2016 பட்டையை கிளப்பும் ஸ்மார்ட்போன் அம்சங்கள்.!!

By Meganathan
|

ஸ்மார்ட்போன் வளர்ச்சியின் வேகம் அவைகளின் விற்பனையை வைத்தே அறிந்து கொள்ள முடியும். அதுவும் ஸ்மார்ட்போன் விற்பனையில் உலகின் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் புதிய தொழில்நுட்பங்கள் வெகு விரைவில் பயன்பாட்டிற்கு வருவதை இதற்கு சாட்சியாக கூறலாம்.

அந்த வகையில் இந்திய ஸ்மார்ட்போன்களில் இந்தாண்டில் புகுத்தப்பட இருக்கும் அம்சங்களில் குறிப்பிடத்தக்க அம்சங்களை பற்றி விரிவாக ஸ்லைடர்களில் பாருங்கள்..

வயர்லெஸ் சார்ஜிங்

வயர்லெஸ் சார்ஜிங்

துவக்கத்தில் சில கருவிகளில் மட்டும் வழங்கப்பட்ட இந்த அம்சத்தினை பயன்படுத்த தனியே ஒரு கருவியை வாங்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் ஏர்ஃபியூல் நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பம் பழைய முறைகளை விட சிறப்பானதாக இருக்கும்.

ஹெட்போன் ஜாக்

ஹெட்போன் ஜாக்

3.5 எம்எம் ஜாக் சில காலமாக அனைத்து தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கின்றது என்ற நிலையிலி இனி அதற்கான அவசியம் ஏற்படாது என்றே கூற வேண்டும். இனி வரும் கருவிகளில் ஹெட்போன் ஜாக் இல்லாமல் பெரும்பாலும் ப்ளூடூத் அல்லது மற்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தப்படலாம்.

டூயல் டிஸ்ப்ளே

டூயல் டிஸ்ப்ளே

சிறியதில் துவங்கி பெரியதாகி வரும் ஸ்மார்ட்போன் திரைகளில் புதியதாக கூடுதல் திரை வழங்கப்படும் வழக்கம் துவங்கியுள்ளது. ஏற்கனவே எல்ஜி நிறுவனம் இரு திரை கொண்ட கருவிகளை அறிமுகம் செய்து விட்ட நிலையில் விரைவில் மற்ற நிறுவனங்களும் இதே வழக்கத்தை பின் தொடரலாம். இரண்டாவது திரையில் நோட்டிபிகேஷன், மின்னஞ்சல், உள்ளிட்டவைகளை பயன்படுத்த முடியும்.

மெமரி

மெமரி

கொஞ்ச நாட்களாக 16ஜிபி குறைந்த அளவு இன்டர்னல் மெமரியாக இருந்து வரும் நிலையில் இன்று இந்த வழக்கம் மெல்ல மாற்றம் அடைகின்றது. இன்று வெளியாகும் பெரும்பாலான கருவிகளில் குறைந்த பட்சம் 32 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்படுகின்றது.

4கே திரை

4கே திரை

இன்று பெரும்பாலான கருவிகளிலும் 2கே திரை வழங்கப்படுகின்றது, ஆனால் 4கே திரை சோனி இசட்5 ப்ரீமியம் கருவியில் மட்டுமே 4கே தொழில்நுட்பம் வழங்க முயற்சிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த கருவியிலும் சில நேரங்களில் 4கே சரியாக வேலை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கின்றது. ஆனால் விர்ச்சுவல் ரியால்டி நாளுக்கு நாள் பிரபலமடைந்து வருவதால் 4கே தொழில்நுட்பம் கொண்ட கருவிகளையும் வேகமாக எதிர்பார்க்கலாம்.

பிரஷர் சென்சிட்டிவ்

பிரஷர் சென்சிட்டிவ்

ஸ்மார்ட்போன் சந்தையில் 3டி டச் அம்சத்தை முதலில் அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம் தான். அந்நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் ப்ளஸ் கருவிகளில் இந்த அம்சம் வழங்கப்பட்டது. ஹார்டுவேர் சார்ந்த இந்த அம்சத்தை வழங்கும் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தை பின்பற்றுகின்றது என்ற பெயர் பெற்று விடும் என்பதால் பல நிறுவனங்களும் இந்த அம்சத்தினை வழங்காமல் இருக்கின்றன.

VoLTE

VoLTE

வாய்ஸ் ஓவர் எல்டிஈ தொழில்நுட்பம் மூலம் இதே அம்சம் கொண்ட கருவிகளுடன் சிறப்பான வாய்ஸ் கால் அனுபவத்தை பெற முடியும். இதனால் கால் டிராப் பிரச்சனை வழக்கத்தை விட குறைவாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அம்சம் ஏற்கனவே பல கருவிகளில் கிடைக்கின்றது என்ற நிலையில் விரைவில் இந்த அம்சம் பல்வேறு கருவிகளிலும் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐரிஸ் ஸ்கேனர்

ஐரிஸ் ஸ்கேனர்

தற்சமயம் பெரும்பாலான கருவிகளிலும் கைரேகை ஸ்கேனர்கள் வழங்கப்படுகின்றன. இதோடு குறைந்த விலை பட்ஜெட் கருவிகளிலும் இந்த அம்சம் வழங்கப்படுவதால் இந்த ஆண்டு இன்னும் பல்வேறு கருவிகளிலும் கைரேகை ஸ்கேனர் அம்சத்தை எதிர்பார்க்க முடியும்.

டூயல் கேமரா

டூயல் கேமரா

கடந்த சில ஆண்டுகளில் டூயல் கேமரா கொண்ட கருவிகள் வெளியாகி வருகின்றது. சிறப்பான புகைப்படங்களை வழங்குகின்றது என்பதால் இந்த வகை கேமராக்கள் இந்த ஆண்டு வெளியாகும் பல்வேறு கருவிகளிலும் வழங்கப்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. சில நிறுவனங்கள் இந்த பட்ஜெட் விலையில் கருவிகளிலும் இந்த அம்சத்தினை வழங்க துவங்கி விட்டதால் விரைவில் மற்ற கருவிகளிலும் இந்த அம்சத்தினை எதிர்பார்க்க முடியும்.

லை-பை

லை-பை

அடுத்த தலைமுறை வயர்லெஸ் டேட்டா பரிமாற்று தொழில்நுட்பம் லை-பை என அழைக்கப்படுகின்றது. தற்சமயம் பரவலாக பயன்டுத்தப்பட்டு வரும் வை-பை தொழில்நுட்பத்தில் ரேடியோ ஃப்ரீக்வன்ஸி சிக்னல்கள் பயன்படுத்துகின்றது. ஆனால் லை-பை தொழில்நுட்பத்தில் லைட் ஸ்பெக்டரம் பயன்படுத்தப்பட இருப்பதால் இண்டர்நெட் வேகம் பல மடங்கு அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது. மேலும் இந்த அம்சம் இந்த ஆண்டில் வெளியாகும் கருவிகளில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

போன் என்றால் இப்படி தான் இருக்கனும் : ஆங்.!!


மொபைலில் மெமரி காலியா, 2 நிமிடத்தில் தூக்குவது எப்படி.??


லாவா வி5 : ஏன் வாங்க வேண்டும்..? 5 காரணங்கள்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
New Smartphone Features to expect in 2016 Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X