பானாசோனிக் பி88 : மூன்று எல்இடி ப்ளாஷ், மற்றும் 4ஜி ஆதரவுடன் வெறும் ரூ.9,290/-க்கு.!

மூன்று எல்இடி ப்ளாஷ், முன்பக்க ப்ளாஷ் மற்றும் 4ஜி எல்டிஇ ஆதரவுடன் பானாசோனிக் அதன் பி88 கருவியை அறிமுகம் செய்துள்ளது.

Written By:

நீங்கள் எப்போதாவது ஒரு ஸ்மார்ட்போனிற்கு இரண்டு எல்இடி பிளாஷ்கள் போதுதுமானதாக இல்லை என்று நினைத்தது உண்டா.? உங்கள் எதிர்பார்ப்பு சரிதான். உங்களை போன்றவர்களுக்கு வானமே எல்லை உடன் பானாசோனிக் பி88 கருவியும் உங்களுக்கான ஒரு பதிலாய் இருக்க முடியும்.

கடந்த புதன்கிழமை (நேற்று) பானாசோனிக் அதன் மூன்று எல்இடி ப்ளாஷ் 13 மெகாபிக்சல் பின்புற கேமிரா கொண்ட அதன் புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ரூ.9,290 என்ற விலைக்கு கிடைக்கும் இக்கருவிஇந்த மிகவும் அழகான அம்சமாக அதன் "தனிப்பட்ட" ப்ளாஷ் திகழ்கிறது. முன்பக்கம் உள்ள 5 மெகாபிக்சல் கேமிராவிற்கு துணையான ஒரு ஒற்றை எல்இடி ப்ளாஷ் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பி88 கருவி கொண்டுள்ள சிறப்பம்சங்கள் பற்றி விவரமாக காண்போம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

டிஸ்ப்ளே

உலோக அமைப்பு கொண்ட இக்கருவியின் அளவீடுகள் 8.35எம்எம் மற்றும் 156 கிராம் எடை ஆகும். இக்கருவியின் 5.3 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே ஆனது ஒரு 2.5டி கர்வுடு கிளாஸ் கொண்டு முழுமையடைகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஆண்ட்ராய்டு

உடன் இக்கருவி ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ மென்பொருள் கொண்டு இயங்கும், ஆனால் இந்த ஸ்மார்ட்போன் ஸ்டாக் இன்டர்பேஸ் அலல்து அல்லது செயில் யூஐ பயன்படுத்துவதை தொடருமா என்பது தெளிவில்லாமல் இருக்கிறது. இது முன் நிறுவப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு தொலைபேசியாக உள்ளது.

சேமிப்பு திறன்

பானாசோனிக் பி88 கருவியானது 2 ஜிபி ரேம் கொண்ட 1.25ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர் செயலி மூலம் இயங்குகிறது. இதன் உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு திறன் 16ஜிபி மற்றும் மைக்ரோ எஸ்டி கார்ட் வழியாக 128ஜிபி வரையிலாக நீட்டிக்கும் வசதியும் கொண்டுள்ளது.

இரண்டு வகை

இரட்டை சிம் கார்டு மற்றும் 4ஜி ஆதரவு கொண்ட இக்கருவி தங்கம் மற்றும் கரி சாம்பல் என இரண்டு வகையான வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

பேட்டரி திறன்

இணைப்பு விருப்பங்கள் துறையை பொருத்தவரை 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் எப்எம் ரேடியோ ஆகிய ஆதரவை இக்கருவி வழங்குகிறது. உடன் இந்த ஸ்மார்ட்போன் ஒரு 2600எம்ஏஎச் பேட்டரி திறன், ஒரு கைரேகை சென்சார் ஆகியவைகளை கொண்டுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
Panasonic launches P88 with triple LED flash, front flash and 4G LTE support. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்