உங்கள் ஆண்ட்ராய்டு போனை டிவியில் கனெக்ட் செய்வது எப்படி?

Written by: Super Admin

உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஒருசில டேட்டாக்கள் போனில் பார்க்கும் வகையில் இருக்காது. அல்லது பார்த்தாலும் திருர்ப்தி தராத வகையில் இருக்கும். குறிப்பாக திரைப்படங்கள், பாடல்கள் போன்றவைகளை ஸ்மார்ட்போனில் பார்த்தால் திருப்தி இருக்காது.

உங்கள் ஆண்ட்ராய்டு போனை டிவியில் கனெக்ட் செய்வது எப்படி?

இவைகளை நாம் நம்முடைய தொலைக்காட்சியில் பார்த்தால் திருப்தியாக இருக்கும் என்று எண்ணுகிறீர்களா? அதற்கும் தற்போது வழி வந்துவிட்டது.

அப்டேட் செய்யவில்லை என்றால் அப்பட்டமாகிடும், ஆப்பிள் எச்சரிக்கை.!!

உங்கள் ஸ்மார்ட்போனை நீங்கள் இரண்டு வழிகளில் தொலைகாட்சியோடு இணைக்கலாம். ஒன்று வயர்லெஸ் மற்றொன்று கேபிள் மூலம். இவை இரண்டில் வயர்லெஸ் மூலம் ஸ்மார்ட்போனை தொலைக்காட்சியோடு இணைப்பது எளிது.

அறிமுகம் : ரிலையன்ஸ் நிறுவனத்தின் 'ஃபாஸ்ட் எட்ஜ்' பயனர்களுக்கு என்ன லாபம்.?

இனி ஸ்மார்ட்போனை எப்படி தொலைக்காட்சியில் இணைக்கலாம் என்பதை பார்க்கலாம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

HDMI வாங்க வேண்டும்.

HDMI என்றால் High Definition Multimedia Interface என்பதுதான் விரிவாக்கம். ஸ்மார்ட்போனை மூன்று முறைகளில் இந்த HDMI தொலைக்காட்சியுடன் இணைக்கின்றது. ஒன்று 'A' டைப். பெரிய மற்றும் ரெகுலர் சைஸ்களுக்கு உதவுகிறது. டைப் C மற்றும் டைப் D மினி மற்றும் மைக்ரோ சாதனங்களுக்கு பயன்படும். அதே நேரத்தில் C மற்றும் D போர்ட்டபிள் டிவைஸ்களுக்கும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

HDMI செட் ஆகலையா உடனே MHL-க்கு தாவுங்கள்:

ஒருசில ஆண்ட்ராய்டு போன் HDMI க்கு ஒத்துழைக்காது. எனவே இந்த நேரத்தில் உங்களுக்கான மாற்று ஏற்பாடுதான் MHL. MHL என்றல் Mobile High Definition Link என்று அர்த்தம். இதன் ஒரு முனையை உங்கள் ஆண்ட்ராய்டு போனிலும் இன்னொரு முனையில் உங்கள் தொலைக்காட்சியிலும் இணைத்தால் நீங்கள் ஆண்ட்ராய்டு போனில் பதிவு செய்த படங்களை தொலைக்காட்சியில் கண்டு மகிழலாம்.

இதுக்கு கூகுள் குரோம் எப்படி உதவுதுன்னு தெரியுமா?

கூகுள் நிறுவனத்தின் குரோம்செட் மிக எளிய அதே நேரத்தில் மலிவான விலையில் உங்கள் ஸ்மார்ட்போனை தொலைக்காட்சியில் இணைக்கும் மற்றொரு வழி ஆகும். இது வைஃபை மூலம் உங்கள் ஸ்மார்ட்போனையோ அல்லது டேப்ளட்டையோ தொலைக்காட்சியுடன் இணைக்கும்.

உங்கள் ஸ்மார்ட்போனில் குரோம்கேஸ்ட் என்ற ஆப்ஸ்-ஐ கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். இந்த ஆப்ஸ் மூலம் குரோம்செட் உங்கள் டேட்டாக்களை தொலைக்காட்சிக்கு மாற்றும்.

 

ஆண்ட்ராய்டு 4.2 வச்சுருக்கிங்களா? அப்ப உங்களுக்கு கவலையே இல்லை

உங்களுடைய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 4.2 அல்லது அதற்கு மேலும் உள்ளதா? கவலையே வேண்டாம். நீங்கள் நேரடியாகவே தொலைக்காட்சியில் இணைத்து கொள்ளலாம். ஆனால் அதற்கு உங்கள் தொலைக்காட்சியில் மிர்ரரிங் டெக்னாலஜி இருக்க வேண்டும் என்பது அவசியம். இந்த வசதி உங்கள் தொலைக்காட்சியில் இருந்தால் நேரடியாக இணைத்து மகிழலாம். மேலும் 'மிராகேஸ்ட்' என்பதும் ஒரு மாற்று வழி. இதன் மூலம் ஆன்ராய்டு போனில் உள்ள டேட்டாக்களை தொலைக்காட்சியில் மிக துல்லியமாக பார்க்கலாம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
Whether it is a Daredevil on Netflix, some viral video on Youtube, or watching the TED talks, your smartphone is a great way to access a huge amount of content without having to invest in some costly Apple TV or Set-Top box.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்