ஆப்பிளும் சாம்சங்கும் கொஞ்சம் ஓரம்போ.. உங்கப்பன் வாரான்.!

17 ஆண்டுகளுக்கு பிறகு அதே வாரக்கணக்கில் நீடிக்கும் ஒரு பெரிய பேட்டரி, அதே வலிமை மற்றும் அதே கடினத்தன்மை கொண்டு நோக்கியா 3310.!

Written By:

ஒரு நல்ல, மதிப்பான கருவியை உங்களால் கீழே வைக்க முடியாது, அதாவது வாங்காமல் தவிர்க்க முடியாது. அப்படியான ஒரு கருவிகளில் ஒன்றான நோக்கியா 3310 - திரும்பி மீண்டும் வருகிறது. இந்த தகவலை நம்பகமான மொபைல் லீக்ஸ் தகவலை வழங்கும் இவான் ப்ளாஸ் வழங்கியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆப்பிளும் சாம்சங்கும் கொஞ்சம் ஓரம்போ.. உங்கப்பன் வாரான்.!

நம்ம லோக்கல் பாஷையில் மட்டுமின்றி உலகம் முழுவதிலுமே "செங்கல் போன்ற கருவி" என்று அன்போடு அழைக்கப்படும் நோக்கியா 3310 ஆனது ஆப்பிள், சாம்சங் மற்றும் சோனி போன்ற பெரு நிறுவனங்களுக்கெல்லாம் தந்தை என்றே கூறலாம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

அதே வலிமை

17 ஆண்டுகளுக்கு முன்பு முதன்மத்தில் தொடங்கப்பட்ட நோக்கியா 3310 கருவியானது மீண்டும் அதே வாரக்கணக்கில் நீடிக்கும் ஒரு பெரிய பேட்டரி, அதே வலிமை மற்றும் அதே கடினத்தன்மை கொண்டு விரைவில் வெளியாகிறது.

விமர்சனங்கள்

மிகப்பெரிய தோல்வியை முன்பொரு காலத்தில் தழுவிய நோக்கியா மீது "ஐபோன் கருவிகளுடன் ஒப்பிடும் பொது இதில் வண்ணத்திரை இல்லை, மிகவு பழைய மாடல் என்றெல்லாம் விமர்சனங்கள் பாய நோக்கியாவின் சந்தை முன்னணி சகாப்தம் முடிவுக்கு வந்தது.

லூமியா கருவி

இடைப்பட்ட காலத்தில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் உடன் இணைந்து லூமியா கருவிகளை நோக்கியா வெளியிட்ட போதிலும் இழந்த சந்தையை நிறுவனத்தினால் மீட்க முடியாமால் போனது. அதன் பின் சரியான காலம் கனியும் வரை நோக்கியா நிறுவனம் பொறுத்து கிடந்தது.

எதிர்பாராத வண்ணம்

பின்னர் எச்எம்டி க்ளோபல் நிறுவனத்திற்கு நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் வழங்கப்பட்டது. நோக்கியா மீண்டெழுமா.?? - என்று அனைவரும் ஆர்வமுடன் காத்திருக்கும் நேரத்தில், யாரும் எதிர்பாராத வண்ணம் நோக்கியா 6 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை எந்த விதனான ஆடம்பர அறிவிப்புமின்றி வெளியிட்டது எச்எம்டி க்ளோபல் நிறுவனம்.

நோக்கியா 3310

நோக்கியா 6 - ஒரு சூடான பலகாரத்தை போல விற்பனையாகி கொண்டிருக்கும் அதே சமயத்தில் நோக்கியா 3 மாற்று நோக்கியா 5 ஆகிய கருவிகள் சார்ந்த லீக்ஸ் தகவல்களும் உள்ளன. அத்துடன் சேர்த்து நோக்கியா 3310 கருவியும் வெளியாக உள்ளதகாவுக்கும் உடன் அதன் விலை மற்ற வெளியீ டுசார்ந்த தேதி ஆகியவைகளை சேர்த்தே நமக்களித்துள்ளது ஒரு லீக்ஸ் தகவல்.!

ஆப்ஸ் கொண்டு வெளியாகுமா.?

புதிய 3310 கருவியானது பழைய 3310 போன்றே ஒரு துல்லியமான ஒரு இனப்பெருக்க கருவியாக இருக்குமா அல்லது வண்ண திரை, கேமரா மற்றும் ஆப்ஸ் கொண்டு வெளியாகுமா என்பது பற்றிய எந்த தகவலும் இல்லை.

வெளியாகுமா இல்லையா.?

வெளியான தகவலில் இருந்து கூறப்படும் நோக்கியா 3310 கருவியானது 63 டாலர்கள் என்ற விலை நிர்ணயத்தில் இந்த மாத இறுதிக்கு பின்னர் வெளியாகலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதெல்லாம் ஒருபக்கமிருக்க இக்கருவி வெளியாகுமா இல்லையா என்ற கேள்விக்கு எச்எம்டி க்ளோபல் நிறுவன பிரதிநிதி எந்த பதிலும் அளிக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Nokia is reportedly planning a relaunch of the iconic 3310 later this month. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்