ஒருவழியாக நோக்கியா 6, 5, 3, நோக்கியா 3310 விலை விவரங்கள் வெளியாகின.!

எந்தெந்த நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் என்னென்ன விலை நிர்ணயம் பெற்றுள்ளனம் என்னென்ன அம்சங்கள் கொண்டுள்ள என்பதை பற்றிய விரிவான தொகுப்பு.!

|

இந்திய மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த நோக்கியா கருவிகளின் வருகை மிகப்பெரிய காத்திருப்புக்கு பின்னர் அடுத்த மாதம் நிகழ்வுள்ளது. இந்த இந்திய வெளியீட்டில் நோக்கியா 6, நோக்கியா 5, நோக்கியா 3 மற்றும் கிளாசிக் கருவியான நோக்கியா 3310 (2017 மாடல்) ஆகிய கருவிகள் இந்திய கரைக்கு வந்து சேரவுள்ளன.

நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகளுக்காக வேறு எந்த கருவிகளையும் வாங்காமல் காத்திருக்கும் இந்திய நோக்கியா பிரியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்ம் இக்கருவிகள் சார்ந்த அம்சங்கள் தெரிய வந்தாலும் விலை நிர்ணயம் சார்ந்த விவரங்கள் தெரியாமல் தவித்து வந்தனர். இப்போது இந்திய வெளியீடு உறுதியாகியுள்ளதை தொடர்ந்து நோக்கியா கருவிகள் மீதான இந்திய விலை நிர்ணயம் சார்ந்த தகவ்லகள் வெளியாகியுள்ளது.

நோக்கியா 3310

நோக்கியா 3310

வெளியான நம்பகமான தகவலின் கீழ் நோக்கியா 3310 கருவியானது ரூ.4,000/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ளது என்று அறிக்கை மேற்கோளிட்டு காட்டுகிறது. டிஸ்ப்ளே தொழில்நுட்பம் என்று வரும்போது புதிய நோக்கியா 3310 ஆனது கிளாசிக் 3310 கருவியை விட பல மெயில் தூரம் அதிக பாய்ச்சலை வழங்குகிறது. அதாவது வண்ணத்திரை கொண்டுள்ளது. வழக்கற்றுபோன ஒற்றை நிற காட்சிகள் காலம் மாறி வண்ண திரை கொண்டு நோக்கியா 3310 வெளியாகும் என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

இந்த புதிய நோக்கியா 3310 ஆனது 120 பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்ட ஒரு 2.4 அங்குல டிஸ்ப்ளே கொண்டு வருகிறது. இதன் மூலம் 3310 டிஸ்ப்ளே ஆனது பெரிய புரட்சி என்றில்லாமல் ஒரு போதுமான அளவு கொண்ட டிஸ்ப்ளேவாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். அதுமட்டுமின்றி நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமைகளை பெற்றுள்ள எச்எம்டி நிறுவனம், புதிய நோக்கியா 3310 கருவியின் துருவமுனைப்பட்ட (போலரைஸ்டு) மற்றும் கர்வுடு ஸ்க்ரீன் விண்டோ, சூரிய ஒளியில் நல்ல வாசிப்பு திறனை வழங்கும் என்றும் கூறியுள்ளது.

கேமரா

கேமரா

இந்த புதிய நோக்கியா 3310 கருவி அதன் முன்னோடி போலல்லாமல் ஒரு எல்இடி ப்ளாஷ் கொண்ட ஒரு 2 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது, செல்பீ கேமரா கிடையாது. ஸ்னேக் கேம் ஸ்னேக் கேம் - ஞாபகம் இருக்கிறதா.??? - அந்தக்காலத்து போதையான வீடியோ கேம் ஆன நோக்கியா 3310 பிரபல ஸ்னேக் கேம் ஆனது அப்டேட் செய்யப்பட்டு இந்த புதிய நோக்கியா 3310 கருவியிலும் இடம் பெற்று நம்மை மீண்டும் அடிமைபப்டுத்த வருகிறது.

"கொடூரமான பேட்டரி லைஃப்"

அதே எளிய நான்கு பொத்தான் கேம் ஆன ஸ்னேக் இந்த புதிய பதிப்பில் அதற்கே உரிய எளிய 2டி கேம் ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரே மாற்றம் என்னவென்றால் பழைய ஒரு ஒரே வண்ணமுடைய தோற்றத்திற்கு பதிலாக ஒரு மல்டிகலர்டு கலை பாணியில் வெளியாகியுள்ளது. எல்லாவற்றிக்கும் மேலாக நவீன கால ஸ்மார்ட்போன்களை தூக்கி சாப்பிடும் வண்ணம் புதிய நோக்கியா 3310 ஒரு "கொடூரமான பேட்டரி லைஃப்" கொண்டுள்ளது. பழைய கருவியை விட 10 மடங்கு அதிகமான பேட்டரி திறன் கொண்டு இக்கருவி வெளியிடப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ தளத்தில் இக்கருவி ஒரு மாத காலம் காத்திருப்பு நேரம் மற்றும் 22 மணி நேர பேச்சு நேரம் வழங்குமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நோக்கியா 3

நோக்கியா 3

நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் வரிசை கருவியான நோக்கியா 3 கருவியை பொருத்தம்மட்டில் ரூ.9824/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ளது. பளபளப்பான நீளம், வெள்ளி, மேட் பிளாக், காப்பர் ஆகிய வண்ண மாறுபாடுகளில் கிடைக்கும் இக்கருவி 5.0-இன்ச் எச்டி (1280x720p) ஐபிஎஸ் எல்சிடி திரை 2.5டி உடன் செதுக்கப்பட்டுள்ள கார்னிங் கொரில்லா கண்ணாடி டிஸ்பிளே கொண்டுள்ளது.

இதர சிறப்பம்சங்கள்

இதர சிறப்பம்சங்கள்

இயங்குதளம் : கொண்ட 1.3ஜிகாஹெர்ட்ஸ் மீடியா டெக் (எம்டிகே 6737) உடனான க்வாட்-கோர் கொண்ட ஆண்ட்ராய்ட் 7.0 நௌவ்கட்
கூகுள் அசிஸ்டண்ட் : உண்டு
ரேம் : 2ஜிபி
சேமிப்பு : 16ஜிபி, 128ஜிபி வரை விஸ்தரிக்கலாம்

கேமரா

கேமரா

செல்பீ கேமரா : 8எம்பி
ரியர் கேமரா : 8எம்பி
பேட்டரி : 2650எம்ஏஎச்
நெட்வர்க் : 4ஜி-எல்டிஇ

நோக்கியா 5

நோக்கியா 5

5.2-அங்குல எச்டி (1280x720p) ஐபிஎஸ் எல்சிடி திரை 2.5டி செதுக்குதல் கார்னிங் கொரில்லா கண்ணாடி டிஸ்பிளே கொண்ட மற்றொரு ஆண்ட்ராய்டு சாதனமான நோக்கியா 5 இந்திய சந்தையில் ரூ.13,357/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ளதாக வெளியான தகவல் சுட்டிக் காட்டுகிறது.

இதர சிறப்பம்சங்கள்

இதர சிறப்பம்சங்கள்

வண்ணம் மாறுபாடு : டெம்பர்டு ப்ளூ, வெள்ளி, மேட் பிளாக், காப்பர்
இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட்
ப்ராசஸர் : க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 430 ஆக்டா-கோர் சிபியூ
கூகுள் அசிஸ்டண்ட் : உண்டு

கேமரா

கேமரா

ரேம் : 2ஜிபி
சேமிப்பு : 16ஜிபி, 128ஜிபி வரை விஸ்தரிக்கலாம்
செல்பீ கேமரா : 8எம்பி
ரியர் கேமரா : 13எம்பி
பேட்டரி : 3000எம்ஏஎச்
நெட்வர்க் : 4ஜி-எல்டிஇ

நோக்கியா 6

நோக்கியா 6

மிகவும் அதிக அளவில் எதிர்பார்ப்புக்கு உலாகியுள்ள நோக்கியா 6 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆனது ரூ.21,131/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ளது. ஆர்ட் பிளாக் (வரையறுக்கப்பட்ட பதிப்பு), மேட் பிளாக், டெம்பீரட் ப்ளூ, சில்வர், காப்பர் ஆகிய வண்ண மாறுபாடுகளில் கிடைக்கும் இக்கருவி 5.5-இன்ச் எச்டி ஐபிஎஸ் எல்சிடி திரை 2.5டி உடன் செதுக்கப்பட்டுள்ள கார்னிங் கொரில்லா கண்ணாடி டிஸ்பிளே கொண்டுள்ளது.

இதர சிறப்பம்சங்கள்

இதர சிறப்பம்சங்கள்

இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட்
ப்ராசஸர் : க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 430 ஆக்டா-கோர் சிபியூ
கூகுள் அசிஸ்டண்ட் : உண்டு
ரேம் : 3ஜிபி/4ஜிபி
சேமிப்பு : 32ஜிபி/64ஜிபி, 128ஜிபி வரை விஸ்தரிக்கலாம்

கேமரா

கேமரா

செல்பீ கேமரா : 8எம்பி
ரியர் கேமரா : 16எம்பி
பேட்டரி : 3000எம்ஏஎச்
நெட்வர்க் : 4ஜி-எல்டிஇ

Best Mobiles in India

English summary
Nokia 6, 5, 3, Nokia 3310 (2017) tipped to hit Indian stores next month; price-range details revealed. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X