மீண்டும் மீண்டும் சான்றிதழ் தளத்தில் சிக்கும் நோக்கியா 9 (லீக்ஸ் அம்சங்கள்).!

தற்போது வெளியாகியுள்ள இந்த குறிப்பிடத்தக்க வகை நோக்கியா 9 சாதனம் ஆனது மாறுபட்ட ரேம் திறன்களைக் கொண்டிருப்பதாக தெரிகிறது, அதே நேரத்தில் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி செயலியும் கொண்டுள்ளது.

|

நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் வெவ்வேறு லீக்ஸ் தகவல்கள் கீக்பெஞ்ச் தரநிலை தரவுத்தளத்தில் தோன்றியுள்ளன. அப்படியாக இதுவரை மொத்தம் 30-க்கும் மேற்பட்ட நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் பட்டியல்கள் தரவுத்தளத்தில் காணப்படுகின்றன என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மீண்டும் மீண்டும் சான்றிதழ் தளத்தில் சிக்கும் நோக்கியா 9.!

இப்போது மேலும் ஒரு லீக்ஸ் தகவலாக மாடல் எண் டிஏ -1012 என்ற பெயரின் கீழ் நோக்கியா 9 ஸ்மார்ட்போன் சில சாத்தியமான அம்சங்களை வெளிப்படுத்தும் கீக்பெஞ்ச் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த குறிப்பிடத்தக்க வகை நோக்கியா 9 சாதனம் ஆனது மாறுபட்ட ரேம் திறன்களைக் கொண்டிருப்பதாக தெரிகிறது, அதே நேரத்தில் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி செயலியும் கொண்டுள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம்

4ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம்

வெளியான பட்டியல் மூலம், நோக்கியா 9 ஆனது (டிஏ-1012 மாறுபாடு) 6ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது. முந்தைய பட்டியல்களின்படி இந்த சாதனம் 4ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் வகைகளில் வெளியாகலாம் என்று தெரிவித்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட்

இதனால் நோக்கியா 9 ஆனது 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் என்ற இரண்டில் எந்த மாறுபாட்டில் தொடங்கப்படும் என்பதில் தெளிவு இல்லை. ரேம் விவரங்களைத் தவிர, இந்த நோக்கியா 9 மாறுபாடு ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் கொண்டு இயங்குவதாக தெரிகிறது.

உயர் இறுதி மாறுபாடு

உயர் இறுதி மாறுபாடு

இந்த சாதனம் சமீபத்தில் இஏ யூனியன் சான்றிதழை பெற்றது உடன் இது ஒற்றை சிம் மாறுபாடு என்பதும் தெரியவந்தது. நோக்கியா 9 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆனது ஒரு உயர் இறுதி மாறுபாடு என்பது உறுதியாகிவிட்ட நிலைப்பாட்டில் இதன் நிலையான அம்சங்கள் பட்ரோய தெளிவுதான் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை.

6ஜிபி ரேம் மாறுபாடு

6ஜிபி ரேம் மாறுபாடு

இதற்கு முன்னர் வெளியான கீக்பென்ஞ் தகவலின் கீழ் 2017-ஆம் ஆண்டுன் பிரதான நோக்கியா சாதனம் ஒரு சில வகைகளை விட அதிகமாக வரலாம் என்றும் குறிப்பாக 6ஜிபி ரேம் மாறுபாடு கொண்டு வரலாம் என்று கூறப்பட்டுள்ளது. நோக்கியா 8 ஸ்மார்ட்போன் வதந்திகள் நீண்டகாலமாக வெளியாக அடுத்த நோக்கியா 8 தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நோக்கியா 9 சுற்றிய அதிக அளவிலான வதந்திகள் மூலம் நோக்கியா 9 தான் முதலில் வெளியாகும் என்று தெரிகிறது.

தண்ணீர் மற்றும் தூசி எதிர்ப்பு

தண்ணீர் மற்றும் தூசி எதிர்ப்பு

வடிவமைப்பில், நோக்கியா 9 சுற்றியுள்ள பல வதந்திகள் உள்ளன. இறுதி விவரங்கள் இல்லாத நிலையில், வெளியான தகவல்களை அடிப்படியாக கொண்டு பார்த்தால் இந்த தொலைபேசியில் பின்புறம் இரட்டை கேமரா தொகுதி முன்னிலையில் உள்ளது. கூடுதலாக, தொலைபேசி தண்ணீர் மற்றும் தூசி எதிர்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. தொலைபேசி ஒப்பீட்டளவில் மெலிதான பெஸல்கள் மற்றும் பெரிய காட்சி அளவு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2.5டி வளைந்த காட்சி

2.5டி வளைந்த காட்சி

மேலும் நோக்கியா 9 பெரும்பாலும் 2.5டி வளைந்த காட்சி மற்றும் கொரில்லா கண்ணாடிடன் பாதுகாக்கப்படும் ஒரு 5.5 அங்குல க்யூஎச்டி காட்சி கொண்டு, ஸ்னாப்டிராகன் 835 செயலி கொண்டு இயங்கலாம். மேலும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் விரிவாக்கத்திற்கான மெமரி கார்டு ஸ்லாட்டைக் கொண்டிருக்கலாம். கேமரா துறையை பொறுத்தம்மட்டில் ஒரு 13 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா அமைப்பு (இரு லென்ஸ்கள் தீர்மானம் மாறுபடும் அல்லது ஒரே மாதிரியானவை) மற்றும் அதே தீர்மானம் கொண்ட ஒரு முன்பக்க கேமராவையும் கொண்டிருக்கும்.

வெளியீட்டு தேதி

வெளியீட்டு தேதி

சான்றிதழ் தளங்கள் இந்த தொலைபேசிகள் இரண்டு, ஒற்றை சிம் மற்றும் இரட்டை சிம் பதிப்புகள் கொண்டு வரும் பரிந்துரைக்கின்றன. மேலும் இந்த தொலைபேசி சமீபத்திய ஆண்ட்ராய்டு பதிப்பில் இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா 9 தொலைபேசியின் வெளியீட்டு தேதி மற்றும் அதிகாரப்பூர்வமான அம்சங்கள் சார்ந்த விவரத்தில் எந்தவொரு வார்த்தையும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Nokia 9 variant with 6GB RAM spotted on Geekbench once again. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X