பிப்ரவரி 3-ல் ஒப்போ ஏ57 அறிமுகம் (விலை, அம்சங்கள்).!

ஒப்போ ஏ57 கருவியின் விலை என்ன.? அம்சங்கள் என்னென்ன.!?

Written By:

ஒப்போ நிறுவனம் இன்று (வெள்ளிக்கிழமை) அதன் சமீபத்திய செல்பீ சுய-கவனம் ஸ்மார்ட்போன் ஆன ஒப்போ ஏ57 கருவியை வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி இந்திய சந்தைகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது. செல்பீ பிரியர்களை மனதில் கொண்டு வெளியாகும் பெரும்பாலா ஒப்போ கருவிகளை போலவே தான் ஏ57 கருவியின் இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

அப்படியாக, ஒப்போ ஏ57 கருவியின் விலை என்ன.? அம்சங்கள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

விலை

நினைவுகூர வேண்டுமெனில் ஒப்போ ஏ57 கருவி சுமார் ரூ.16,000/- என்ற விலைக்கு கடந்த நவம்பர் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ரோஸ் தங்கம் மற்றும் தங்க ஆகிய இரண்டு வண்ண வகைகளில் தொடங்கப்பட்ட ஒப்போ ஏ 57 கருவியானது இந்தியாவில் பிப்ரவரி 3-ஆம் தேதி வெளியாகும் என்று ஒப்போ நிறுவனம் ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு 6.0

இரட்டை சிம் ஆதரவு, கலர்ஓஎஸ்3.0 இயங்குதளம் கொண்ட ஒப்போ ஏ57 கருவி பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ மூலம் இயங்கும். உடன் ஆக்டா கோர் 1.4ஜிகா ஹெர்ட்ஸ் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 435 எஸ்ஓசி, 3ஜிபி ரேம் அட்ரெனோ 505 ஜிபியூ இணைந்து மூலம் இயக்கப்படுகிறது.

16-மெகாபிக்சல் முன்பக்க கேமரா

2.5டி வளைந்த கண்ணாடி உடைய 5.2 அங்குல எச்டி (720x1280) எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட இக்கருவியின் கேமரா துறையை பொறுத்தமட்டில் எப் /2.0 அப்பர்ஷெர் கொண்ட 16-மெகாபிக்சல் முன்பக்க கேமரா மற்றும் எல்இடி ப்ளாஷ், எப்/ 2.2, மற்றும் பிடிஏஎப் கொண்ட 13 மெகாபிக்சல் பின்பக்க கேமரா கொண்டுள்ளது உடன் இந்த ஸ்மார்ட்போனின் ஹோம் பட்டனுடன் ஏற்றப்பட்ட ஒரு கைரேகை ஸ்கேனரும் உள்ளது.

மெமரி

சேமிப்பை பொறுத்தமட்டில் 128ஜிபி வரை மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக மெமரி நீடிக்கக்கூடிய வசதியுடன் 32 ஜிபி வரை ஒரு உள்ளடிக்கிய சேமிப்பு கொண்டுள்ளது.

பேட்டரி திறன்

உடன் ஸ்மார்ட்போன் இணைப்பு விருப்பங்கள் என்று பார்க்கும் போது 4ஜி, எல்டிஇ, ஜிபிஆர்எஸ் / எட்ஜ், ப்ளூடூத் வி4.1, வைஃபை, ஜிபிஎஸ், யூஎஸ்பி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை அடங்கும். 2900எம்ஏஎச் பேட்டரி திறன் மூலம் இயக்கப்படும் இந்த கருவி அளவீடுகளில் 149.1x72.9x7.65மிமீ மற்றும் 147 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Oppo A57 India Launch Set for February 3. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்