ஒன்ப்ளஸ் 2 மாடலில் புதிய ஆக்சிஜன் ஓஎஸ் 3.5.5 அப்டேட்

ஒன்ப்ளஸ் 2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆக்சிஜன் ஓஎஸ் 3.3.5 அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

Written By:

சீனாவின் முன்னணி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஒன்ப்ளஸ் 3 மாடலில் கடந்த மாதம் ஆக்சிஜன் ஒஎஸ் 3.2.8 அப்டேட் செய்யப்பட்டது என்பதை பார்த்தோம். இந்த அப்டேட்டிற்கு பின்னர் இந்த மாடலுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்தது.

ஒன்ப்ளஸ் 2 மாடலில் புதிய ஆக்சிஜன் ஓஎஸ் 3.5.5 அப்டேட்

இந்நிலையில் தற்போது ஒன்ப்ளஸ் 2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆக்சிஜன் ஓஎஸ் 3.3.5 அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் ஓஎஸ் 3.3.5 அப்டேட் காரணமாக இந்த போன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு எண்ணற்ற இலவச அழைப்புகளும், இலவச டேட்டாக்களும் கிடைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது.

ஏனெனில் இந்த அப்டேட் காரணமாக இந்த மாடல் ஸ்மார்ட்போன், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சிம்முக்கு சப்போர்ட் செய்யும்


பிளிப்கார்ட் எக்ஸ்சேன்ஞ்சில் ரூ.9,990/-க்கு ஆப்பிள் ஐபோன் 6.!

மேலும் ஆப் லாக்கர், பேட்டரி மிச்சப்படுத்தும் முறை, அளவற்ற கேம்ஸ்கள், அலர்ட் ஸ்லைடர் மற்றும் வால்யூம் அட்ஜெஸ்ட்மெண்ட் ஆகியவை புதிய வசதிகளாக கிடைத்துள்ளது. மேலும் ஒருசில புதிய சாப்ட்வேர்களும் இதில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.

இந்த அப்டேட் காரணமாக உங்கள் ஒன்ப்ளஸ் 2 மாடலில் இருந்த கடிகாரம், கால்குலேட்டர், மெசேஜ் செயலிகள் மற்றும் ஒருசில வசதிகள் செயல் இழந்திருக்கும். எனவே நீங்கள் மீண்டும் புதியதாக இத்தகையை வசதிகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்

ஏர்டெல் : ஒரு வருட இலவச 4ஜி டேட்டா பெறுவது எப்படி.?

அதேபோல் டிவைஸ் பெயர், ரிங்டோன், பேட்டரி இண்டிகேட்டர் ஆகியவற்றையும் ரீசெட் செய்து கொள்ள வேண்டும்

மேலும் இந்த அப்டேட் உங்கள் ஒன்ப்ளஸ் 2 மாடலில் மாற்றப்பட்டு முடிந்ததும் உங்களுக்கு நோட்டிபிகேசன் மூலம் தகவல் வரும். இந்த புதிய அப்டேட்டை இதன் வாடிக்கையாளர்கள் செய்து கொண்டால் தங்கள் கையில் புதிய போன் இருப்பது போன்ற அனுபவத்தை பெறுவார்கள்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
OnePlus 2 gets OxygenOS 3.5.5 update, brings VoLTE support and more.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்