Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

2 மாதத்தில் 1 கோடி கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன்கள் விற்பனை!

Updated: Tuesday, March 26, 2013, 11:30 [IST]

samsung galaxy s iii sales over 10 million units in 2 months

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பினை எகிற வைத்த சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் வெளியான 2 மாதத்தில் 1 கோடி ஸ்மார்ட்போனுக்கும் மேல் விற்பனையாகி உள்ளது.

மே 3-ஆம் தேதி லண்டனில் அறிமுகமானது கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன். இந்தியாவில் ஜூன் 31-ஆம் தேதி அறிமுகமானது.

இந்த ஸ்மார்ட்போன் வெளியான 2 மாதத்திற்குள் 1 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி உள்ளது என்பது மின்னணு சாதன உலகில் பெரிய சாதனை என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் ஸ்மார்ட்போன் உலகில் ஒரு மின்னணு சாதனம் புதிதாக அறிமுகமான அடுத்த நிமிடம் வேறு ஏதாவது புதிய தொழில் நுட்ப சாதனம் அறிமுகமானது என்றால், வாடிக்கையளர்கள் அந்த புதிய சாதனத்தை தேடி செல்கின்றனர்.

இதனால் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் வெளியான பின்பு, எத்தனையோ ஸ்மார்ட்போன்களும் வெளியாகிவிட்டன. ஆனாலும் வாடிக்கையாளர்கள் சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை வாங்கி வருகின்றனர் என்பது, இந்த ஸ்மார்ட்போனின் புதிய தொழில் நுட்பத்தினையே குறிக்கிறது.

இதனால் இந்த கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் வெளியான 2 மாதத்திலேயே, 1 கோடி ஸ்மார்ட்போனுக்கு மேல் விற்பனையாகி உள்ளது.

சாம்சங் நிறுவனம் அடுத்ததாக கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. தனது அடுத்த படைப்பை வெளியிட இருந்தாலும், இந்நிறுவனத்தின் முந்தைய ஸ்மார்ட்போனின் சாதனையையே இன்னும் முடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

Story first published:  Monday, July 23, 2012, 13:12 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll