நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் லீக் ஆன தகவல்கள்.!

நோக்கியா 2017 ஸ்மார்ட்போன் குறித்த புத்தம் புதிய லீக் தகவல்களை இங்கு வழங்கியுள்ளோம். இதில் கருவி சார்ந்த பல்வேறு தகவல்கள் கிடைத்திருக்கிறது.

By Meganathan
|

2017 ஆம் ஆண்டு முதல் ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் களமிறங்க இருப்பதை நோக்கியா நிறுவனம் சில தினங்களுக்கு முன் உறுதி செய்தது. இந்நிலையில் நோக்கியா ஆண்ட்ராய்டு கருவி ஃபிளாக்ஷிப் போன் என்ற ரீதியில் சில தகவல்கள் அவ்வப்போது வெளியாகின.

தற்சமயம் வெய்போ எனும் இணையத்தளத்தில் நோக்கியா போன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் கருவி 2017 ஆம் ஆண்டு வெளியாகும் என்பது உட்படச் சில முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்களும் கசிந்திருக்கின்றன.

இரண்டு டிஸ்ப்ளே

இரண்டு டிஸ்ப்ளே

வெய்போ போஸ்ட் தகவலில் 5.2 இன்ச் மற்றும் 5.5 இன்ச் என இரு அளவு டிஸ்ப்ளே மற்றும் 2K ரெசல்யூஷன் கொண்டிருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குவால்காம் சிப்செட்

குவால்காம் சிப்செட்

2017 ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் ஸ்மார்ட்போன் என்றாலும் அவை ஸ்னாப்டிராகன் 820 சிப்செட் கொண்டு இயங்கும் என்றும் இத்துடன் 4 ஜிபி ரேம் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கேமரா பிரான்டு

கேமரா பிரான்டு

நோக்கியா ஃபிளாக்ஷிப் கருவிகளில் பிரபல Carl Zeiss பிரான்டிங் கொண்ட கேமராக்கழ் வழங்கப்படுமாம். இதே போன்ற கேமரா தான் பழைய நோக்கியா லூமியா கருவிகளிலும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வாட்டர் ரெசிஸ்டண்ட்

வாட்டர் ரெசிஸ்டண்ட்

பல்வேறு பழைய லீக் தகவல்களில் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் பல்வேறு நிறங்களில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இவை வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் கொண்டிருக்கும் எனத் தெரியவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு நௌக்கட்

ஆண்ட்ராய்டு நௌக்கட்

அதிகம் எதிர்பார்க்கப்படும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் புதிய ஆண்ட்ராய்டு பதிப்பான நௌக்கட் இயங்குதளம் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Nokia Android Smartphone Specs Leaked Online

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X