மிரட்டும் அம்சங்களுடன் மிரட்டும் விலையில் - நோக்கியா 9.!

இவ்வளவு பெரிய விலை நிர்ணயத்தில் நோக்கியா கருவி வெளியாகிறது என்றால் அதற்கு என்ன காரணம்.? என்னென்ன அம்சங்கள் கொண்டுள்ளது.?

|

ஐகானிக் மொபைல் உற்பத்தியாளரான நோக்கியா நிறுவனம் அதன் மருவருகையை உறுதி செய்யும் நோக்கத்தில் அதன் 3 தலைமை ஸ்மார்ட்போன் மற்றும் நமது கனவு கருவியான நோக்கியா 3310 ஆகிய கருவிகளை அறிமுகம் செய்ததை நாம் அறிவோம்.

மிரட்டும் அம்சங்களுடன் மிரட்டும் விலையில் - நோக்கியா 9.!

அதனை தொடர்ந்து நோக்கியா அதன் பிளாக்ஷிப் கருவியான நோக்கியா 9 ஆண்ட்ராய்டு கருவியை களமிறக்கவுள்ளது உறுதியாகிவிட்டது. சமீபத்திய தகவலில் இருந்து அக்கருவியில் ஐரிஸ் ஸ்கேனர், கார்ல் ஜேயிஸ் கேமராக்கள் மற்றும் ஒரு க்வாட்எச்டிஓல்இடி டிஸ்ப்ளே ஆகிய அம்சங்கள் இடம்பெறும் என்பது அறியப்பட்டது.

இப்போது நோக்கியா 9 கருவியின் விலை நிர்ணயம் உட்பட இந்திய வெளியீடு எப்போது மேலும் என்னென்ன சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது ஆகிய பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ரூ.44,999/-

இந்தியாவில் ரூ.44,999/-

வெளியாகியுள்ள புதிய அறிக்கையின்படி, இந்த ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தைகளில் 749யூரோ என்ற விலையிலும், ஐக்கிய மாநில நாடுகளில் 699 டாலர்கள் என்றும் மற்றும் இந்தியாவில் ரூ.44,999/- என்ற விலை நிர்ணயத்தையும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிற விலை நிர்ணயங்களோடு ஒப்பிடும் போது இந்திய விலை நிர்ணயம் குறைவாக உள்ளதை கவனிக்க வேண்டியது அவசியம்.

அட்ரெனோ  540 ஜிபியூ

அட்ரெனோ 540 ஜிபியூ

நோக்கியா 9 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு க்வாட் எச்டி கொண்ட 5.5 அங்குல ஓல்இடி டிஸ்ப்ளே, ஸ்னாப்ட்ராகன் 835 செயலி, அட்ரெனோ 540 ஜிபியூ ஆகிய அம்சங்களோடு ஒரு பாரிய 6ஜிபி ரேம் கொண்டு வெளியாகும் என்று வெளியான அறிக்கை கூறுகிறது.

ஆண்ட்ராய்டு நௌவ்கட்

ஆண்ட்ராய்டு நௌவ்கட்

அதுமட்டுமின்றி க்விக்சார்ஜ் 4 ஆதரவுடனான ஒரு 3,800எம்ஏஎச் பேட்டரி,128ஜிபி அளவிலான உள் சேமிப்பு மற்றும் பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு நௌவ்கட் 7.1.2 64 கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேமரா

கேமரா

இமேஜிங் துறையை பார்த்தல் இந்த ஸ்மார்ட்போன் ஒரு 12எம்பி செல்பீ கேமராவும்,ஒரு 22எம்பி இரட்டை லென்ஸ் கார்ல் ஜெய்ஸ் பின்புற கேமராவும் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரிஸ் ஸ்கேனர்

ஐரிஸ் ஸ்கேனர்

கூடுதலாக இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்8 கருவி கொண்டுள்ள ஒரு விரல் அச்சு சென்சார், ஐபி68 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு மற்றும் "நோக்கியா ஓஸோ ஆடியோ" மேம்பாடுகள் உடன் ஒரு ஐரிஸ் ஸ்கேனர் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்னாப்ட்ராகன் 660 சிப்செட்

ஸ்னாப்ட்ராகன் 660 சிப்செட்

மேலும் நோக்கியா நிறுவனம் அதன் நோக்கியா 8 மற்றும் நோக்கியா 7 என்ற இரண்டு நோக்கியா வரிசை கருவிகள் சார்ந்த பணியில் ஈடுபடுவதாகவும் தெரிகிறது. அந்த கருவிகளில் க்வால்காம் செயலியின் வரவிருக்கும் ஸ்னாப்ட்ராகன் 660 சிப்செட் இடம்பெறலாம் என்றும் வதந்தி நிலவுகிறது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

நோக்கியா 7 கருவியானது முழு எச்டி டிஸ்ப்ளே கொண்டு வெளியாக, மறுபக்கம் நோக்கியா 8 ஒரு க்வாட்எச்டி டிஸ்ப்ளே கொண்டு வெளிவரலாம். கூடுதலாக, இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஒரு உலோக யூனிபாடி வடிவமைப்பு மற்றும் பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு நௌவ்கட் கொண்டிடு இயக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காலாண்டிற்கு முன்னர்

காலாண்டிற்கு முன்னர்

ஸ்னாப்ட்ராகன் 835 கொள்முதல் பிரச்சினைகள் காரணமாக, நோக்கியா 9 கருவியானது 2017-ஆமாம் ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்கு முன்னர் தொடங்கப்பட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கலாம், அதாவது ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையே வெளியாகலாம்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

இந்த ஆண்டில் எதிர்பார்க்கப்படும் மிகப்பெரிய 5 மாடல் ஸ்மார்ட்போன்கள்.!

Best Mobiles in India

Read more about:
English summary
Nokia 9 to be released in Q3 2017, may cost Rs 44,999 in India. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X