2017-ல் அதிரடி காட்டப்போகும் நோக்கியாவின் புத்தம் புதிய மாடல்கள்.!

நவீன டெக்னாலஜி அம்சங்களுடன் 2017-ல் வெளிவரும் நோக்கியாவின் புத்தம் புதிய மாடல்கள்

By Siva
|

ஒரு காலத்தில் செல்போன் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது நோக்கியா தான். அந்த அளவுக்கு மக்களின் மனதில் பதிந்த நோக்கியா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான போட்டி காரணமாக சற்று பின்வாங்கியது.

இந்நிலையில் மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க தற்போது புதிய மாடல்களை வெளியிட்டு வருகிறது. கடந்த மாதம் நோக்கியா 6 என்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வெளியிட்ட நோக்கியா நிறுவனம் விரைவில் பார்சிலோனாவில் நடைபெற இருக்கும் டெக்னாலஜி மாநாட்டில் பல புதிய மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது.

மூன்றாம் தரப்பு ஆஃப்ஸ்களும் அதிலுள்ள சிக்கல்களும் தீர்வுகளும்.!

நோக்கியா 8, நோக்கியா P1, நோக்கியா P1, நோக்கியா D1C, நோக்கியா ஹார்ட், நோக்கியா எட்ஜ் மற்றும் நோக்கியா Z2 பிளஸ் மாடல் ஆகியவை விரைவில் வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த போன்கள் குறித்து சற்று விரிவாக பார்ப்போம்

நோக்கியா 8:

நோக்கியா 8:

நோக்கியா 6 ஸ்மார்ட்போனை அடுத்து இந்நிறுவனம் வெளியிடும் அடுத்த மாடல் நோக்கியா 8 என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 835 SoC மற்றும் குவால்கோம் பிராஸசர் கொண்ட போன் என்று கூறப்பட்டாலும் இது உறுதி செய்யப்படவில்லை.

இந்த நோக்கியா 8 ஸ்மார்ட்போன் இரண்டு வகையில் வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது. பிரிமியம் என்று கூறப்படும் ஸ்னாப்டிராகன் 838 SoC மற்றும் 6GB ரேம் உடனும் 64 GB அல்லது 128 GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடனும் வெளிவரும் என்றும், இதற்கு மேலும் மெமரி தேவைப்பட்டால் எஸ்டி கார்ட் போடும் வசதியுடனும் வெளிவரவுள்ளது. மேலும் 24 MP கொண்ட EIS மற்றும் OIS கொண்ட கேமிரா இதில் அமையவுள்ளது. இன்னொரு மாடல் ஸ்னாப்டிராகன் 821 பிராஸசருடன் 4GB ரேம் மற்றும் மீடியம் வகை கேமிராவுடன் இருக்கும்

நோக்கியா P1:

நோக்கியா P1:

MWC 2017ல் அறிமுகமாகலாம் என்று கூறப்படும் நோக்கியா P1 மாடல் ஸ்மார்ட்போன், மிக அழகாக பார்ப்பதற்கு கவர்ச்சியான டிசைனுடன் வெளிவரவுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6 GB ரேம் மற்றும் 256 GB ஸ்டோரேஜுடன் வரவுள்ளது. 22.3 MP திறன் கொண்ட கேமிராவுடன் இந்த போன் ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட் அம்சத்துடன் வெளிவரும்

நோக்கியா D1C:

நோக்கியா D1C:

நோக்கியா D1C ஸ்மார்ட்போன் வெளிவர சற்று காலதாமதம் ஆகும் என்று கூறப்பட்டாலும் இந்த போன் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து கொண்டே தான் உள்ளது. ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர், 3GB ரேம் மற்றும் 32 GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் 128 GB எஸ்டி கார்ட் போடும் வசதி இந்த போனில் இருக்கும். மேலும் இந்த போன் 5.5 இன்ச் HD டிஸ்ப்ளேவுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறாது.

இந்த ஸ்மார்ட்போனின் படத்தில் இருந்து இதில் 16 MP மெயின் கேமிராவும், 8 MP செல்பி கேமிராவும் இருக்கும் என்றும் மேலும் இந்த போன் ஆண்ட்ராய்ட் 7.0 நெளக்ட் வகையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா ஹார்ட்:

நோக்கியா ஹார்ட்:

நோக்கியா 6 மாடல் வெளியானவுடனே நோக்கியா ஹார்ட் குறித்த தகவல்கள் இணையதளங்களில் கசிய ஆரம்பித்துவிட்டன. இந்த போன் நடுத்தர வர்க்கத்தினர்களுக்கு ஏற்றார்போல் ஒரு பட்ஜெட் போனாக இருக்கும் என்று கூறபடுகிறது.

நோக்கியா ஹார்ட் போன் 5.2 இன்ச் HD டிஸ்ப்ளேவுடன், ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசருடன், 2GB ரேம் மற்றும் 16 GB இண்டர்னல் மெமரியுடன் இருக்கும். மேலும் இதன் மெயின் கேமிரா 13MP ஆகவும், செல்பி கேமிரா 8MP ஆகவும் இருக்கும் என்று செய்திகள் கூறுகின்றன.

நோக்கியா எட்ஜ்:

நோக்கியா எட்ஜ்:

எட்ஜ் என்றால் மற்ற ஸ்மார்ட்போன்களில் வரும் அழகிய எட்ஜ் ஸ்மார்ட்போன் என்று நினைக்க வேண்டாம். நோக்கியாவை பொறுத்தவரை எட்ஜ் என்றால் வேறு அர்த்தம்.

இந்த போனில் பட்டன்களே இருக்காது என்றும் பிரைமரி டிஸ்ப்ளேவுக்கு பின்னர் ஒரு செகண்டரி டிஸ்ப்ளே இருக்கும் என்றும் அதில்தான் கீபோர்ட், நோட்டிபிகேசன் மற்றும் அனைத்து மீடியா பிளே பேக்களும் இருக்கும். மேலும் இந்த போன் 23 MP மெயின் கேமிராவுடன் இருக்கும். பிங்கர் பிரிண்ட் சென்சார், ஐரிஸ் ஸ்கேனர் உள்பட பல அம்சங்கள் இந்த போனில் உண்டு.

நோக்கியா Z2 பிளஸ்:

நோக்கியா Z2 பிளஸ்:

நோக்கியா Z2 பிளஸ் மாடல் ஸ்மார்ட்போன் கடந்த டிசம்பர் மாதம் இணையதளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன. இந்த போனில் ஸ்னாப்டிராகன் 820 சிப்செட் மற்றும் 4 GB ரேம் உள்ளதாகவும் இது ஒரு ஆண்ட்ராய்ட் 6.0.1 ஓஎஸ் உள்ள மாடல் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போனின் மற்ற தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Following the Nokia 6, Nokia 8, Nokia P1, Nokia D1C, Nokia Heart, Nokia Edge and Nokia Z2 Plus are believed to be launched at the MWC 2017. Read more...

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X