அடுத்த நோக்கியா டி1சி ஸ்மார்ட்போனின் விலை & அம்சங்கள்.!?

எம்டபுள்யூசி 2017 நிகழ்வில் நோக்கியாவின் ஆண்ட்ராய்டு கருவிகளுக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்களில் ஒருவர் நீங்களென்றால் இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தகவல்கள்.!

Written By:

எந்த விதமான ஆடம்பர அறிவிப்புமின்றி தான் நோக்கியா 6 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வெளியானது அதே பாணியில் பிற நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகளும் வெளியாகலாம் என்று நம்பப்படுகிறது. ஆக, அடுத்த நோக்கியா கருவி எது என்பது மிகவும் இரகசியமாகவே உள்ளது.

அதெல்லாம் ஒருபக்கமிருக்க, வரவிருக்கும் நோக்கியா பிராண்ட் கருவி என நம்பப்படும் நோக்கியா டி1சி கருவி சமீப காலமாக இணையத்தை வட்டமடித்துகே கொண்டிருப்பதை நாம் அவ்வப்போது காண முடிகிறது. இதன் மூலம் வெற்றிகரமான நோக்கியா 6 கருவி அறிமுகத்தை தொடர்ந்து ஸ்மார்ட்போன் முன்னோடியாக திகழும் நோக்கியா நிறுவனம் அதன் டி1சி கருவியை விரைவில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

நோக்கியா டி1சி

நோக்கியா மற்றும் எச்எம்டி கூட்டணி இந்த கருவி சார்ந்த எந்தவிதமான அதிகாரப்பூர்வவெளியீட்டு தேதியையும் அறிவிக்கவில்லை மற்றும் அடிப்படையில் நோக்கியா 6 கருவியுடன் எப்படி டி1சி அக்கருவி வித்தியாசப்படும் என்பதையும் வெளிப்படுத்தவில்லை. எனினும், எண்ணற்ற வதந்திகள் இணையத்தில் வெளிப்பட்டு நோக்கியா டி1சி இப்படி இருக்கலாம் என்ற நியாயமான யோசனைகளை வழங்கி வருகிறது.

செயலி

டி1சி எனும் நோக்கியா ஸ்மார்ட்போன் சமீபத்தில் அன்டுனு பென்ஞ்மார்க் பட்டியலில் காணப்பட்டதாகவும் உடன் சில அம்சங்கள் லீக் ஆனதாகவும் தகவல்கள் வெளியாகின. அதன்படி இந்த் சாதனம் 3ஜிபி ரேம், உடன் இணைந்து க்வால்காம் ஸ்னாப்டிராகன் 430 செயலி மூலம் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

சேமிப்பு

மேலும் ஸ்மார்ட்போன் தோற்றம் பற்றி கூறுகளியில் மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 128ஜிபி வரை நீட்டிக்கும் ஆதரவு உடன் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு, ஒரு 5.5 இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா

ஒளியியல் (அதாவது கேமரா) அடிப்படையில், நோக்கியா டி1சி ஒரு 16எம்பி பின்புற கேமரா மற்றும் ஒரு 8எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கும் அதாவது சமீபத்தில் தொடங்கப்பட்ட நோக்கிய 6 கருவியை போன்றே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. உடன் இந்த் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விலை நிர்ணயம்

இக்கருவியின் விலை நிர்ணயம் பற்றிய தகவலிலும் எந்த விதமான நோக்கியா அல்லது எச்எம்டி நிறுவனத்தின் உத்தியோகபூர்வ அறிக்கை கிடையாது. வதந்திகள் படி, இந்த சாதனம் எம்டபுள்யூசி (MWC) 2017 நிகழ்வில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை வரம்பை பொறுத்தமட்டில் இக்கருவி சுமார் ரூ.12,894/- என்பதை சுற்றி நிர்ணயிக்கப்படலாம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Nokia D1C specs and price leaked ahead of launch at MWC 2017. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்