சிக்கியது நோக்கியா பி1 கான்செப்ட் அம்சங்கள் சார்ந்த தகவல்கள்.!

வெளியாகியுள்ள கான்செப்ட் யூட்யூப் வீடியோவின் கீழ் கூறப்படும் நோக்கியா பி1 ஸ்மார்ட்போன் நோக்கியாவின் அடுத்த உயர் இறுதியில் ஆண்ட்ராய்டு கருவியாக இருக்கலாம் என்ற ஒரு தோராயமான கருத்தை கொடுக்கிறது.

Written By:

நோக்கியா பிராண்ட் உரிமைகளை சொந்தமாக பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனத்தின் நோக்கியா 6 கருவியை தொடர்ந்து மேலும் சில அற்புதமான நோக்கியா-ஆண்ட்ராய்டு தொலைபேசிகளை இம்மாதம் நிகழும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2017 நிகழ்வில் அறிவிக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இது சார்ந்த பல லீக் தகவலும் கிடைத்த வண்ணம் உள்ளது. நோக்கியா பி1 ஒரு உயர் இறுதி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கருவி சார்ந்த சமீபத்திய கான்செப்ட் ஒன்று அதனை உறுதிபப்டுத்தும் வண்ணம் உள்ளது. அதனை பற்றிய விரிவான தொகுப்பே இது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

மெட்டல் ப்ரேம்

வெளியாகியுள்ள கான்செப்ட் யூட்யூப் வீடியோவின் கீழ் கூறப்படும் நோக்கியா பி1 ஸ்மார்ட்போன் நோக்கியாவின் அடுத்த உயர் இறுதியில் ஆண்ட்ராய்டு கருவியாக இருக்கலாம் என்ற ஒரு தோராயமான கருத்தை கொடுக்கிறது. உடன் இந்த வீடியோ மெட்டல் ப்ரேம்தனில் கவனம் செலுத்துகிறது, உடன் கலப்பு இரட்டை சிம் ஸ்லாட், கார்ல் ஜெய்ஸ் மற்றும் டிஸ்ப்ளேவிற்கு கீழே ஹோம் பட்டன் ஆகியவைகளையும் காட்சிப்படுத்துகிறது.

இறுதி அம்சங்கள்

நிச்சயமாக, இது பிற அனைத்து வதந்திகள் மற்றும் கசிவை போலவே தான் நோக்கியா பி1 இப்படி இருக்கலாம் என்ற துணுக்கை தரவே அன்றி இவைகள் இறுதி அம்சங்கள் ஆகிடாது. இந்த புதிய உயர் இறுதி ஸ்மார்ட்போன் பற்றி எந்த வித அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் மற்றும் ஆதாரங்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டு மறுபாடு

உடன் முன்பு வெளியான ஒரு ரஷியன் இணையதள அறிக்கையின்படி, நிறுவனத்தின் உயர்-இறுதி கருவியான நோக்கியா பி1 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆனது ஒரு நிலையான கண்ணாடி பீங்கான் வடிவமைப்பு கொண்ட 256ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு மற்றும் ஒரு உலோக சட்ட பூசிய வடிவமைப்பு கொண்ட 128ஜிபி ரோம் என இரண்டு மறுபாடுகளில் அறிமுகமாகும் என்று கூறுகிறது.

ஷார்ப் அக்வாஸ் எக்ஸ்எக்ஸ்3

இந்த தகவலின் கீழ் கூறப்படும் ஸ்மார்ட்போன் ஆனது 2016-ல் ஜப்பானில் தொடங்கப்பட்ட ஷார்ப் அக்வாஸ் எக்ஸ்எக்ஸ்3 வடிவமைப்பை அடிப்படையாக கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிஸ்ப்ளே

மேலும் நோக்கியா பி1 அம்சங்களை பொருத்தமட்டில் சமீபத்திய க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி, கார்னிங் கொரில்லா கண்ணாடி 5 பூச்சு, ஒரு 5.3 அங்குல ஐஜிஇசெட்ஒ (IGZO) டிஸ்ப்ளே, பல்பணி செய்ய உதவும் க்வால்காம் சிப்செட் உடனான 6ஜிபி ரேம் ஆகியவைகளும் உள்ளடக்கம்.

ஆண்ட் ராய்டு 7.0 நௌவ்கட்

தவிர, ரஷியன் வலைத்தள அறிக்கையானது கார்ல் ஜெய்ஸ் ஒளியியல் மூலம் இயக்கப்படும் ஒரு 22.6எம்பி பின்புற கேமிரா பற்றியும் குறிப்பிடுகிறது. பாஸ்ட் சார்ஜ் ஆதரவுடன் ஒரு 3,500எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி, மீயொலி கைரேகை சென்சார், ஐபி55 / 57 சான்றிதழ் மற்றும் பெட்டிக்கு வெளியே ஆண்ட் ராய்டு 7.0 நௌவ்கட் ஆகியவைகளும் நோக்கியா பி1 கருவியில் இடம்பெறலாம் என்கிறது.

ஹை-எண்ட் அம்சங்கள்

வெளியான குறிப்புகளின் அடிப்படையில் நோக்கியா ஆண்ட்ராய்டு கருவியானது வன்பொருள் மற்றும் மென்பொருள் வரும்போது சமரசம் செய்து கொள்ள விரும்பவில்லை என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது. எனினும் இந்த பின்னிஷ் தொழில்நுட்ப நிறுவனம் ஆண்ட்ராய்டு போரில் வெற்றி பெற பல ஹை-எண்ட் அம்சங்களை வெளியிட வேண்டும் என்பதும் அவசியமாகிறது. மேலும் பல அப்டேட்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருங்கள்.

விலை

முந்தைய தகவல்களின்படி, நோக்கியா பி1 கருவியின் 128ஜிபி மாறுபாடு சுமார் ரூ. 54,500/- என்றும் மற்றும் அதன் 256ஜிபி மாறுபாடு சுமார் ரூ.64,700/- என்றும் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Nokia P1 Concept Renders Surface Online; Tip Front Fingerprint Scanner. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்