மிகவும் சக்திவாய்ந்த நோக்கியா 7 மற்றும் 8 (விலை, அம்சங்கள், வெளியீடு).!?

இதுதான் நோக்கியாவின் மிகவும் சக்தி வாய்ந்த கருவியாக திகழும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.!

|

நடந்து முடிந்த மொபைல் வேர்லட் காங்கிரஸ் 2017 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா கருவிகளோடு அந்நிறுவனம் தன் தயாரிப்புகளை நிறுத்திக்கொண்டது என்றும், உலகளாவிய வெளியீட்டுக்கு பின்னர் அதிலிருந்து ஒரு ஆண்ட்ராய்டு கருவியை வாங்கிக்கொள்ளலாம் என்றும் ஒரு முடிவுக்கு வந்து விட வேண்டாம்.

உண்மை என்னவென்றால் - "அதெல்லாம் சும்மா ஒரு ட்ரெயிலர் தான் கண்ணா.. இன்னும் மெயின் பிக்சர் இருக்கு.!" - அதாவது எம்டபுள்யூசி 2017 நிகழ்வில் அறிவிக்கப்படாத நோக்கியா கருவிகளும் உள்ளன மற்றும் அவைகள் மிகவும் சக்திவாய்ந்த நோக்கியா கருவிகளாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.!

நோக்கியா 7 மற்றும் நோக்கிய 8

நோக்கியா 7 மற்றும் நோக்கிய 8

சமீபத்தில் வெளியான நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகள் மற்றும் நோக்கியா 3310 பீச்சர் மொபைல் தவிர்த்து நோக்கியா பி1 சார்ந்த தகவல்கள் மட்டுமே தான் வெளியாகின. அதனால் அடுத்து வெளியாகப்போகும் கருவி அது தான் என்று எண்ணத்தொடங்கும் இந்நேரத்தில் நோக்கியா 7 மற்றும் நோக்கிய 8 ஆகிய இரண்டு கருவிகள் சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்

மிகவும் சுவாரசியமாக இந்த இரண்டு கூறப்படும் ஸ்மார்ட்போன்களுமே ஸ்னாப்டிராகன் 653 இன்றி மேம்படுத்தப்பட்ட ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் கொண்டு இயங்கும். இதனால் மொபைல் ஹீட்டிங் பிரச்சனைகு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்பலாம்.

உலோக யூனி பாடி

உலோக யூனி பாடி

அதுமட்டுமின்றி சிறப்பான மிட்-ரேன்ஜ் போன்களாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த இரண்டு கருவிகளும் மேலும் சில அருமையான அம்சங்கள் - அதாவது முழு எச்டி மற்றும் க்யூஎச்டி டிஸ்ப்ளே கொண்டு முறையே மெல்லிய பெசல்கள் மற்றும் சிக் உலோக யூனி பாடி பிரேம்கள் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடிவமைப்பில் மாற்றங்கள்

வடிவமைப்பில் மாற்றங்கள்

மேலும் இக்கருவிகள் வடிவமைப்பானது ஏற்கனவே அறிமுகமான நோக்கியா 6 கருவியில் இருந்து சற்று வித்தியாசமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கருவிகளின் பின்புற (ரியர்) வடிவமைப்பில் மாற்றங்கள் எதிர்பார்க்கலாம்.

சாம்சங் வடிவமைப்பு குழப்பம்

சாம்சங் வடிவமைப்பு குழப்பம்

ஏனெனில் நோக்கியா மிகவும் ஒரே மாதிரியான மெல்லிய வடிவிலான கருவிகளை வெளியிட்டால் பல ஆண்டுகளுக்கு முன்னர் சாம்சங் நிறுவனத்துடன் ஏற்பட்ட வடிவமைப்பு குழப்பம் மீண்டும் ஏற்படலாம் அதனால் நோக்கியா நிறுவனம் வடிவமைப்பில் அவ்வப்போது மாற்றங்கள் நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பான கேமரா

சிறப்பான கேமரா

உடன் நோக்கியா 7 மற்றும் நோக்கியா 8 ஆகிய இரண்டு கருவிகளும் நோக்கியா 6 கருவியின் கேமராவை விட சிறப்பான ஒரு கேமரா கொண்டு வரும். ஏனெனில் இது மிட்-ரேன்ஜ் கருவிகள் தான் ஆனால் சற்று விலையுயர்ந்த மிட்-ரேன்ஜ் கருவிகளாகும்.

பியூர்வியூ ஒளியியல் தொழிநுட்பம்

பியூர்வியூ ஒளியியல் தொழிநுட்பம்

நோக்கியா நிறுவனம் கார்ல்-ஜெய்ஸ் ஒளியியல் பயன்படுத்தவில்லை என்று அறிவித்த பின்னர் முன்பொரு காலத்தில் லூமியா வரிசையில் பயன்படுத்தப்பட்ட பியூர்வியூ (PureView) ஒளியியல் தொழிநுட்பம் ஆனது இப்போது நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் எச்எம்டி க்ளோபல் நிறுவனம் மூலம் பயன்படுத்தப்படுமா என்பது பற்றிய எந்த வார்த்தையும் இல்லை.

'பெரிய' சென்சார்கள்

'பெரிய' சென்சார்கள்

ஆனால் வெளியான தகவலின்படி இக்கருவிகள் பெரிய "சென்சார்களை" கொண்டிருக்கும் அதாவது நோக்கியா 3, 5 மற்றும் 6 ஆகிய கருவிகளை விட 'பெரிய' சென்சார்கள் கொண்டிருக்கும் என்று உறுதிப்படுத்துகிறது.

ஆண்ட்ராய்டு நௌவ்கட் 7.0

ஆண்ட்ராய்டு நௌவ்கட் 7.0

உடன் நோக்கியா 7 மற்றும் நோக்கியா 8 கருவிகளில் பிங்கர் பிரிண்ட் மற்றும் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு உடன் பெரிய பேட்டரிகள் மற்றும் ஆண்ட்ராய்டு நௌவ்கட் 7.0 ஆகிய அம்சங்களும் எதிர்பார்க்கபடுவதாக அறிவித்துள்ளது.

வெளியீடு

வெளியீடு

எச்எம்டி நிறுவனத்தின் திட்டத்தின்படி இந்த இரண்டு போன்களுமே நிறுவனத்தின் தலைமை கருவிகளான நோக்கியா 9 அல்லது நோக்கியா பி1 ஆகிய கருவிகளுடன் இணைந்து இந்த மே அல்லது ஜூன் மாதம் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

நோக்கியா பி1 - இதெல்லாம் அப்படியே நடந்தால்.. ஒரு ஆர்டர் உறுதி.!

Best Mobiles in India

English summary
Nokia 7 and Nokia 8 with Snapdragon 660 rumoured to come in May. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X