
மக்களிடையே பிரசித்தி பெற்ற ஆன்லைன் வலைத்தளமானது ஸ்னாப்டீல். சாம்சங் ஆம்னியா எம் என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.
இதனால் இதை ஆன்லைனில் எளிதாக பெறலாம். இந்த ஆம்னியா வரிசை ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பினையும் பெற்று வருகிறது. இங்கே சாம்சங் நிறுவனத்தின் ஆம்னியா-எம் ஸ்மார்ட்போனின் தொழில் நுட்ப விவரத்தினையும் பார்க்கலாம்.
விண்டோஸ் இயங்குதளம் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன்களை வாங்க மக்களும் ஆர்வமாக உள்ளனர். இதனால் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள் ஆம்னியா-எம் ஸ்மார்ட்போனை, ஸ்னாப்டீல் வலைத்தளத்தில் பெறலாம்.
இந்த ஆம்னியா எம் ஸ்மார்ட்போன் விண்டோஸ்-7.5 டேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். 4.0 இஞ்ச் அகன்ற திரை வசதியினை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் சூப்பர் அமோல்டு தொடுதிரை வசதியினை வழங்கும்.
இந்த ஸ்மார்ட்போன் 3ஜி தொழில் நுட்பத்திற்கும் எளிதாக சப்போர்ட் செய்யும். இதில் உள்ள தொழில் நுட்ப வசதிகளை எளிதாக பெற 1,500 எம்ஏஎச் பேட்டரி சிறப்பாக துணை புரியும்.
சாம்சங் ஆம்னியா எம் ஸ்மார்ட்போனை ஸ்னாப்டீல் வலைத்தளத்தில் ரூ. 17,990 விலையில் பெறலாம்.




























