எந்த சமரசமும் இல்லை : இது விலைக்கு ஏற்ற தலைமை ஸ்மார்ட்போன்.!

ஒப்போ எப்3 ப்ளஸ் வெறுமனே செல்பீக்கான ஸ்மார்ட்போன் மட்டுமல்ல.!

|

ஒப்போ நிறுவனம் அதன் அடுத்த பிளாக்ஷிப் கருவியான எப்3 ப்ளஸ் ஸ்மார்ட்போனை முன்னெடுத்துள்ளது. இந்த கைபேசியில் ஒரு 16எம்பி முதன்மை மற்றும் கூடுதல் அளவிலான செல்பீக்களை படமெடுக்கும் இரண்டாம் நிலை 120 டிகிரி வைட் ஆங்கிள் லென்ஸ் உள்ளது. முக்கியமாக இதன் முன்பக்க இரட்டை கேமரா அமைப்பானது ஒப்போ செல்பீ கவன குடும்பத்தின் ஒரு மேம்படுத்தப்பட்ட கருவி என்பதில் சந்தேகமில்லை மறுபக்கம் ஒப்போ எப்3 ப்ளஸ் வெறுமனே செல்பீக்கான ஸ்மார்ட்போன் மட்டுமல்ல என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.!

உண்மையில் சொல்லப்போனால் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையில் எந்த விதமான அம்சங்கள் சார்ந்த சமரசமும் செய்துகொள்ளாத ஒரு கருவி என்று இதை கூறலாம். நாடு முழுவதும் ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் ஸ்னாப்டீல் ஆகிய இ-காமர்ஸ் தளங்களில் மற்றும் ஒப்போ கடைகளில் கிடைக்கும் இந்த கருவி தன்னுள் அப்படி என்னென்ன சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது என்பதை நீங்களே பாருங்களேன்.!

தொடுதிரை காட்சி

தொடுதிரை காட்சி

ஒப்போ எப்3 ப்ளஸ் ஸ்மார்ட்போன் ஆனது மார்ச் 2017-ல் தொடங்கப்பட்ட ஒரு தொலைபேசியாகும். 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஒரு 6.00 அங்குல தொடுதிரை காட்சி கொண்டுள்ள இக்கருவி இந்தியாவில் ரூ. 30,990/- என்ற விலை நிர்ணயம் கொண்டு அறிமுகமாகியுள்ளது. 1.95ஜிகாஹெர்ட்ஸ் அக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 652 செயலி மூலம் இயக்கப்படும் இந்த கருவி 4ஜிபி ரேம் மற்றும் மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 256ஜிபி நீட்டிக்கக்கூடிய ஆதரவு உடன் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பும் கொண்டுள்ளது.

கேமரா

கேமரா

இக்கருவிகள் சிறப்பம்சங்களான கேமராக்களை பொறுத்தவரை, ஒப்போ எப்3 ப்ளஸ் கருவி 16 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் செல்பீகளுக்கான ஒரு 16 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டுள்ளது.

இரட்டை செல்பீ கேம்

இரட்டை செல்பீ கேம்

ஒப்போ அதன் செல்பீ எக்ஸ்பெர்ட் கருவியான எப்3 ப்ளஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது. ஒரு வைட் ஆங்கிள் மற்றும் ஒரு நிலையான லென்ஸ் என இரட்டை செல்பீ கேம் கொண்ட இக்கருவி நிச்சயமாக உங்களை ஒரு செல்பீ நிபுணர் ஆக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

பீல்ட்-ஆப் -வியூ

பீல்ட்-ஆப் -வியூ

டூவல் செல்பீ கேமராவின் நிலையான லென்ஸ் ஆனது ஒரு வழக்கமான ஒப்போ முன்பக்க கேமரா போலவே தெளிவான ஆழம் மற்றும் சப்தம் குறைப்பு ஆகிய விடயத்தில் கவனம் செலுத்த அதன் இரண்டாவது வைட் ஆங்கிள் லென்ஸ் ஆனது பெரிய பீல்ட்-ஆப் -வியூ விடயத்தில் கவனம் செலுத்துகிறது. இந்த தனிப்பட்ட செல்பீகளுக்கான டூவல் குழு ஒரு விசேடமாக வடிவமைக்கப்பட்ட செல்பீ கேமரா என்பதில் சந்தேகமே வேண்டாம்.

பியூடிப்பை 4.0 ஆப்

பியூடிப்பை 4.0 ஆப்

வரவிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் கேமராவில் பியூடிப்பை 4.0 ஆப் பொருத்தப்பட்டே வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் செல்பீகளை கையாளும் போது, தொனி அனுசரிப்பு, நிழல்கள் மற்றும் தெளிவான ஒளி முக வரையறைகள் ஆகிய விடயங்களில் கவனம் செலுத்தப்படும். செல்பீக்களில் மிகவும் தவிர்க்க முடியாத ஒரு மென்பொருள் அம்சமான பியூட்டிப்பை ஆனது பிரகாசமான, தெளிவான தோல், தெளிவான கண்கள் போர்னா செல்பீக்களுக்கான அடிப்படை விடயங்களை உயர்த்தும்.

செல்பீ பனோரமா

செல்பீ பனோரமா

இந்த அம்சம் மூலம் உங்கள் குரூப் செல்பீயில் யாரையும் தவர விட முடியாது. முதலில் இதன் முன்பக்க வைட் ஆங்கிள் லென்ஸ் ஆனது அனைவரையும் ப்ரேமில் கொண்டுவர உதவும் இரண்டாவதாக ஒரு பரந்த அளவிலான மூன்று புகைப்படங்களை இணைக்கின்ற உள்ளமைக்கப்பட்ட 'செல்பீ பனோரமா' அம்சம் உங்களின் க்ரூப் செல்பீயை வேறு ஒரு கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

ஸ்க்ரீன் பிளாஷ்

ஸ்க்ரீன் பிளாஷ்

வரவிருக்கும் ஒப்போ எப்3 ப்ளஸ் கேமராவில் மேம்படுத்தப்பட்ட ஸ்க்ரீன் ப்ளாஷ் அம்சம் உள்ளது. இதன்மூலம் செல்பீக்களின் ஒளி நிலைமைகள் பிரகாசமாக இருக்கும். உடன் ஒப்போ சில செம்மைப்படுத்த ஸ்கிரீன் பிளாஷ் ஆனது தானாகவே பிரைட்னஸ் லெவல் மற்றும் சுற்றுசூழல் ஆகியவைகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளும்.

பால்ம் ஷட்டர்

பால்ம் ஷட்டர்

செல்பீக்களின் பொது ஷட்டர் பொத்தானை சரியாக 'ஷேக்' இல்லாமால் அழுத்துவது என்பது ஒரு கடினமான வேலையாகும். அதற்காகவே நீங்கள் ஒரு ஷாட்டை மங்கலான காரணத்தால் பல முறை எடுக்க நேரிடும். அதற்கான ஒரு எளிமையான தீர்வுதான் பால்ம் ஷட்டர். இந்த அம்சம் மூலம் நீங்கள் கேமரா முன் உங்கள் கையை அசைப்பது மூலம் ஆட்டோமேட்டிக் செல்பீ கவுண்டவுனை தொடங்க முடியும்.

ரியர் கேமரா

ரியர் கேமரா

செல்பீயில் பல்வேறு பில்டர்கள் மற்றும் வாட்டர்மார்க்குகள், முடிவற்ற படைப்பாற்றல் மற்றும் வேடிக்கைகளை அனுமதிக்கும் ஒப்போ எப்3 ப்ளஸ் கருவியானது அதன் ரியர் கேமராவிலும் அதிக கவனம் செலுத்துகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 16எம்பி பின்புற கேமரா இந்த உலகின் சிறந்த படங்களை கைப்பற்ற உறுதி செய்கிறது. இதன் பின்புற கேமராவின் பெரிய துளையானது 100 சதவிகிதம் அதிக ஒளி வேகத்தை அடைய அனுமதிக்கிறது. இதனால் புகைப்படத்தில் குறைபாடுகள், மங்கலான நிளை, குறைந்த ஒளி நிலைமை போன்ற சிக்கல்களே இருக்காது.

எக்ஸ்பெர்ட் மோட்

எக்ஸ்பெர்ட் மோட்

இதன் கேமரா 'எக்ஸ்பெர்ட் மோட்' என்ற கட்டமைக்கப்பட்ட அம்சம் மூலம் ஷட்டர் வேகம், போகஸ், வைட் பேலன்ஸ் மற்றும் ஐஎஸ்ஓ என ஒவ்வொரு கேமரா அமைப்பிலும் தேவையான மாற்றங்களை நிகழ்த்த உதவும். சுருக்கமாக நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து தொழில்முறை கேமரா போன்ற படங்களை அடைய இது உதவும்.

அல்டரா எச்டி, டபுள் எக்ஸ்போஷர், சூப்பர் கிப்

அல்டரா எச்டி, டபுள் எக்ஸ்போஷர், சூப்பர் கிப்

உடன் ஒப்போ எப்3 ப்ளஸ் கருவியின் அல்ட்ரா-எச்டி அம்சம் ஆன் செய்யப்பட்டு இருக்கும்போது கேமரா தொடர்ந்து நான்கு புகைப்படங்களை எடுத்து அவைகளை ஒன்றாகி ஒரு 50 எம்பி அளவிலான தரத்தில் ஒரு அல்டரா எச்டி புகைப்படமாக வழங்கும் மற்றும் இதன் இரட்டை வெளிப்பாடானது இரண்டு புகைப்படங்களை அவைகளை ஓவர்லேப் செய்து ஒரு கனவு புகைப்படத்தை உங்களுக்கு வழங்கும். உடன் இதன் மற்றொரு கேமரா ஆப் ஆன சூப்பர் கிப் ஆனது உடனடியாக பார்வேர்ட் மற்றும் பேக்வேரட் செய்யக்கூடிய கிப் (GIF) களை உருவாக்க உதவும்.

பேட்டரி

பேட்டரி

ஆண்ட்ராய்டு 6.0 கொண்டு இயங்கும் ஒப்போ எப்3 ப்ளஸ் கருவியானது ஒரு 4000எம்ஏஎச் நீக்கமுடியாத பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. அளவீடுகளில் 163.63X 80.80X 7.35 (உயரம் x அகலம் x தடிமன்) மற்றும் 185.00 கிராம் எடை கொண்டுள்ளது. ஒரு இரட்டை சிம் (ஜிஎஸ்எம் மற்றும் ஜிஎஸ்எம்) நானோ சிம் மற்றும் நானோ சிம் ஆதரவு கொண்ட இக்கருவியின் இணைப்பு விருப்பங்களை பொறுத்தமட்டில் வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், யுஎஸ்பி ஓடிஜி, 3ஜி மற்றும் 4ஜி ஆகியவைகள் அடங்கும். உடன் இந்த தொலைபேசியில் சென்சார்களை பொறுத்தமட்டில் காம்பஸ் மேக்நேட்டோமீட்டர், பிராக்ஸிமிட்டி சென்சார், ஆக்சலேரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார் மற்றும் கைரோமீட்டர்.

பிரீமியம் வடிவமைப்பின் உண்மையான ஆதாரம்

பிரீமியம் வடிவமைப்பின் உண்மையான ஆதாரம்

இனி ஒரு ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமெனில் நாம் முதலில் கூர்ந்து கவனிக்க வேண்டியது அக்கருவி பிரீமியம் வடிவமைப்பு கொண்டுள்ளதா என்பதை தான் - அப்படியாக பார்ப்பவர்களை "வாவ்" என் வாய் பிளக்க வைக்கும் பிரீமியம் வடிவமைப்பின் உண்மையான ஆதாரமாக திகழும் கருவிகளில் ஒன்று தான் - எப்3 ப்ளஸ். நீண்ட ஆயுளை பெறும்வண்ணம் இந்த உயர் பிரீமியம் கருவியானது ஒரு உலோக யூனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ளது மற்றும் மிகவும் கவனமான ஒரு மென்மையான உலோக மேற்பரப்பையும் வழங்குகிறது அதேசமயம் கைகளில் தேவையான பிடிமானத்தையும் வழங்குகிறது.

கொரில்லா கிளாஸ் 5

கொரில்லா கிளாஸ் 5

கைபேசியின் பின்பகுதி ஒரு உயர் வலிமை மெட்டல் வடிவமைப்பு கொண்டிருக்க இதுவொரு ஒரு 6 அங்குல 2.5டி கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்ட திரையால் முன்பக்கம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கைப்பேசியின் வலது மற்றும் இடது பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் வன்பொருள் பொத்தான்களும் உலோகத்தால் செய்யப்பட்டுளளது. இக்கருவியின் முக்கியமான வடிவமைப்பு அம்சமாக அதன் பெரிய 6 அங்குல திரை திகழ்கிறது. ஒரு மாபெரும் 6 அங்குல திரை கொண்டிருக்கும் போதும் இக்கருவி கைகளில் பருமனான உணரப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் முந்தைய தலைமுறைகளைச் விட சிறந்த பிடிமானம் வழங்குகிறதுமுக்கியமாக பணிச்சூழலியல் நிறைந்த இடங்களில் உங்கள் கைகளை விட்டு இக்கருவி நழுவுவது அவ்வளவு எளிதல்ல.

'சிக்ஸ்-ஸ்ட்ரிங்' அல்ட்ரா ஆண்டெனா

'சிக்ஸ்-ஸ்ட்ரிங்' அல்ட்ரா ஆண்டெனா

பிற தடித்த வெள்ளை ஆண்டெனா பட்டைகள் கொண்ட உலோக கைபேசிகள் போல் இல்லாவிட்டாலும் கூட ஒப்போ எப்3 ப்ளஸ் இணைப்பு அம்சங்களில் வடிவமைப்பிற்காக எந்த தியாகமும் செய்யவில்லை. அதற்கு இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ள 'சிக்ஸ்-ஸ்ட்ரிங்' அல்ட்ரா ஆண்டெனா தான் உதாரணம். அது ஒரு பிரீமியம் தோற்றத்தை கொடுத்து ஷெல் கொண்டு கலப்புகளையும் வழங்குகிறது. உடன் அது மிகவும் மென்மையாய் தெரிகிறது என்பது இன்னும் சிறப்பான வடிவமைப்பு விடயங்களில் ஒன்றாகும்.

கைரேகை சென்சார்

கைரேகை சென்சார்

இக்கருவியின் மற்றொரு முக்கியமான வடிவமைப்பு அம்சமாக வெறும் 0.2 நொடியில் கைபேசியை திறக்கும் கைரேகை சென்சார் ஒருங்கிணைப்பு தான் மற்றும் இந்த் சாதனத்தின் பாதுகாப்பை அதிகரிக்கும் வண்ணம் கூடுதல் பாதுகாப்பு அடுக்கு கொண்ட அமைப்பை ஹோம் பொத்தானில் உள்ள கைரேகை ஸ்கேனரில் ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும்.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

இந்த அணைத்து வடிவமைப்பு அம்சங்களையும் ஒன்றாக்கி பார்க்கும் போது ஒப்போ எப்3 ப்ளஸ் நடைமுறையில் சிறந்த கருவியாகும் என்பதில் சந்தகமேயில்லை. இந்த சமீபத்திய ஒப்போ எப்3 ப்ளஸ் கருவியானது 6 அங்குல ப்ஹாப்ளெட் ஆகும் மற்றும் டூவல் செல்பீ கேமரா கொண்டு வெளிவரும் முதல் மொபைல் சாதனமாகும். ஒப்போ செல்பீ எக்ஸ்பெர்ட் குடும்பத்தின் மிகவும் மேம்படுத்தப்பட்ட ஒரு கருவியான இந்த எப்3 ப்ளஸ் கருவி இந்திய சந்தையில் ரூ.30,990/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
OPPO F3 Plus is a no compromise flagship smartphone at an affordable price. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X