Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

மொபைல்போனுக்கான மினி சார்ஜர்.. அங்கே இங்கே ஓடவேண்டாம்!

Updated: Monday, March 25, 2013, 20:44 [IST]

portronics launches portable device charger

தற்போது உலக அளவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் பொருள் எது என்று பார்த்தால் அது மொபைல் போனாகத்தான் இருக்கும். அந்த அளவிற்கு மொபைல் போன் மற்றும் டேப்லெட் ஆகியவை அதிமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதோடு அதன் பயன்பாடும் அதிகரித்து வருகின்றன.

இதில் இருக்கும் ஒரு சிறிய குறைபாடு என்னவென்றால் மொபைலில் இருக்கும் சார்ஜ் தீர்ந்துவிட்டால் வீட்டிற்கு ஒட வேண்டும். அல்லது அருகாமையில் இருக்கும் சார்ஜ் அளிக்கும் கடைகளுக்குச் செல்ல வேண்டும். ஆனால் இந்தக் குறையை நீக்குவதற்காக போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஒரு சிறிய மொபைல் சார்ஜைரை களமிறக்கி இருக்கிறது.

இந்த சார்ஜருக்கு சார்ஜ் எக்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. சிறிய வடிவில் இருக்கும் எந்த சார்ஜரை வெளியில் போகும் போது எளிதாக எடுத்தச் செல்ல முடியும்.

இந்த சார்ஜ் எக்ஸில் 5600 எம்ஏஎச் லித்தியம் பாலிமர் பேட்டரி இருக்கிறது. அதோடு இதில் 2 யுஎஸ்பி போர்ட்டுகளும் உள்ளன. அதனால் ஒரே நேரத்தில் இரண்டு மொபைல் அல்லது இரண்டு டேப்லெட்டுகளுக்கு இந்த சாதனத்தின் மூலம் ரீசாரஜ் செய்ய முடியும்.

குறிப்பாக இந்த சார்ஜ் எக்ஸில் மொபைல்கள், டேப்லெட்டுகள், கேமிங் சாதனங்கள், ப்ளூடூத் சாதனங்கள், சிறிய ஸ்பீக்கர்கள் மற்றும் ஜிபிஎஸ் சாதனங்களுக்கு சார்ஜ் செய்ய முடியும்.

மேலும் இந்த சார்ஜ் எக்ஸ் 11 மணி நேர சார்ஜ் வழங்கும் திறனையும் கொண்டது. இதை ரூ.3000க்கு வாங்கலாம்.

Story first published:  Friday, July 13, 2012, 11:10 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll