுகிறது உடன் இந்த கேமரா ஒரு 3.7எம்பி ஐரிஸ் கேமரா சென்சார் என்ற பயோமெட்ரிக் அங்கீகாரம் சேர்ந்து வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

தெறிக்க விடப்போகும் கேலக்ஸி எஸ்8 (அம்சங்கள், வெளியீடு).!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Samsung Galaxy S8 to come with 1000 fps 12MP camera, 3.7MP Iris sensor. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்