ஒப்போவின் புதிய 5எக்ஸ் ஸ்மார்ட்போன் போட்டோகிராஃபி டெக்னலாஜி.!

இந்த புதிய தொழில்நுட்பமானது முன்போல் அல்லாது மிகவும் விரிவான படங்களை கைப்பற்றும் திறனை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

|

இம்மாத இறுதியில் பார்சிலோனாவில் நடைபெறும் மொபைல் வேர்லட் காங்கிரஸ் 2017 நிகழ்வில் ரோபோ நிறுவனம் அதன் புதிய 5எக்ஸ் ஸ்மார்ட்போன் புகைப்பட தொழில்நுட்பத்தை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஒப்போவின் இந்த புதிய தொழில்நுட்பமானது முன்போல் அல்லாது மிகவும் விரிவான படங்களை கைப்பற்றும் திறனை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்போ நிறுவனத்தின் புதிய திட்டம் பற்றிய மேலும் விவரங்கள் இப்போதைக்கு எதுவும் வெளியாகவில்லை என்பதும், சமரசம் இன்றி இடைவிடாத உலக ஸ்மார்ட்போன் போட்டோகிராஃபி எப்படி அமைய வேண்டும் என்பதில் ஒரு குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப முன்னேற்ற பங்களிப்பை ஒப்போ அளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இமேஜிங் தொழில்நுட்பம்

இமேஜிங் தொழில்நுட்பம்

ஒப்போ நிறுவனத்தின் இந்த '5எக்ஸ்' திட்டம் ஸ்மார்ட்போன் உலகின் அடுத்த 'திருப்புமுனை ஸ்மார்ட்போன் தொழில்நுட்பமாக' இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "இந்த குறிப்பிடத்தக்க சாதனை ஒரு விரிவான ஸ்மார்ட்போன் இமேஜிங் தொழில்நுட்பம் நிபுணத்துவத்தின் விளைவாக ஏற்பட்டுள்ளது என்பது வெளிப்படை.!

செல்பீ ஸ்பெஷலிஸ்ட்

செல்பீ ஸ்பெஷலிஸ்ட்

ஒப்போ நிறுவனத்தின் சமீபத்திய கவனம் முழுதும் செல்பீ கேமரா மீதே இருந்து வருகிறது. அதற்கு சான்றாக ஒப்போ நிறுவனம் அதன் செல்பீ ஸ்பெஷலிஸ்ட் எப் தொடர் ஸ்மார்ட்போன்களை 2016-ல் தொடங்கியது.

பியூட்டிப்பை 4.0

பியூட்டிப்பை 4.0

ஒப்போவின் எப்1 ப்ளஸ் கருவி ஒரு 16எம்பி முன்பக்க கேமரா மற்றும் நிறுவனத்தின் அழகுபடுத்தல் மென்பொருளான பியூட்டிப்பை 4.0 கொண்டு வெளியானதும், முன்போல் அன்றி ஒப்போ அக்கருவிகளில் முன் நிறுவப்பட்ட அழகுபடுத்தல் அம்சம் 2012-ல் இருந்து வழங்க தொடங்கியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

78.4 மில்லியன் போன்கள்

78.4 மில்லியன் போன்கள்

சர்வேதேச டேட்டா கார்பரேஷன் (ஐடிசி) நிறுவனத்தின் சந்தை ஆராய்ச்சியின்படி, 2016-ன் காலாண்டில் சீனாவில் இருந்து 78.4 மில்லியன் போன்களை ஒப்போ ஷிப்பிங் செய்துள்ளது. இது 2015-ல் அனுப்பப்பட்டதை விட ((35.4 மில்லியன்) இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

அசுஸ் அதிரடி : இனி இன்டெக்ஸ், லாவா & மைக்ரோமேக்ஸ் காலி.!

Best Mobiles in India

English summary
Oppo to unveil its new ‘5x’ smartphone photography technology at MWC. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X