ஒன் ப்ள்ஸ் 3 மாடலில் எதிர்நோக்கும் பிரச்சனைகளும் அதற்குரிய தீர்வுகளும்

By Siva
|

இந்தியாவில் மிக வேகமாக தனது வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தி வருவதோடு புதுப்புது மாடல்களையும் வெளியிட்டு வருகிறது. ஒன் ப்ளஸ் நிறுவனம். சமீபத்தில் இந்நிறுவனம் வெளியிட்ட ஒன் ப்ள்ஸ் 3 மாடலுக்கு ஸ்மார்ட்போன் சந்தையில் பெரும் வரவேற்பு இருந்தது.

ஒன் ப்ள்ஸ் 3 மாடலில் எதிர்நோக்கும் பிரச்சனைகளும் அதற்குரிய தீர்வுகளும்

குறைந்த விலையில் கிடைக்கும் இந்த போனில் மிக அதிக விலையில் இருக்கும் வசதிகளான முழு HD டிஸ்ப்ளே, ஃபிங்கர் பிரிண்ட் வசதி ஆகியவை இருந்ததால் வாடிக்கையாளர்களை முழு திருப்தி செய்தது.

அடித்துக்கூறினாலும் நீங்கள் நம்பக்கூடாத ஜியோ வாக்குறுதிகள்.!

ஆனால் அதே நேரத்தில் ஒருசில பிரச்சனைகளும் இந்த போனில் இருக்கின்றது என்பதை மறுக்க முடியாது. வாடிக்கையாளர்கள் இந்த போனில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் அதை தீர்ப்பது எப்படி? என்பது குறித்தும் தற்போது பார்ப்போம்

ஓவர் ஹிட் ஆவதை தடுப்பது எப்படி?

ஓவர் ஹிட் ஆவதை தடுப்பது எப்படி?

பொதுவாக பலர் கூறும் முக்கிய குற்றச்சாட்டு என்னவெனில் ஒன் ப்ள்ஸ் 3 மாடல் போனை உபயோகப்படுத்தும்போதோ அல்லது பாக்கெட் அல்லது தலையணைக்கு அடியில் வைத்திருக்கும்போதோ ஓவர் ஹீட் ஆகிறது என்பதுதான். இந்த ஓவர் ஹீட் போனி வெடிப்பதற்கோ அல்லது பக்கத்தில் உள்ள பொருள் தீப்பற்றுவதற்கோ அல்லது நமது உடலின் தோலுக்கு பாதிப்பு வருவதற்கோ வாய்ப்பு உள்ளது.

இந்த பிரச்சனையை சரி செய்ய முதலில் ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். எப்பொழுதுமே டேஷ் சார்ஜை பயன்படுத்தவும், இது விரைவாக சார்ஜ் செய்வதுடன் உங்கள் போல் கூல் ஆக வைத்திருக்க உதவும் .மேலும் இவ்வகை மாடலுக்கு ஃப்ளிப் ப்ளாப் கவர் மட்டுமே சிறந்தது.

வைபை பிரச்சனை வந்தால் என்ன செய்வது?

வைபை பிரச்சனை வந்தால் என்ன செய்வது?

பொதுவாக பல மாடல்களில் கூறப்படும் பிரச்சனைகளில் ஒன்று வைபை கனெக்ட் செய்வதுதான். இந்த ஒன் ப்ள்ஸ் 3 மாடலும் அதற்கு விதிவிலக்கல்லா. இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று பார்ப்போம்

வைபை கனெக்ட் ஆகவில்லை என்றால் உடனே முதலில் உங்கள் மொபைல் போனை ரீஸ்டார்ட் செய்யவும். வைபையின் ஃபர்கெட் பாஸ்வேர்டை கொடுத்து புதிய பாஸ்வேர்டை செட் செய்யவும். மேலும் டிவைசின் MAC முகவரியை சரிபார்க்கவும். மேலும் ரூட்டர் (Router) சரியாக சப்போர்ட் செய்கிறதா? என்பதையும் சரிபார்க்கவும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஆடியோ லெவல் குறைவாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

ஆடியோ லெவல் குறைவாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

ஒன் ப்ள்ஸ் 3 மாடலில் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனை ஆடியோ தான் என பல வாடிக்கையாளர்கள் கூறி வருகின்றனர். கேம்ஸ் விளையாடும்போதோ, மியூசிக் கேட்கும்போதோ, ஆடியோவின் லெவல் மிக குறைவாக இருக்கும் நிலை ஏற்படும். இந்த பிரச்சனை எப்படி தீர்ப்பது என்று பார்ப்போமா?

ஆடியோ லெவலை சரிசெய்ய முதலில் போனில் உள்ள ஆக்சிஜன் ஓஎஸ் வெர்ஷன் 3.2.6 அப்டேட் செய்யப்பட்டிருக்கின்றதா? என்பதை சரிபார்க்கவும். ஒருவேளை அப்டேட் செய்யவில்லை என்றால் உடனே அப்டேட் செய்துவிட்டு பின்னர் போனை ரீஸ்டார்ட் செய்தால் ஆடியோ லெவல் சரியாகிவிட்டும்

நோட்டிபிகேஷனில் பிரச்சனையா?

நோட்டிபிகேஷனில் பிரச்சனையா?

ஒன் ப்ள்ஸ் 3 மாடல் ஸ்மார்ட்போன் பயனாளிகள் சந்திக்கும் இன்னொரு பிரச்சனை நோட்ட்பிகேஷன் ஆன் - இல் இருந்தாலும் நோட்டிபிகேசன் சரியாக வருவதில்லை. இந்த பிரச்சனையை சரிசெய்ய வேண்டுமானால் நாம் முன்பு கூறியது போல் ஆக்சிஜன் ஓஎஸ் வெர்ஷன் 3.2.6 அப்டேட் செய்யப்பட்டிருக்கின்றதா என்பதை சரிபாருங்கள். அதன் பின்னரும் நோட்டிபிகேசன் வரவில்லை என்றால் 'Do not disturb' என்ற ஆப்சன் ஆன் செய்யப்பட்டிருக்கின்றதா? என்பதை சரிபாருங்கள். ஒருவேளை ஆன் செய்யப்பட்டிருந்தால் உடனே செட்டிங்ஸ் சென்று Settings>Tapping on Sound and notification option> App Notifications and Toggle சென்று ஆன் செய்தால் போதும். அதன்பின்னர் உங்களுக்கு நோட்டிபிகேசன் ரெகுலராக வர ஆரம்பித்துவிடும்

அடிக்கடி தானாகவே ரீஸ்டார்ட் ஆகின்றதா?

அடிக்கடி தானாகவே ரீஸ்டார்ட் ஆகின்றதா?

ஒன் ப்ள்ஸ் 3 மாடல் ஸ்மார்ட்போன் மாடல் மட்டுமின்றி பல மாடல்களில் தோன்றும் ஒரு பிரச்சனை என்னவென்றால் நாம் போனை பயன்படுத்தி கொண்டே இருக்கும்போது திடீரென தானாகவே ரீஸ்டார்ட் ஆகி நம்மை எரிச்சல் படுத்தும். இவ்வகை பிரச்சனைக்கு தீர்வு காண ஏற்கனவே நாம் கூறியதுதான், முதலில் ஆக்சிஜன் ஓஎஸ் வெர்ஷன் 3.2.6 அப்டேட் செய்யப்பட்டிருக்கின்றதா என்பதை சரிபாருங்கள். பின்னர் போனில் உள்ள சார்ஜ் தீரும்வரை உபயோகப்படுத்திவிட்டு சார்ஜ் எம்ப்ட்டி ஆனவுடன் ஒரு பத்து நிமிடம் கழித்து புதியதாக முதலில் இருந்து சார்ஜ் செய்யுங்கள். அதாவது சுவிட்ச் ஆப் நிலையில் சார்ஜ் செய்யுங்கள். அதன் பின்னர் ஸ்மார்ட்போனில் உள்ள முக்கிய தகவல்களை பேக்கப் எடுத்து கொண்டு ஃபேக்டரி ரீசெட் செய்யுங்கள். இப்போது உங்களுக்கு தானாக ரீஸ்டார்ட் ஆகும் பிரச்சனை வராது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
OnePlus 3 has very many problems in running. Here are the 5 most common problems, and how to get rid of them.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X