ஆப்பிள், சாம்சங் ஓரம்போ.. வருகிறது நோக்கியா பி1 (விலை, அம்சங்கள்).!

நோக்கியா மேலுமொரு "ஹாட்" கருவியை வெளியிட திட்டமிட்டுள்ளது.!

|

உலகின் சந்து-பொந்து, இண்டு-இடுக்கு என நோக்கியாவின் மறுவருகை பற்றிய அறிமுகமே தேவையில்லை. துளியும் ஆடம்பரமின்றி சத்தம்போடாமல் வெளியான முதல் நோக்கியா ஆண்ட்ராய்டு கருவியான நோக்கியா 6 முதல் உலகம் முழுவதும் முன்பே எதிர்பார்க்கப்பட்டு அதே போல வெளியான நோக்கியா 3310 கருவி வரை நோக்கியாவின் மறுவருகை பற்றிய அறிமுகமே தேவையில்லை.

உலகின் சந்து-பொந்து, இண்டு-இடுக்கு என நோக்கியாவின் மறுவருகை பற்றிய அறிமுகமே தேவையில்லை. துளியும் ஆடம்பரமின்றி சத்தம்போடாமல் வெளியான முதல் நோக்கியா ஆண்ட்ராய்டு கருவியான நோக்கியா 6 முதல் உலகம் முழுவதும் முன்பே எதிர்பார்க்கப்பட்டு அதே போல வெளியான நோக்கியா 3310 கருவி வரை உலக ஸ்மார்ட்போன் சந்தையில் உண்டாக்கிய புயல் இன்னும் அடங்கியதாய் தெரியவில்லை. விரைவில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகள் அனைத்தும் உலக சந்தைகளை எட்டவுள்ள நிலையில் நோக்கியா மேலுமொரு "ஹாட்" கருவியை வெளியிட திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது.

நோக்கியா பி1

நோக்கியா பி1

அப்படியாக நோக்கியா பிராண்ட் பெயர் பொறிக்கப்பட்டு விரைவில் களம் காணப்போகும் கருவி சந்தேகமேயின்றி - நோக்கியா பி1 தான். நோக்கியாவின் முதன்மை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படும் இக்கருவி அவ்வாறே சூப்பர் அம்சங்களை கொண்டுள்ளது என்று தான் கூற வேண்டும்.

உலோக சட்டம்

உலோக சட்டம்

நோக்கியா பி1 ஸ்மார்ட்போன் ஒரு உலோக சட்டம் கொண்ட ஒரு நோக்கியா உயர் இறுதி ஆண்ட்ராய்டு சாதனமாக அதாவது ஒரு பிரீமியம் கருவியாக வெளியாகும். உடன் வால்யூம் மற்றும்பவர் பொத்தான்கள் வலது விளிம்பில் இருக்க, ஒரு கலப்பு இரட்டை சிம் ஸ்லாட் அதன் இடது விளிம்பில் இருக்கலாம்.

கார்ல் ஜெய்ஸ் லென்ஸ்

கார்ல் ஜெய்ஸ் லென்ஸ்

செங்குத்தாக வைக்கப்படும் நோக்கியா முத்திரையின் மேல் ஒரு கார்ல் ஜெய்ஸ் லென்ஸ் இருக்கிறது. உடன் நோக்கியா பி1 கருவி அதன் விளிம்பின் கீழே ஒரு யூஎஸ்பி டைப் சி போர்ட், ஸ்பீக்கர் கிரில் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவைகளுக்கு இடமளிக்கலாம்.

ஹோம் பட்டன்

ஹோம் பட்டன்

கருவியின் ஹோம் பட்டன் மறைமுகமாக கைரேகை ஸ்கேனர் மேலே டிஸ்ப்ளேவின் கீழே அமைத்துள்ளது மேலும் இக்கருவி வெள்ளி, கருப்பு, மற்றும் தங்கம் ஆகிய வண்ண விருப்பங்கள் வெளியான லீக்ஸ் வீடியோவில் காணப்படுகிறது.

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு

பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நோக்கியா பி1 ஸ்மார்ட்போன் ஒரு முழு எச்டி அல்லது க்யோஎச்டி திரை தீர்மானம் கொண்ட ஒரு 5.3 அங்குல டிஸ்ப்ளே அதன் மேல் கொரில்லா கிளாஸ் 5 இடம்பெறலாம்.

சேமிப்பு

சேமிப்பு

உடன் இக்கருவி சமீபத்திய ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி கொண்டுருக்கலாம். சேமிப்பு மாதிரிகளை பொறுத்தமட்டில் 6ஜிபி ரேம் கொண்ட 128ஜிபி மற்றும் 256ஜிபி என இரண்டு சேமிப்பு மாதிரிகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும்.

கேமரா

கேமரா

ஒளியியல் துறையை பொறுத்தமட்டில் நோக்கியா பி1 ஒரு ஜெய்ஸ்-சான்றளிக்கப்பட்ட 22.6-மெகாபிக்சல் சென்சார் இடம்பெறும் பின்புற கேமரா கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

பேட்டரி

பேட்டரி

இந்த ஸ்மார்ட்போன் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி57 சான்றிதழ் கொண்டும் வர உள்ளது. பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட 3500எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கலாம்.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

128ஜிபி மற்றும் 256ஜிபி என இரண்டு சேமிப்பு மாதிரிகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நோக்கியா பி1 ஸ்மார்ட்போன். இதன் 128ஜிபி நோக்கியா பி1 மாறுபாடு சுமார் ரூ.54,500/- என்ற விலை நிர்ணயத்தையும் மற்றும் 256ஜிபி மாறுபாடு ரூ.64.700/- (தோராயமாக) விலை நிர்ணயம் பெறும் என்றும் எதிர்பார்க்கலாம்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

நோக்கியா 3310 கருவியிடம் "பல்பு" வாங்கிய கேலக்ஸி எஸ்7.!

Best Mobiles in India

Read more about:
English summary
Nokia P1 Android Phone Price, Specifications, and More: All We Know So Far. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X