பெஸல் லெஸ் டிசைன், டூயல் லென்ஸ் கேமிரா. நோக்கிய 9 குறித்த கசிந்த ஆச்சரிய தகவல்

பெஸல் லெஸ் டிசைன், டூயல் லென்ஸ் கேமிரா. நோக்கிய 9 குறித்த கசிந்த ஆச்சரிய தகவல்

By Siva
|

நோக்கியா நிறுவனம் தனது புதிய தயாரிப்பு போன் மாடல்கள் மற்றும் ஸ்மார்ட்போன் மாடல்களை இவ்வருடத்தின் இரண்டாவது காலிறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக HMD குளோபல் ஏற்கனவே உறுதி செய்துள்ள நிலையில் தற்போது வெளியாகவுள்ள மாடல்களில் முக்கிய மாடலான நோக்கியா 9 குறித்த சில தகவல்கள் வெளிவந்துள்ளதை பார்ப்போம்

பெஸல் லெஸ் டிசைன், டூயல் லென்ஸ் கேமிரா. நோக்கிய 9 குறித்த கசிந்த ஆச்சர

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா 9 ஸ்மார்ட்போன் உயர்தர வகையை சேர்ந்தது என்றும் இதன் சிறப்பு அம்சங்கள் குறித்தும் பார்த்தோம். இந்த போனில் இதுவரை இல்லாத வகையில் புதிய உயர் தொழில்நுட்பம் அறிமுகம் செய்ய உள்ளதால் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.44,499 என்ற அளவில் இருக்கும் என்பதையும் பார்த்தோம்.

இந்நிலையில் இந்த போன் வரும் மூன்றாவது காலிறுதியில் வெளிவர உள்ளது தற்போது உறுதியாகியுள்ளது. இந்த போன் மாடல் குறித்து ஒருசில முக்கிய விஷயங்கள் வெளியானதில் இருந்து இவை உறுதி செய்யப்பட்டுள்ளன

8 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு மிரட்டலான விலைக்குறைப்பு.!

நோக்கிய 9 மாடல் குறித்து ஏற்கனவே சில முக்கிய விஷயங்களை பார்த்த நிலையில் தற்போது மீண்டும் இந்த போன் குறித்து கசிந்துள்ள தகவலின்படி பார்த்தால் நிச்சயம் இந்த மாடலை டிசைன் செய்த டீமுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டியது அவசியம் ஆகிறது. இந்த போன் குறித்து மேலும் தெரிந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தொடர்ந்து படிக்கவும்

கவர்ச்சிகரமான பெஸல்-லெஸ் டிசைன்:

கவர்ச்சிகரமான பெஸல்-லெஸ் டிசைன்:

இனிவரும் உயர்தர தொழில்நுட்ப ஸ்மார்ட்போன்களில் ஒருசில விஷயங்கள் இருந்தே தீர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றுதான் பெஸ்ல்-லெஸ் ஸ்க்ரீன். இந்த ஸ்கீர்ன் கண்டிப்பாக நோக்கியா 9 மாடலிலும் உண்டு என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

மெலிந்த ஸ்லின் ஆன டிசைன்:

மெலிந்த ஸ்லின் ஆன டிசைன்:

பெஸல்-லெஸ் ஸ்க்ரீன் டிசைனை அடுத்து நோக்கியா 9 மாடலில் உள்ள முக்கிய அம்சம் இந்த மாடலின் வடிவம்தான். மிக மெல்லிய ஸ்லிம் டிசைனில் இந்த மாடல் வெளிவரவுள்ளது. இந்த மாடல் வெறும் 6.2 மிமீ அளவே உள்ளது. இந்த அளவிற்கு ஸ்லிம் டிசைன் உள்ள போன் ஐபோன் 7 என்பதையும் ஞாபகப்படுத்தி கொள்ளுங்கள்.

மேலும் இந்த மாடல் 5.5 இன்ச் பேனல் ஆகும். மேலும் இந்த போனின் விகிதம் 2:1 என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்ற போன்கள் 16:9 என்பது தெரிந்ததே

டூயல் லென்ஸ் கேமிரா அமைப்பு

டூயல் லென்ஸ் கேமிரா அமைப்பு

இந்த போனின் கேமிராவில் டூயல் லென்ஸ் இருக்கின்றது என்பது அனைவருக்கும் கிடைத்துள்ள புதிய செய்தி ஆகும். இந்த செய்தி இணையதளங்களில் இருந்து கசிந்துள்ள தகவலின்படி கிடைத்துள்ளது. பின்பக்கத்தில் அமைந்துள்ள இந்த டூயல் லென்ஸ் கார்ல் ஜெஸஸ் ஆப்டிக்ஸ்-இல் அமைந்துள்ளது என்பது கூடுதல் சிறப்பு

முன்பக்கத்தில் அமைந்துள்ள ஸ்பீக்கர்கள்:

முன்பக்கத்தில் அமைந்துள்ள ஸ்பீக்கர்கள்:

இணையதளங்களில் கசிந்துள்ள தகவலின் அடிப்படையில் கிடைத்த இன்னொரு செய்தி இந்த நோக்கியா 9 மாடல் ஸ்மார்ட்போனில் முன்பக்கம் இரண்டு ஸ்பீக்கர்கள் உள்ளது என்பது தான்

ஸ்னாப்டிராகன் 835 எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 835 எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டில் வெளியான சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் S8 பிளஸ் மாடலில் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835 ஆக்டோகோர் SoC இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. கேலக்ஸி S8 மாடலை அடுத்து இதே ஸ்னாப்டிராகன் 835 அம்சம் இந்த நோக்கியா 9 மாடலிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Nokia 9 has been envisioned in this new set of concept renders with a bezel-less design and dual-lens camera. The Nokia 9 concept shows the attractive design of the phone. The smartphone is believed to be launched in Q3 with a price tag of Rs. 44,999.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X