மோட்டோரோலா மோட்டோ ஜி 2 - புதிய தகவல்கள்

By Meganathan
|

மோட்டோ ஜி மொபைல்கள் சந்தையில் வெளியான குறுகிய காலகட்டத்தில் முதலிடத்தை பிடித்தது. தலைசிறந்த வன்பொருள் மற்றும் நியாயமான விலையில் மோட்டோ ஜி போன் வெளியானதை டொடர்ந்து மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி போன்களின் அடுத்த மாடல்களை வெளியிட இருக்கின்றது.

மோட்டோரோலா மோட்டோ ஜி 2
மோட்டோ ஜி 2 மொபைல் போன்கள் செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

மோட்டோரோலா மோட்டோ ஜி 2

இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் கிடைக்காததால் சில்லரை சமூகத்தினர் செப்டம்பர் 10 அல்லது அதற்கு முன்னரே மோட்டோ ஜி 2 பெறுவார்களா என்பது சந்தேகமாகவே உள்ளது.

வேடிக்கையாக ஆப்பிள் நிறுவனமும் செப்டம்பர் 9 ஆம் தேதி ஐ போன் 6 மற்றும் ஐ வாட்ச் ஸ்மார்ட் வாட்ச்களை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மோட்டோரோலா மோட்டோ ஜி 2 - என்ன எதிர்பார்க்க வேண்டும்

மோட்டோ ஜி 2 மொபைல் 720 பிக்சல் ரெசலியூஷனுடன் 5 இன்ச் டிஸ்ப்ளே
மற்றும் குவாட் கோர் பிராசஸருடன் 1 ஜி.பி ராம் பொருத்தப்பட்டிருக்கலாம். நீட்டிப்பு வசதி இல்லாத 8 ஜி.பி இன்பில்டு மெமரியும் இதில் எதிர்பார்க்கப்படுகின்றது. 8 எம்.பி கேமரா மற்றும் செல்பிகள் எடுக்க 3 எம்.பி முன் பக்க கேமராவுடன் ஆன்டிராய்டின் 4.4 கிட்காட் ஓ.எஸ் சப்போர்ட் செய்யலாம்.

மோட்டோரோலா மோட்டோ ஜி 2 - சந்தையில் எதிர்பார்க்கப்படும் விலை

பிரேசில் மற்றும் இந்தியாவில் மோட்டோ ஜி மொபைல்கள் அதிகம் விற்பனையான காரணமே அவை குறைந்த விலையில் வெளியானது என்பதோடு, விரைவில் வெளியாக இருக்கும் மோட்டோரோலா மோட்டோ ஜி 2 மொபைல் சுமார் 20,000 ரூபாக்கு விற்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது. இது மோட்டோ ஜி மொபைல்களை விட இரு மடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X