Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

அக்டோபர் மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி நோட்-2!

Updated: Tuesday, March 26, 2013, 11:29 [IST]

samsung galaxy note ii to launch coming october
கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போன் வருகிற அக்டோபர் மாதம் அறிமுகமாகும் என்று புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வரிசை ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற ஸ்மார்ட்போன்கள். இதில் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் வெளியான செய்திகளை கேட்டோம். கேலக்ஸி நோட் ஸ்மார்டபோன் இதன் சிறந்த தொழில் நுட்ப வசதிக்கும், மெல்லிய வடிவமைப்பிற்கும் பெயர் பெற்ற ஸ்மார்ட்போன்.

இந்த கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனை வெளியிட்ட சாம்சங் நிறுவனம், இப்போது புதிய கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதம் அறிமுகமாகலாம்.

கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் 5.3 இஞ்ச் திரை வசதியினை கொண்டது. இந்த புதிய கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனையும் விட கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போன் பெரிய திரையை கொண்டதாக இருக்கும் என்று நாடி துடிப்பை அதிகமாக்கும் தகவல்களும் வெளியாகி உள்ளன.

கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனில் 8 மெகா பிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டிருந்தது. கேமரா வசதியில் கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போன், கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனை மிஞ்சும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போன் 12 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டதாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேஷன் கொண்டதாகவும் இருக்கலாம்.

இப்படி பல எதிர்பார்ப்புகளை உள்ளடக்கியதாக இந்த கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போன் உள்ளது. இந்த எதிர்பார்ப்புகள் பற்றிய அதிகார பூர்வமான தகவல்கள் இன்னும் ஏதும் வெளியாகவில்லை. இங்கே கூறியது போல அக்டோபர் மாதம் இந்த ஸ்மார்ட்போன் வெளியானால், இதன் தொழில் நுட்ப விவரங்கள் மற்றும் விலை பற்றிய தகவல்களும் வெளியாகும்.

Story first published:  Wednesday, June 20, 2012, 15:52 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll