Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

புதிய லுமியா ஸ்மார்ட்போன்களை வழங்கும் நோக்கியா!

Updated: Monday, March 25, 2013, 15:29 [IST]

new nokia lumia series phones leaked
லுமியா வரிசையில் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாவதாக ஒரு தகவல் காற்று வாக்கில் கசிந்துள்ளது.

நோக்கியாவின் விற்பனை சரிந்துள்ளதாகவும், ஸ்மார்ட்போனில் மார்கெட்டில் நோக்கியா நிறுவனத்தால் சிறப்பாக ஈடு கொடுக்க முடியவில்லை என்றும் பலவாறு பேச்சுகள் அடிபட்டு வருகின்றன.

ஆனால் நோக்கியா நிறுவனம் தனது முன்னேற்றத்தில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறது. லுமியா-920, லுமியா-950 மற்றும் லுமியா-1001 என்ற புதிய லுமியா வரிசை ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக இருக்கின்றன.

புதிய விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் ஸ்மார்ட்போன்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்ட போது, அதில் இந்த லுமியா வரிசை ஸ்மார்ட்போன்களின் பெயர்களும் வெளியாகி உள்ளது.

இது மட்டும் அல்லாது நோக்கியா-510 மற்றும் நோக்கியா-805 என்ற இன்னும் இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகமாவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் பெல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி கொண்டு இயங்கும்.

இங்கு கூறப்பட்டுள்ள எந்த ஸ்மார்ட்போனுமே எப்போது அறிமுகமாகும்? இதன் தொழில் நுட்ப வசதிகள் என்ன? என்பது போன்ற விவரங்கலெல்லாம் இன்னும் ஏதும் வெளியாகவில்லை.

Story first published:  Thursday, July 12, 2012, 16:18 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll