
ஆன்ட்ராய்டு தொழில் நுட்பத்தில் இயங்குவதாக இருப்பதாகவும் இருக்க வேண்டும், அதே சமயம் பிரபலமான நிறுவனத்தின் தயாரிப்பாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கும் இந்த வாடிக்கையாளர்களுக்கு, மோட்டோரோலா ஸ்மார்ட்போன் பொருத்தமானதாக இருக்கும்.
இந்நிறுவனத்தின் புதிய மோட்டோலக்ஸ் எக்ஸ்டி-389 என்ற ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது. ஆனால் ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டதல்ல. ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது. கூடிய விரைவில் மோட்டலக்ஸ் எக்ஸ்டி-389 ஸ்மார்ட்போனில் ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷனை பெறலாம்.
3.5 இஞ்ச் திரை தகவல்களை தெளிவாக காட்டுவதற்கு உதவும். இந்த எக்ஸ்டி-389 ஸ்மார்ட்போன் 800 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் மீடியாடெக் எம்டி-6573 பிராசஸர் வசதியினை கொண்டது. பவர் விஆர் எஸ்ஜிஎக்ஸ்-531 கிராஃபிக்ஸ் தொழில் நுட்பத்தினையும் வழங்கும்.
இதன் 3.15 மெகா பிக்ஸல் கேமரா 2048 X 1536 பிக்ஸல் துல்லியத்தினையும் கொடுக்கும். ஜியோ டேகிங் வசதி கொண்ட இந்த கேமரா 480பி துல்லியத்தில் 30 ஃப்ரேம்களை கொடுக்கும்.
வைபை, புளூடூத் 4.0 யூஎஸ்பி என்று பிரவுசிங் வசதியையும், தகவல் தொழில் நுட்பம் என்று தேவையான தொழில் நுட்ப வசதிகளையும் இந்த ஸ்மார்ட்போனில் பெறலாம்.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2ஜி, 3ஜி வசதிக்கு சப்போர்ட் செய்யும். வெள்ளை நிறத்தில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் கவர்ச்சிகரமான விலையினையும் கொண்டதாக இருக்கும்.






























