ஜியோவின் அடுத்த புரட்சி உங்கள் மொபைல் நம்பரில்.!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திடம் வேறு புரட்சிகள் கைவசம் இருப்பது போல தெரிகிறது. இதனால் நமக்கென்ன லாபம்.?

|

வரம்பற்ற டேட்டா மற்றும் வாய்ஸ் சேவைகளை வழங்கி இந்தியா தொலைத்தொடர்பு துறையில் ஒரு விலைக்குறைப்பை ஏற்படுத்திய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் டிடிச் வெளியாகும் என அனைவரும் காத்துக்கொண்டிருக்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திடம் வேறு புரட்சிகள் கைவசம் இருப்பது போல தெரிகிறது.!

இலவச டேட்டா, வாய்ஸ் கால்கள் என இலவச சேவைகளை ஏற்கனவே அற்புதமான முறையில் வழங்கும் ஆர் ஜியோ நிறுவனத்திடம் இதற்கு மேல் செய்ய என்ன இருக்கிறது.? என்ற பொதுவான கேள்விக்கு பதில் இதோ.!

'6' எனத்தொடங்கும் மொபைல்

'6' எனத்தொடங்கும் மொபைல்

இந்திய தொலைத் தொடர்பு துறையிக்குள் சமீபத்திய நுழைவான ரிலையன்ஸ் ஜியோ அதன் புதிய பயனர்களுக்கான மொபைல் எண்கள் ஒதுக்க அனுமதி பெற்றுள்ளதாக தெரிகிறது. அதாவது '6' எனத்தொடங்கும் மொபைல் எண்கள்.!

முதல் முறையாக

முதல் முறையாக

தொலைத் தொடர்புத் துறை (dot) ஆனது இதுபோன்றதொரு அனுமதியை முதல் முறையாக ரிலையன்ஸ் ஜியோவிற்கு மட்டுமே வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 6-சீரிஸ் எம்எஸ்சி (மொபைல் நிலைமாற்றம் குறியீடு) தொலைபேசி எண்களை வெளியிடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தமிழ்நாட்டில்

தமிழ்நாட்டில்

அசாம், ராஜஸ்தான், மற்றும் தமிழ்நாட்டில் இந்த 6 தொடர் எம்எஸ்சி குறியீடுகள் வழங்கப்பட உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ கூற்றின்படி ராஜஸ்தானில் 60010-60019 என்ற எம்எஸ்சி குறியீடுகளும், அசாமில் 60020-60029 என்ற எம்எஸ்சி குறியீடுகளும் மற்றும் தமிழ்நாட்டில் 60030-60039 எம்எஸ்சி குறியீடுகளும் கிடைத்துள்ளது.

7, 8-தொடர் எம்எஸ்சி குறியீடு

7, 8-தொடர் எம்எஸ்சி குறியீடு

மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் 7-தொடர் எம்எஸ்சி குறியீடுகளும், கொல்கத்தா மற்றும் மகாராஷ்டிராவில் 8-தொடர் எம்எஸ்சி குறியீடுகளும் பெற்றுள்ளது.

முன்னோக்கி செல்லமுடியும்

முன்னோக்கி செல்லமுடியும்

இந்த 6-தொடர் மொபைல் எண்களை அறிமுகம் செய்வதின் மூலம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தினால் திறம்பட மாநிலங்களை அடிப்படையாக கொண்ட சேவைகளில் முன்னோக்கி செல்லமுடியும்.

விளக்கம்

விளக்கம்

மேலும் ரிலையன்ஸ் ஜியோ அறிக்கையானது "இன்னும் ஒரு மில்லியன் புதிய சந்தாதாரர்களின் தேவையை பூர்த்தி செய்யவே இந்த திட்டம்" என்றும் விளக்கம் அளித்துள்ளது.

இதுவரை 9, 8, மற்றும் 7 தொடரில்

இதுவரை 9, 8, மற்றும் 7 தொடரில்

இந்திய தொலை தொடர்பு துறையில், ஆப்ரேட்டர்களுக்கு இதுவரை 9, 8, மற்றும் 7 தொடரில் மொபைல் எண்கள் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நுழைவு மற்றும் அதன் இலவச தரவு மற்றும் குரல் சலுகைகள் ஆகியவைகள் இணைந்து சந்தாதாரர்களுக்கு புதிய மொபைல் எண்களை பெற்று கொடுத்துள்ளது என்றே கூறலாம்.

சராசரி 600,000 சந்தாதாரர்கள்

சராசரி 600,000 சந்தாதாரர்கள்

செப்டம்பர் 5-ஆம் தேதி தன்னுடைய நடவடிக்கைகளை ஆரம்பித்த ரிலையன்ஸ் ஜியோ 50-மில்லியன் சந்தாதாரர்கள் என்ற மைல்கல்லை 83 நாட்களில் கடந்தது மற்றும் டிசம்பர் 31,2016 கணக்கின்படி 72.4 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டுள்ளது உடன் நாள் ஒன்றிற்கு சராசரி 600,000 சந்தாதாரர்களை தனதாக்கி கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.!

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜியோ டிடிஎச் சேவை ரெடி.! நீங்க ரெடியா.?

Best Mobiles in India

English summary
Reliance Jio May Soon Give Users Mobile Numbers Starting With '6'. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X