ஸ்மார்ட்போனுடன் வைரங்கள் வேண்டுமா? புரோட்ரூலி டார்லிங் மாடலை செலக்ட் செய்யுங்கள்

தற்போதைய ஸ்மார்ட்போன் சந்தையில் மிகப்பெரிய போட்டி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனங்களும் புதிய வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க புதுப்புது ஐடியாக்களின் உதவியால் தயார் செய்து வரும் ஸ்மார்ட்போன்களால் வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான ஸ்மார்ட்போன்கள் கிடைத்து வருகிறது

ஸ்மார்ட்போனுடன் வைரங்கள் வேண்டுமா? புரோட்ரூலி டார்லிங் மாடலை செலக்ட்

முன்னணி நிறுவனங்களான சியாமி மி நிறுவனம் தங்களது ஸ்மார்ட்போன்களை செராமிக் மெட்டல்களிலும், எல்ஜி நிறுவனம் தனது G5 மாடலுக்காக வித்தியாசமான மாடுலர் டிசைனிலும் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகின்றன. ஆனால் இந்த மாடல்களில் பெரும் வித்தியாசம் ஒன்றும் இல்லை.

நீங்களும் செய்யலாம் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.!

இந்த நிலையில் சீனாவின் இன்னொரு ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான புரோட்ரூலி (ProTruly) ஒரு வித்தியாசமான மாடல் ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புரோட்ரூலி டார்லிங் என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த புதிய டிசைன் உலகின் முதல் 360 டிகிரி பின் கேமிரா வசதியுடன் உள்ள போன் ஆகும்.

மேலும் இந்த போனின் கேமிரா அருகே சில வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் உலகின் முதல் VR வகை ஸ்மார்ட்போன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
360 டிகிரி மீன்கண் லென்ஸ் உடைய போன்:

360 டிகிரி மீன்கண் லென்ஸ் உடைய போன்:

புரோட்ரூலி டார்லிங் மாடல் ஸ்மார்ட்போனில் 13 MP திறனில் இரண்டு கேமிராக்கள் பின்பக்கம் உள்ளது. இதன் மீன்கண் லென்ஸ் மூலம் 360 டிகிரியில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்யலாம்.

மேலும் இதன் மூலம் 360 டிகிரி புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து அப்படியே ஃபேஸ்புக் மற்றும் யுடியுபில் அப்லோட் செய்யும் வசதியும் உண்டு. மேலும் இந்த புரோட்ரூலி டார்லிங் மாடல் ஸ்மார்ட்போனில் 8MP செல்பி கேமிராவும் உள்ளது. இதில் அமைந்துள்ள VR கேமிரா மோட் இதுவரை ஏற்படுத்தியிராத அனுபவங்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும்

போனில் கிடைக்கும் நான்கு வைரங்கள்

போனில் கிடைக்கும் நான்கு வைரங்கள்

இந்த புரோட்ரூலி டார்லிங் மாடல் ஸ்மார்ட்போனின் ஹைலைட் என்னவெனில் பின்பக்க கேமிரா அருகில் நான்கு வைரங்கள் லெதர் க்ரிப்பில் பதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு விதங்களில் வெளிவரும் டார்லிங் போன்

இரண்டு விதங்களில் வெளிவரும் டார்லிங் போன்

இந்த புரோட்ரூலி டார்லிங் மாடல் ஸ்மார்ட்போனில் இரண்டு விதங்களில் வெளியாகவுள்ளது. முதல் மாடலான ஸ்டாண்டர்ட் மாடல் ரூ.40000 விலையில் கிடைக்கும்,. இரண்டாவது மாடலான ஹை எண்ட் மாடல் ரூ.87000 விலையில் கிடைக்கும்.

இரண்டு மாடல்களிலும் பிங்கர் பிரிண்ட் சென்சார் இருந்தாலும் முதல் மாடலில் மேனுவல் ஹோம் பட்டனிலும், இரண்டாவது மாடலில் பின்பக்கம் உள்ள கேமிரா அருகிலும் பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது. மேலும் இந்த போனில் உள்ள தெர்மல் சென்சார் மனிதனின் உடல் வெப்பத்தை அறிய உதவும்

மேலும் என்னென்ன சிறப்புகள்?

மேலும் என்னென்ன சிறப்புகள்?

மேலும் இந்த புரோட்ரூலி டார்லிங் மாடல் ஸ்மார்ட்போனில் உள்ள ஹார்ட்வேர் பொருட்களை பார்த்தால், இந்த போன் 5.5 இன்ச் FHD 1080P அமோ எல்.இ.டி டிஸ்ப்ளேவை கொண்டது. அதுமட்டுமின்றி மெடியாடெக் ஹீலியோ X20 டெக்காகோர் SoC வகையை கொண்டது.

4 GB ரேம் மற்றும் 64 GB இண்டர்னல் மெமரியை கொண்ட இந்த போனில் ஆண்ட்ராய்ட் 6.0 ஓஎஸ் உள்ளது. மேலும் இந்த போனின் பேட்டரி 3560 mAh திறனில் உள்ளது

எங்கு கிடைக்கும்?

எங்கு கிடைக்கும்?

இப்போதைக்கு இந்த போன் சீனாவில் மட்டுமே கிடைக்கும். சீனாவை தாண்டி வெளிநாடுகளில் இந்த போன் வரும் நவம்பர் முதல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
ProTruly Darling is the first VR smartphone featuring a diamond studded body and 360-degree camera inbuilt. Get to know the facts from here.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்