அறிமுகம் : ஒப்போ ஆர்11 மற்றும் ஆர்11 பிளஸ் (அம்சங்கள்).!

ஆர்9 மற்றும் ஆர்9ம் ப்ளஸ் ஆகிய இரண்டு சாதனங்க ளின் வெற்றியை தொடர்ந்து ஆர்11 மற்றும் ஆர்11 பிளஸ் என்ற இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளன.

|

ஒப்போ நிறுவனம் அதன் ஆர் தொடரில் இரண்டு புதிய தலைமை ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒப்போ நிறுவனத்தின் ஆர்9 மற்றும் ஆர்9ம் ப்ளஸ் ஆகிய இரண்டு சாதனங்க ளின் வெற்றியை தொடர்ந்து ஆர்11 மற்றும் ஆர்11 பிளஸ் என்ற இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளன.

இந்த தா இரண்டு கருவிகளின் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் வரும் நாட்களில் சீனாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டத்தில், சர்வதேச சந்தைகளில் கிடைப்பது பற்றிய விவரங்களும் தெரியவில்லை.

டிஸ்பிளே

டிஸ்பிளே

குறிப்புகள் அடிப்படையில், ஒப்போ ஆர் 11 பிளஸ் 1920 × 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஒரு 6 அங்குல முழு எச்டி அமோஎல்இடி டிஸ்பிளே கொண்டுள்ளது. இது ஒரு ஸ்னாப்டிராகன் 660 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

ரேம்

ரேம்

6 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டுள்ள இக்கருவி ஒரு மைக்ரோஎஸ்டி அட்டை ஸ்லாட் வழியாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் வழங்குகிறது. ஆர்11 பிளஸ் விஓஓசி (VOOC)ஓ பாஸ்ட்-சார்ஜ் செய்யும் ஆதரவுடனான ஒரு 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. இது 30 நிமிங்களில் 75 சதவீதத்திற்கு தொலைபேசியை சார்ஜ் செய்யும் என்று நிறுவனம் கூறுகிறது.

பேட்டரி

பேட்டரி

மறுபுறம் ஆர்11 ஆனது 1920 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஒரு சிறிய 5.5 அங்குல முழு எச்டி அமோ எல்இடி டிஸ்பிளே கொண்டுள்ளது. ஸ்னாப்ட்ராகன் 660 செயலி மூலம் இயங்கும் இக்கருவி 4 ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பு மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு உடனான 2990எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

கேமரா

கேமரா

ஒப்போ ஆர்11 மற்றும் ஆர்11 பிளஸ் ஆகிய இரண்டும் ஒரே மாதிரியான கேமரா அம்சங்கள் கொண்டுள்ளது. அதாவது பரந்த கோண லென்ஸ் கொண்ட 16 மெகாபிக்சல் ரியர் கேமரா உடனான 20எம்பி வைட் அங்கிள் லென்ஸ் கேமரா கொண்டுள்ளது மற்றும் 20 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டது. ஐபோன் 7 பிளஸ்ஸில் காணப்படும் போர்ட்ரெயிட் பயன்முறையை இந்த சாதனம் வழங்குகிறது.

இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில் இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 4.2 மற்றும் ஜிபிஎஸ் அடங்கும். மற்றும் இரண்டு சாதனங்களுமே ஆண்ட்ராய்ட் 7.1 நௌவ்கட் அடிப்படையிலான கலர் ஓஎஸ் 3.1 கொண்டு இயங்குகின்றன.

7.9 சதவீதம் சந்தையில் பங்கு

7.9 சதவீதம் சந்தையில் பங்கு

ஒப்போ தற்போது உலகின் நான்காவது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனமாக உள்ளது (அதாவது சாம்சங், ஆப்பிள் மற்றும் ஹூவாய் ஆகியவற்றின் பின்னால்) ஐடிசி படி, க்யூ7 2017-இல், ஒப்போ 7.9 சதவீதம் சந்தையில் பங்கு கைப்பற்றியுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Oppo R11 and R11 Plus with Snapdragon 660 SoC, dual rear camera setup announced. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X