எப்3 ப்ளஸ் : சாம்சங், ஒன்ப்ளஸ், விவோ கருவிகளுடன் நேரடி மோதல்.!

சமமான அம்சங்களை கொண்ட கருவிகளை நேருக்கு நேர் மோத விட்டு அதில் எது சிறந்தது என்று பார்ப்பதில் ஒரு தனி சுவாரசியமே உள்ளது.!

|

என்ன அம்சங்கள் கொண்டிருக்கிறது என்பதையெல்லாம் பாராமல் பட்ஜெட் விலைக்கு எது கிடைக்கிறதோ அதை வாங்கிய காலமெல்லாம் மலையேறி விட்டது. இப்போது ஒவ்வொரு பயனரும் ஒரு ஸ்மார்ட்போன் வல்லுநருக்கு சமம். அந்த அளவிலான என்ன டிஸ்ப்ளே.? என்னென்னெ அம்சங்கள் கொண்டுள்ளது.? என்பதை தீர்க்கமாக ஆராய்ந்து வாங்கும் நுகர்வோர்களை கொண்ட காலாமிதில் எந்தவொரு நிறுவனத்தினால் எந்தவொரு பயனரையும் அவ்வளவு சுலபமாக ஏமாற்றி விட இயலாது.

ரூ,10,000/- அல்லது ரூ.20,000/- என ஒரு குறிப்பிட்ட அளவிலான பட்ஜெட் கருவிகள் எல்லாமே கிட்டத்தட்ட ஒரே அளவிலான அம்சங்களை தான் கொண்டுள்ளது - இது நுகர்வோர்களின் அம்சங்கள் சார்ந்த அறிவினால் ஏற்பட்ட ஒரு விளைவாகும் என்பதில் சந்தேகமேயில்லை. அப்படியான சமமான அம்சங்களை கொண்ட கருவிகளை நேருக்கு நேர் மோத விட்டு அதில் எது சிறந்தது என்று பார்ப்பதில் ஒரு தனி சுவாரசியமே உள்ளது. அப்படியான ஒரு ஒப்பீடு போட்டி தான் இது.!

4000எம்ஏஎச் பேட்டரித்திறன்

4000எம்ஏஎச் பேட்டரித்திறன்

ஒப்போ எப்3 ப்ளஸ் சாதனத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக அதன் நீட்டிக்கப்பட்ட பேட்டரி திகழ்கிறது. தினசரி பயன்பாடுகளை வழங்கும் இஃந்த பேட்டரி திறன் 20க்கும் மேற்பட்ட மணி நேர பயன்பாட்டை வழங்கும் வல்லமை கொண்ட கருவியாகும். அதாவது 4000எம்ஏஎச் பேட்டரித்திறன் ஆதரவு கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி ஓப்ப்போ எப்3 ப்ளஸ் கருவியின் மற்றொரு சுவாரஸ்யமான அம்சமாக அதன் பாரிய பேட்டரி அலகு எளிதாக ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் 0% முதல் 100 சதவீதம் முழுமையாய் 4000எம்ஏஎச் பேட்டரி ரீசார்ஜ் ஆகும் என்பது தான். இதற்கு நிறுவனத்தின் விஓஒசி தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட வரும் ஒரு பெரிய சார்ஜ் அடாப்டர் காரணமாக திகழ்கிறது.

விவோ வி5 ப்ளஸ் :

விவோ வி5 ப்ளஸ் :

சமீபத்தில் தொடங்கப்பட்ட விவோ வி5 ப்ளஸ் ஸ்மார்ட்போன் உடன் இதை ஒப்பிடும் போது இக்கருவி ஒரு சிறிய அளவிலான 3055எம்ஏஎச் பேட்டரி அலகு கொண்டுள்ளது மற்றும் அன்றாட பயன்பாட்டில் விவோ வி 5 பிளஸ் 16 மணி நேர பயன்பாட்டை வழங்குகிறது. மேலும் அரை மணி நேரத்தில் ஒரு 43 சதவீதம் சார்ஜ் மட்டுமே அடைய உதவும் இது ஒரு இரட்டை சார்ஜ் எஞ்சின் தொழில்நுட்பம் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒன்ப்ளஸ் 3டி

ஒன்ப்ளஸ் 3டி

விவோ வி 5 பிளஸ் கருவியை தவிர்த்து 3400எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்ட பிரபலமான ஒன்ப்ளஸ் 3டி கருவியுடன் ஒப்போ எப்3 பிளஸ் பேட்டரி செயல்திறனை ஒப்பிட்டால் அதன் டாஷ் சார்ஜ் ஆதரவு கொண்டு கருவி மிக விரைவில் சார்ஜ் ஆகிவிடும் மற்றும் அன்றாட பயன்பாடு என்று பார்க்கும் போது ஒரு நாள் நீடிக்கும். இருப்பினும் 60% ப்ரைட்னஸ் வைத்து வைஃபை மூலம் யூட்யூப்பில் ஒரு முழு எச்டி வீடியோ பார்த்தால் ஓன்ப்ளஸ் 3டி பேட்டரி சதவீதம் 10% குறையும் ரோபோ எப்3 பிளஸ் 7% குறையும்.

சாம்சங் சி9 புரோ

சாம்சங் சி9 புரோ

இறுதியாக ஒரு 4000எம்ஏஎச் பேட்டரி அலகுகொண்ட 6 அங்குல முழு எச்டி காட்சி கொண்டு சமீபத்தில் தொடங்கப்பட்ட சாம்சங் சி9 புரோ கருவியடன் ஒப்போ எப்3 பிளஸ் கருவியை ஒப்பிட்டால் சி9 ப்ரோ சார்ஜ் அன்றாட பயன்பாட்டில் ஒப்போ எப்3 பிளஸ் கருவியை விட கொஞ்சம் அதிக நேரம் நீடிக்கும் என்று கண்டறியப்பட்டது. இதற்கு காரணமாக இரண்டு கருவிகளின் டிஸ்ப்ளே வடிவமைப்பு காரணமாக திகழ்கிறது. இருப்பினும் சி9 ப்ரோ கருவியோடு ஒப்பிடும் போது எப்3 100% பேட்டரி இலக்கை விரைவில் அடையும் திறன் கொண்டுள்ளது.

தொடுதிரை காட்சி

தொடுதிரை காட்சி

ஒப்போ எப்3 ப்ளஸ் ஸ்மார்ட்போன் ஆனது மார்ச் 2017-ல் தொடங்கப்பட்ட ஒரு தொலைபேசியாகும். 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஒரு 6.00 அங்குல தொடுதிரை காட்சி கொண்டுள்ள இக்கருவி இந்தியாவில் ரூ. 30,990/- என்ற விலை நிர்ணயம் கொண்டு அறிமுகமாகியுள்ளது. 1.95ஜிகாஹெர்ட்ஸ் அக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 652 செயலி மூலம் இயக்கப்படும் இந்த கருவி 4ஜிபி ரேம் மற்றும் மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 256ஜிபி நீட்டிக்கக்கூடிய ஆதரவு உடன் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பும் கொண்டுள்ளது. இக்கருவிகள் சிறப்பம்சங்களான கேமராக்களை பொறுத்தவரை, ஒப்போ எப்3 ப்ளஸ் கருவி 16 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் செல்பீகளுக்கான ஒரு 16 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டுள்ளது. ஒரு வைட் ஆங்கிள் மற்றும் ஒரு நிலையான லென்ஸ் என இரட்டை செல்பீ கேம் கொண்ட இக்கருவி நிச்சயமாக உங்களை ஒரு செல்பீ நிபுணர் ஆக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

பீல்ட்-ஆப் -வியூ

பீல்ட்-ஆப் -வியூ

டூவல் செல்பீ கேமராவின் நிலையான லென்ஸ் ஆனது ஒரு வழக்கமான ஒப்போ முன்பக்க கேமரா போலவே தெளிவான ஆழம் மற்றும் சப்தம் குறைப்பு ஆகிய விடயத்தில் கவனம் செலுத்த அதன் இரண்டாவது வைட் ஆங்கிள் லென்ஸ் ஆனது பெரிய பீல்ட்-ஆப் -வியூ விடயத்தில் கவனம் செலுத்துகிறது. இந்த தனிப்பட்ட செல்பீகளுக்கான டூவல் குழு ஒரு விசேடமாக வடிவமைக்கப்பட்ட செல்பீ கேமரா என்பதில் சந்தேகமே வேண்டாம். வரவிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் கேமராவில் பியூடிப்பை 4.0 ஆப் பொருத்தப்பட்டே வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் செல்பீகளை கையாளும் போது, தொனி அனுசரிப்பு, நிழல்கள் மற்றும் தெளிவான ஒளி முக வரையறைகள் ஆகிய விடயங்களில் கவனம் செலுத்தப்படும். செல்பீக்களில் மிகவும் தவிர்க்க முடியாத ஒரு மென்பொருள் அம்சமான பியூட்டிப்பை ஆனது பிரகாசமான, தெளிவான தோல், தெளிவான கண்கள் போர்னா செல்பீக்களுக்கான அடிப்படை விடயங்களை உயர்த்தும்.

செல்பீ பனோரமா

செல்பீ பனோரமா

இந்த அம்சம் மூலம் உங்கள் குரூப் செல்பீயில் யாரையும் தவர விட முடியாது. முதலில் இதன் முன்பக்க வைட் ஆங்கிள் லென்ஸ் ஆனது அனைவரையும் ப்ரேமில் கொண்டுவர உதவும் இரண்டாவதாக ஒரு பரந்த அளவிலான மூன்று புகைப்படங்களை இணைக்கின்ற உள்ளமைக்கப்பட்ட 'செல்பீ பனோரமா' அம்சம் உங்களின் க்ரூப் செல்பீயை வேறு ஒரு கட்டத்திற்கு கொண்டு செல்லும். ஒப்போ எப்3 ப்ளஸ் கேமராவில் மேம்படுத்தப்பட்ட ஸ்க்ரீன் ப்ளாஷ் அம்சம் உள்ளது. இதன்மூலம் செல்பீக்களின் ஒளி நிலைமைகள் பிரகாசமாக இருக்கும். உடன் ஒப்போ சில செம்மைப்படுத்த ஸ்கிரீன் பிளாஷ் ஆனது தானாகவே பிரைட்னஸ் லெவல் மற்றும் சுற்றுசூழல் ஆகியவைகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளும்.

பால்ம் ஷட்டர்

பால்ம் ஷட்டர்

செல்பீக்களின் பொது ஷட்டர் பொத்தானை சரியாக 'ஷேக்' இல்லாமால் அழுத்துவது என்பது ஒரு கடினமான வேலையாகும். அதற்காகவே நீங்கள் ஒரு ஷாட்டை மங்கலான காரணத்தால் பல முறை எடுக்க நேரிடும். அதற்கான ஒரு எளிமையான தீர்வுதான் பால்ம் ஷட்டர். இந்த அம்சம் மூலம் நீங்கள் கேமரா முன் உங்கள் கையை அசைப்பது மூலம் ஆட்டோமேட்டிக் செல்பீ கவுண்டவுனை தொடங்க முடியும். செல்பீயில் பல்வேறு பில்டர்கள் மற்றும் வாட்டர்மார்க்குகள், முடிவற்ற படைப்பாற்றல் மற்றும் வேடிக்கைகளை அனுமதிக்கும் ஒப்போ எப்3 ப்ளஸ் கருவியானது அதன் ரியர் கேமராவிலும் அதிக கவனம் செலுத்துகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 16எம்பி பின்புற கேமரா இந்த உலகின் சிறந்த படங்களை கைப்பற்ற உறுதி செய்கிறது. இதன் பின்புற கேமராவின் பெரிய துளையானது 100 சதவிகிதம் அதிக ஒளி வேகத்தை அடைய அனுமதிக்கிறது. இதனால் புகைப்படத்தில் குறைபாடுகள், மங்கலான நிளை, குறைந்த ஒளி நிலைமை போன்ற சிக்கல்களே இருக்காது.

எக்ஸ்பெர்ட் மோட்

எக்ஸ்பெர்ட் மோட்

இதன் கேமரா 'எக்ஸ்பெர்ட் மோட்' என்ற கட்டமைக்கப்பட்ட அம்சம் மூலம் ஷட்டர் வேகம், போகஸ், வைட் பேலன்ஸ் மற்றும் ஐஎஸ்ஓ என ஒவ்வொரு கேமரா அமைப்பிலும் தேவையான மாற்றங்களை நிகழ்த்த உதவும். சுருக்கமாக நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து தொழில்முறை கேமரா போன்ற படங்களை அடைய இது உதவும். உடன் ஒப்போ எப்3 ப்ளஸ் கருவியின் அல்ட்ரா-எச்டி அம்சம் ஆன் செய்யப்பட்டு இருக்கும்போது கேமரா தொடர்ந்து நான்கு புகைப்படங்களை எடுத்து அவைகளை ஒன்றாகி ஒரு 50 எம்பி அளவிலான தரத்தில் ஒரு அல்டரா எச்டி புகைப்படமாக வழங்கும் மற்றும் இதன் இரட்டை வெளிப்பாடானது இரண்டு புகைப்படங்களை அவைகளை ஓவர்லேப் செய்து ஒரு கனவு புகைப்படத்தை உங்களுக்கு வழங்கும். உடன் இதன் மற்றொரு கேமரா ஆப் ஆன சூப்பர் கிப் ஆனது உடனடியாக பார்வேர்ட் மற்றும் பேக்வேரட் செய்யக்கூடிய கிப் (GIF) களை உருவாக்க உதவும்.

பேட்டரி

பேட்டரி

ஆண்ட்ராய்டு 6.0 கொண்டு இயங்கும் ஒப்போ எப்3 ப்ளஸ் கருவியானது ஒரு 4000எம்ஏஎச் நீக்கமுடியாத பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. அளவீடுகளில் 163.63X 80.80X 7.35 (உயரம் x அகலம் x தடிமன்) மற்றும் 185.00 கிராம் எடை கொண்டுள்ளது. ஒரு இரட்டை சிம் (ஜிஎஸ்எம் மற்றும் ஜிஎஸ்எம்) நானோ சிம் மற்றும் நானோ சிம் ஆதரவு கொண்ட இக்கருவியின் இணைப்பு விருப்பங்களை பொறுத்தமட்டில் வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், யுஎஸ்பி ஓடிஜி, 3ஜி மற்றும் 4ஜி ஆகியவைகள் அடங்கும். உடன் இந்த தொலைபேசியில் சென்சார்களை பொறுத்தமட்டில் காம்பஸ் மேக்நேட்டோமீட்டர், பிராக்ஸிமிட்டி சென்சார், ஆக்சலேரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார் மற்றும் கைரோமீட்டர்.

பிரீமியம் வடிவமைப்பின் உண்மையான ஆதாரம்

பிரீமியம் வடிவமைப்பின் உண்மையான ஆதாரம்

இனி ஒரு ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமெனில் நாம் முதலில் கூர்ந்து கவனிக்க வேண்டியது அக்கருவி பிரீமியம் வடிவமைப்பு கொண்டுள்ளதா என்பதை தான் - அப்படியாக பார்ப்பவர்களை "வாவ்" என் வாய் பிளக்க வைக்கும் பிரீமியம் வடிவமைப்பின் உண்மையான ஆதாரமாக திகழும் கருவிகளில் ஒன்று தான் - எப்3 ப்ளஸ். நீண்ட ஆயுளை பெறும்வண்ணம் இந்த உயர் பிரீமியம் கருவியானது ஒரு உலோக யூனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ளது மற்றும் மிகவும் கவனமான ஒரு மென்மையான உலோக மேற்பரப்பையும் வழங்குகிறது அதேசமயம் கைகளில் தேவையான பிடிமானத்தையும் வழங்குகிறது.

கொரில்லா கிளாஸ் 5

கொரில்லா கிளாஸ் 5

கைபேசியின் பின்பகுதி ஒரு உயர் வலிமை மெட்டல் வடிவமைப்பு கொண்டிருக்க இதுவொரு ஒரு 6 அங்குல 2.5டி கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்ட திரையால் முன்பக்கம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கைப்பேசியின் வலது மற்றும் இடது பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் வன்பொருள் பொத்தான்களும் உலோகத்தால் செய்யப்பட்டுளளது. இக்கருவியின் முக்கியமான வடிவமைப்பு அம்சமாக அதன் பெரிய 6 அங்குல திரை திகழ்கிறது. ஒரு மாபெரும் 6 அங்குல திரை கொண்டிருக்கும் போதும் இக்கருவி கைகளில் பருமனான உணரப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் முந்தைய தலைமுறைகளைச் விட சிறந்த பிடிமானம் வழங்குகிறதுமுக்கியமாக பணிச்சூழலியல் நிறைந்த இடங்களில் உங்கள் கைகளை விட்டு இக்கருவி நழுவுவது அவ்வளவு எளிதல்ல. இக்கருவியின் மற்றொரு முக்கியமான வடிவமைப்பு அம்சமாக வெறும் 0.2 நொடியில் கைபேசியை திறக்கும் கைரேகை சென்சார் ஒருங்கிணைப்பு தான் மற்றும் இந்த் சாதனத்தின் பாதுகாப்பை அதிகரிக்கும் வண்ணம் கூடுதல் பாதுகாப்பு அடுக்கு கொண்ட அமைப்பை ஹோம் பொத்தானில் உள்ள கைரேகை ஸ்கேனரில் ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும்.

Best Mobiles in India

Read more about:
English summary
OPPO F3 Plus battery performance: Dominating the “new smartphone battleground”. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X