முரட்டுத்தனமான ரேம் உடன் கீக் பென்ஞ் தளத்தில் சிக்கிய நோக்கியா 9.!

சமீபத்திய கீக்பென்ஞ் தகவலின் கீழ் 2017-ஆம் ஆண்டுன் பிரதான நோக்கியா சாதனம் ஒரு சில வகைகளை விட அதிகமாக வரலாம் என்றும் குறிப்பாக 6ஜிபி ரேம் மாறுபாடு கொண்டு வரலாம் என்று கூறப்பட்டுள்ளது.

|

நோக்கியா 9 சமீபத்தில் நிறைய கசிவுகள் மற்றும் வதந்திகளைக் கண்டு வருகிறது. மே மாதத்தின் கடைசி வாரத்தில் பிரபலமான தரமதிப்பீட்டு தளமான கீக்பென்ஞ் பட்டியலில் தோன்றிய பிறகு, இந்த சாதனமானது மீண்டும் ஒரு புதிய மாறுபாடு தளத்தில் கிடைக்கப்பெற்றுள்ளது.

முரட்டுத்தனமான ரேம் உடன் கீக் பென்ஞ் தளத்தில் சிக்கிய நோக்கியா 9.!

சமீபத்திய கீக்பென்ஞ் தகவலின் கீழ் 2017-ஆம் ஆண்டுன் பிரதான நோக்கியா சாதனம் ஒரு சில வகைகளை விட அதிகமாக வரலாம் என்றும் குறிப்பாக 6ஜிபி ரேம் மாறுபாடு கொண்டு வரலாம் என்று கூறப்பட்டுள்ளது.

நோக்கியா 8 ஸ்மார்ட்போன் வதந்திகள் நீண்டகாலமாக வெளியாக அடுத்த நோக்கியா 8 தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நோக்கியா 9 சுற்றிய அதிக அளவிலான வதந்திகள் மூலம் நோக்கியா 9 தான் முதலில் வெளியாகும் என்று தெரிகிறது.

முரட்டுத்தனமான ரேம் உடன் கீக் பென்ஞ் தளத்தில் சிக்கிய நோக்கியா 9.!

வடிவமைப்பில், நோக்கியா 9 சுற்றியுள்ள பல வதந்திகள் உள்ளன. இறுதி விவரங்கள் இல்லாத நிலையில், வெளியான தகவல்களை அடிப்படியாக கொண்டு பார்த்தால் இந்த தொலைபேசியில் பின்புறம் இரட்டை கேமரா தொகுதி முன்னிலையில் உள்ளது. கூடுதலாக, தொலைபேசி தண்ணீர் மற்றும் தூசி எதிர்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. தொலைபேசி ஒப்பீட்டளவில் மெலிதான பெஸல்கள் மற்றும் பெரிய காட்சி அளவு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நோக்கியா 9 பெரும்பாலும் 2.5டி வளைந்த காட்சி மற்றும் கொரில்லா கண்ணாடிடன் பாதுகாக்கப்படும் ஒரு 5.5 அங்குல க்யூஎச்டி காட்சி கொண்டு, ஸ்னாப்டிராகன் 835 செயலி கொண்டு இயங்கலாம். மேலும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் விரிவாக்கத்திற்கான மெமரி கார்டு ஸ்லாட்டைக் கொண்டிருக்கலாம்.

கேமரா துறையை பொறுத்தம்மட்டில் ஒரு 13 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா அமைப்பு (இரு லென்ஸ்கள் தீர்மானம் மாறுபடும் அல்லது ஒரே மாதிரியானவை) மற்றும் அதே தீர்மானம் கொண்ட ஒரு முன்பக்க கேமராவையும் கொண்டிருக்கும்.

சான்றிதழ் தளங்கள் இந்த தொலைபேசிகள் இரண்டு, ஒற்றை சிம் மற்றும் இரட்டை சிம் பதிப்புகள் கொண்டு வரும் பரிந்துரைக்கின்றன. மேலும் இந்த தொலைபேசி சமீபத்திய ஆண்ட்ராய்டு பதிப்பில் இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா 9 தொலைபேசியின் வெளியீட்டு தேதி மற்றும் அதிகாரப்பூர்வமான அம்சங்கள் சார்ந்த விவரத்தில் எந்தவொரு வார்த்தையும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Nokia 9 with 6GB RAM spotted on latest GeekBench listing. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X