ரூ.6890-ல் சாம்சங் அறிமுகப்படுத்தியுள்ள 4G ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் 4G ஸ்மார்ட்போனை மிகக்குறைந்த விலையில் அதாவது வெறும் ரூ.6890ல் அறிமுகம் செய்துள்ளது.

By Siva
|

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் 4G ஸ்மார்ட்போனை மிகக்குறைந்த விலையில் அதாவது வெறும் ரூ.6890ல் அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் J1 என்று கூறப்படும் இந்த மொபைல் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.6890-ல் சாம்சங் அறிமுகப்படுத்தியுள்ள 4G ஸ்மார்ட்போன்

இந்த புதிய மாடல் ஸ்மார்ட்போன் இந்தியா முழுவதிலும் உள்ள சாம்சங் ரீடெயில் கடைக்கும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாம்சங் நிறுவனத்தின் இணையதளத்தி இந்த ஸ்மார்ட்போன் கோல்ட், கருப்பு மற்றும் வெள்ளை என மூன்று நிறங்களில் கிடைக்கும் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அறிமுகம் : ஆண்ட்ராய்டு நோக்கியா 6, என்ன விலை, என்னென்ன சிறப்பம்சங்கள்?

இந்த சாம்சங் J1 4G ஸ்மார்ட்போன் புதிய அறிமுகம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த மாடல் ரஷ்யா மற்றும் துபாயில் கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சாம்சங் J1 4G ஸ்மார்ட்போன் 4.5 இன்ச் சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளேவை கொண்டது. மேலும் 1.3 GHz குவட்கோர் SoCஐயும் கொண்டது. எக்ஸினோஸ் 3475 சிப்செட்டை கொன இந்த சாம்சங் J1 4G ஸ்மார்ட்போன், 1GB ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1.1 தன்மையை கொண்டது. மேலும் இதில் டூயல் சிம் வசதியும் உண்டு.

வெறும் ரூ.5,553/-க்கு 3000எம்ஏஎச் பேட்டரி கொண்ட 4ஜி ஸ்மார்ட்போன்.!

இந்த சாம்சங் J1 4G ஸ்மார்ட்போன், இதற்கு முந்தைய மாடலை போலவே 5MP பின் கேமிராவை கொண்டது. மேலும் இந்த கேமிராவில் LED பிளாஷ் உள்ளது. 2MP செல்பி கேமிரா கொண்ட இந்த போனின் இண்டர்னல் ஸ்டோரேஜ் 8GB என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் ஸ்டோரேஜை அதிகரித்து கொள்ளலாம்

4G சப்போர்ட் செய்யும் இந்த சாம்சங் J1 4G ஸ்மார்ட்போனின் பேட்டரி 2050mAH பவர் கொண்டது. மேலும் ஜிபிஆர்எஸ், 3G, வைபை, புளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகியவை இதில் உள்ளது.

Source

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Samsung launches budget smartphone Galaxy J1 (4G) in India.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X