செப்டம்பர் மாதத்தில் பவர்புல் ஸ்மார்ட்போன்கள்!!!

Written by:

செப்டம்பர் மாதம் மொபைல் உலகிற்க்கு முக்கியமான மாதமாக இருக்கும் எனலாம். ஏனென்றால் பல முன்னனி மொபைல் நிறுவனங்கள் தங்களது புதிய படைப்புகளை அடுத்த மாதம் வெளியிட மும்முரமாக உள்ளனர்.

சோனி நிறுவனம் எக்ஸ்பீரியா Z அல்ட்ரா என்ற பெரிய ஸ்கிரீனை கொண்ட மொபைலை அண்மையில் வெளியிட்டது. இப்பொழுது இந்நிறுவனம் சிறந்த கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை வெளியிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஏனென்றால் நோக்கியா, சாம்சங் போன்ற நிறுவனங்கள் அதிக மெகாபிக்சல் கேமரா கொண்ட போன்களை வெளியிட்டுள்ளன. நோக்கியா நிறுவனம் 41மெகாபிக்சல் கேமரா கொண்ட லூமியா 1020 ஸ்மார்ட்போனை நியூயார்க்கில் வெளியிட்டது என்பது குறிப்பிடதக்கது.

ஆப்பிள் நிறுவனமும் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி ஐபோனின் அடுத்த படைப்பாக ஐபோன்5Sயை வெளியிடும் என தெரிகிறது. இதனுடன் குறைந்த விலை ஐபோனான ஐபோன்5cம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் நிறுவனம் அடுத்த மாதம் கேல்க்ஸி நோட்3யை வெளியிடும் என தெரிகிறது. அடுத்த மாதம் வர இருக்கும் முன்னனி நிறுவனங்களின் பவர்புல் ஸ்மார்ட்போன்களை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

புதிய ஸ்மார்ட்போன் கான்ஷெப்ட் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

பவர்புல் ஸ்மார்ட்போன்

 

எக்ஸினோஸ் 5 ஆக்டா பிராசஸர், 4.3ஜெல்லிபீன் ஓஎஸ், 3ஜிபி ராம், 13மெகாபிக்சல் கேமராவுடன் கேலக்ஸி நோட்3 வெளிவரும் என்று சில வதந்திகள் உள்ளன.

 

பவர்புல் ஸ்மார்ட்போன்

 

சோனி நிறுவனத்தின் அதிக மெகாபிக்சல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனாக சோனி எக்ஸ்பீரியா Z1 வெளிவரும் என தெரிகிறது. இது 20மெகாபிக்சல் கேமரா கொண்டிருக்கிறது என தகவல் அண்மையில் வெளிவந்தது.

 

பவர்புல் ஸ்மார்ட்போன்

 

ஹச்டிசி ஒன் மேக்ஸ் கிட்டதிட்ட ஹச்டிசி ஒன் போலவே இருக்கும் ஆனால் ஸ்கிரீன் சைஸ் 5.9இன்ஞ் கொண்டிருக்கும் என தெரிகிறது.

 

பவர்புல் ஸ்மார்ட்போன்

 

 

ஐபோனில் ஆப்பிளின் புதிய ஓஎஸ் ஆன ஐஓஎஸ் 7 வெளிவரும் என தெரிகிறது.

 

பவர்புல் ஸ்மார்ட்போன்

 

பிளாக்பெரி நிறுவனம் பெரிய ஸ்கிரீன்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட்டதில்லை அதனால் இந்த மொபைல் 5இன்ஞ் டிஸ்பிளே உடன் வரும் என தெரிகிறது.

 

பவர்புல் ஸ்மார்ட்போன்

 

லினோவா K910 ஆன்டிராய்டின் புதிய ஓஎஸ் கொண்டு வெளிவரலாம். மேலும் இதில் 2.2GHZ பிராசஸர் இருக்கும் என இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளன.

படங்கள்: ஜிஎஸ்ம் அரீனா

 

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Write Comments
Please read our comments policy before posting

Social Counting

Opinion Poll