முதல் இடத்தில நோக்கியா மீதமுள்ள 4 இடங்களில் என்னென்ன கருவிகள்.?

எம்டபுள்யூசி 2017 நிகழ்வில் மிகவும் எதிர்பார்க்கப்படும் டாப் கருவிகள் என்னென்ன என்பதை கிடைக்கப்பெற்ற அம்சங்கள் சார்ந்த குறிப்புகளுடன் பட்டியலிடுகிறது இந்த தொகுப்பு.!

|

இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் மிகவு ஒரு சூடான தொழில்நுட்ப நிகழ்வு தான் - எம்டபுள்யூசி 2017 எனப்படும் மொபைல் வேலர்ட் காங்கிரஸ் 2017 நிகழ்வு. கடந்த சில ஆண்டுகளாக மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்வில் சில பெரிய ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்படுவதை பார்க்க முடிகிறது மற்றும் இந்த ஆண்டும் அதேதான் நிகழப்போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.!

அப்படியாக வெளியாகலாம் என்று ,மிகவும் எதிர்பார்க்கப்படும் டாப் கருவிகள் என்னென்ன என்பதை கிடைக்கப்பெற்ற அம்சங்கள் சார்ந்த குறிப்புகளுடன் பட்டியலிடுகிறது இந்த தொகுப்பு. சந்தேகமே வேண்டாம் - நோக்கியா கருவிக்கு தான் முதல் இடம், மீதமுள்ள 4 இடங்களை ஆக்கிரமித்துள்ள கருவிகள் என்னென்ன என்பது தான் இங்கு கேள்வி.!!

டாப்#05 ஹூவாய் பி10

டாப்#05 ஹூவாய் பி10

சீன நிறுவனத்தின் புதிய தலைமை கருவியான இது சார்ந்த கசிவுகளின் அடிப்படையில் ஒரு 5.5 அங்குல எச்டி எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட வளைந்த டிஸ்ப்ளே உடன் முன்பக்கம் ஒரு கைரேகை ஸ்கேனர் கொண்டு ஆண்ட்ராய்டு நௌவ்கட் மூலம் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹூவாய் பி10 பற்றிய மிகவும் சுவாரசியமான விடயம் என்னவென்றால் இதில் சந்தேகத்திற்கு இடமின்றி அருமையான இமேஜிங் திறன்கள் அதாவது ஒரு இரட்டை 12எம்பி பின்புற கேமரா அமைப்பு மற்றும் ஒரு 8எம்பி முன் கேமரா கொண்டுருக்கும்.

டாப்#04 எல்ஜி ஜி6

டாப்#04 எல்ஜி ஜி6

ஒரு 5.7-அங்குல (2880 x 1440) க்வாட் எச்டி + எல்சிடி டிஸ்ப்ளே காட்சி கொண்டு ஒரு சூப்பர் கூர்மையான மற்றும் "அதிவேக அனுபவத்தை" வழங்கும் 564பிபிஐ பிக்சல் அடர்த்தி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படும் இக்கருவி 18:9 என்ற திரை விகிதத்தில் வெளிவரும் முதல் கருவியாக இருக்கும்.

டாப்#03 சியோமி மி 6

டாப்#03 சியோமி மி 6

க்வால்காம் நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஆன ஸ்னாப்டிராகன் 835 கொண்டு ஐயனாகும் இரண்டாவது மாதிரியான இதில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க சேமிப்பும் எதிர்பார்க்கப்படுகிறது. மி 5 அக்கருவி முதலில் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (MWC) 2016-ல் தான் அறிமுகமானது அதே போல மி 6 கருவியும் பார்சிலோனாவில் தான் அறிமுகம் செய்ய அதிக சாத்தியம் உண்டு.

டாப்#02 மோட்டோ ஜி5 ப்ளஸ்

டாப்#02 மோட்டோ ஜி5 ப்ளஸ்

ஒரு 5.5-அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 625 செயலி, 4ஜிபி ரேம், மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக நீட்டிப்பு ஆதரவு கொண்ட 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு, 13எம்பி பின்புற கேமரா, 5 மெகாபிக்சல் முன்பக்க கேமிரா, 3080எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்க கூடும் உடன் ஒரு கைரேகை ஸ்கேனர் உள்ளடக்கமாக இருக்கும் என்று இக்கருவிகளின் அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

டாப்#01 நோக்கியா ஆண்ட்ராய்டு

டாப்#01 நோக்கியா ஆண்ட்ராய்டு

சமீபத்திய அறிக்கையின் மூலம் நிகழப்போகும் எம்டபுள்யூசி 2017 நிகழ்வில் நோக்கியா 3310 சேர்த்து 4 நோக்கியா கருவிகள் தான் வெளியாகும் என்று அறியப்படுகிறது. இதன் மூலம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 8 கருவி வெளியாகாது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் எந்த நோக்கியா கருவி வெளியாகினாலும் வரவேற்பு உண்டு என்ற நிலை உருவாகிவிட்டது. ஆக அதிகமாக எதிர்பார்க்கப்படும் கருவிகளின் பட்டியலின் முதல் இடத்தில் இருப்பது - நோக்கியா கருவிகள் தான்.!

மேலும் படிக்க

மேலும் படிக்க

இந்தியாவில் சலுகை விலையில் ஐபோன் எஸ்இ - என்ன விலை? எப்போது?

Best Mobiles in India

English summary
MWC 2017: Top 5 smartphones to look forward to. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X