23எம்பி கேம் கொண்ட நூபியா இசெட் 11 மினி எஸ் (விலை & அம்சங்கள்).!

ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்ட மற்றும் 200ஜிபி வரை விரிவாக்க ஆதரவு கொண்ட 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு.!

Written By:

நூபியா அதன் இசெட்11 மினி ஸ்மார்ட்போன்னின் ஒரு மேம்படுத்தப்பட்ட பதிப்பை அறிமுகம் செய்துள்ளது. அக்கருவி நூபியா இசெட் 11 மினி எஸ்என்று அழைக்கப்படுகிறது. ரூ.16,999/- என்ற விலை நிர்ண்யம் கொண்ட இக்கருவி மார்ச் 21 ஆம் தேதி முதல் அமேசான் வழியாக பிரத்தியேகமாக கிடைக்கும்.

23எம்பி கேம் கொண்ட நூபியா இசெட் 11 மினி எஸ் (விலை & அம்சங்கள்).!

ஒரு சோனி ஐஎம்எக்ஸ்318 எக்ஸ்மோர் ஆர்எஸ் சென்சார் மற்றும் ஒரு எப்/ 2.0 துளை லென்ஸ் கொண்ட ஒரு 23எம்பி பின்புற கேமரா கொண்டு வரும் இக்கருவி ஒரு 80 டிகிரி வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்258 சிமோஸ் (CMOS) சென்ஸார் கொண்ட ஒரு 13எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

தவிர, இந்த புதிய தொலைபேசி சற்று பெரிய 5.2 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளே கொண்டு வருகிறது மற்றும் 4ஜிபி ரேம், க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 மொபைல் பிளாட்பார்ம் மூலம் இயக்கப்படுகிறது. நூபியா இசெட்11 மினி எஸ் ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்ட மற்றும் 200ஜிபி வரை விரிவாக்க ஆதரவு கொண்ட 64ஜிபி உள்ளடக்க சேமிப்பை வழங்குகிறது.

நினைவுகோரும் வண்ணம், நூபியா இசெட் 11 மினி கருவி கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியாவில் ரூ.12,999/-க்கு தொடங்கப்பட்டது மற்றும் கருவிக்கு ஒரு சிறந்த கேமரா தொலைபேசிகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. அம்சங்கள் : 16எம்பி முதன்மை கேமரா, 8எம்பி முன்பக்க கேமரா, 5 அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே மற்றும் ஸ்னாப்டிராகன் 617 மொபைல் பிளாட்பார்ம்.

மேலும் படிக்க : ரெட்மீ நோட் 4 முன்பு மோட்டோ ஜி5 ப்ளஸ் ஒண்ணுமே இல்லை, ஏன்.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Nubia Z11 Mini S with 23MP camera, SD 625 launched at Rs. 16,999. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்