2017 ஜனவரிக்குள் மோட்டோ எக்ஸ் ப்ளே மாடலில் மாறும் ஆண்ட்ராய்டு 7.1 நெளகட் ஆபரேட்டிங் சிஸ்டம்

கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிரபல ஆண்ட்ராய்டு நிறுவனமான மோட்டோரோலா தனது புதிய தயாரிப்பான மோட்ட எக்ஸ் ப்ளே என்ற மாடலை வெளியிட்டது.

By Siva
|

கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிரபல ஆண்ட்ராய்டு நிறுவனமான மோட்டோரோலா தனது புதிய தயாரிப்பான மோட்ட எக்ஸ் ப்ளே என்ற மாடலை வெளியிட்டது.

2017 ஜனவரிக்குள் மோட்டோ எக்ஸ் ப்ளே மாடலில் மாறும் ஆண்ட்ராய்டு 7.1

இந்த மாடலில் ஆண்ட்ராய்டு 5.1.1 லாலிபாப் வெர்ஷன் ஆபரேட்டிங் சிஸ்டம் இருந்த நிலையில் தற்போது அதற்கு பதிலாக மிக விரைவில் ஆண்ட்ராய்டு 7.1 நெளகட் ஆபரேட்டிங் சிஸ்டத்தை மாற்ற முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

வாட்ஸ்ஆப்பில் டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை 'எனேபிள்' செய்வது எப்படி.?

இதுகுறித்து மோட்டோரோலோ நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை மிக விரைவில் வெளியிட உள்ளதாக செய்திகள் வந்து கொண்டே உள்ளது.

2017 ஜனவரிக்குள் மோட்டோ எக்ஸ் ப்ளே மாடலில் மாறும் ஆண்ட்ராய்டு 7.1

தற்போது மோட்டோரோலோ நிறுவனம் ஆண்ட்ராய்ட் நெளகட் சாப்ட்வேரை சோதனை செய்து வருவதாகவும் முதல்கட்ட சோதனை முடிந்ததும் மோட்டோ எக்ஸ் ப்ளே மாடலில் அப்டேட் செய்வது குறித்த உறுதியான தகவலை வெளியிடும் என்றும் செய்திகள் கூறுகின்றன.

பேடிஎம் - வங்கி : பண பரிமாற்றம் நிகழ்த்துவது எப்படி.?

ஆண்ட்ராய்டு 5.1.1 லாலிபாப் வெர்ஷன் ஆபரேட்டிங் சிஸ்டத்திற்கு பதிலாக ஆண்ட்ராய்டு 7.1 நெளகட் ஆபரேட்டிங் சிஸ்டத்தை மாற்றுவது குறித்த அறிவிப்பை இந்நிறுவனம் வரும் 2017 ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2017 ஜனவரிக்குள் மோட்டோ எக்ஸ் ப்ளே மாடலில் மாறும் ஆண்ட்ராய்டு 7.1

முதலில் அனைத்து மோட்டோ எக்ஸ் ப்ளே மாடலில் இந்நிறுவனமே ஆண்ட்ராய்டு 7.1 நெளகட் ஆபரேட்டிங் சிஸ்டத்தை மாற்றி தருவதாக கூறாப்பட்டது. ஆனால் தற்போது மோட்டோரோலோ நிறுவனம் இந்த முடிவை மாற்றி கொண்டதாக கூறப்படுகிறது.

பானாசோனிக் பி88 : மூன்று எல்இடி ப்ளாஷ், மற்றும் 4ஜி ஆதரவுடன் வெறும் ரூ.9,290/-க்கு.!

மோடோ எக்ஸ் ப்ளே மட்டுமின்றி எக்ஸ் ஃபோர்ஸ், எக்ஸ் பியூர் ஆகிய மாடல்களிலும் ண்ட்ராய்டு 5.1.1 லாலிபாப் வெர்ஷன் ஆபரேட்டிங் சிஸ்டத்திற்கு பதிலாக ஆண்ட்ராய்டு 7.1 நெளகட் ஆபரேட்டிங் சிஸ்டத்தை மாற்ற மோடோரோலோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மோடோரோலோ எக்ஸ்ப்ளே மாடல் 5.5-இன்ச் டிஸ்ப்ளேவுடன் 1920x1080 பிக்சல் ரெசலூசன் இருக்கும் என்பது இம்மாடலை உபயோகிப்பவர்கள் அனைவரும் அறிந்ததே.

மேலும் இந்த போனில் ஸ்னாப்டிராகன் 615.7 GHz ஆக்டா கோர் பிராஸசர், மற்றும் 16 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் ஆகியவையும், 2 ஜிபி ரேமும் உள்ளது. இதனுடன் புதிய வரவாக ஆண்ட்ராய்டு 7.1 நெளகட் ஆபரேட்டிங் சிஸ்டமும் இணைந்துவிட்டால் இந்த ஸ்மார்ட்போனின் தரம் அதிகரிக்கும் என்பது எள்ளளவும் சந்தேகம் இல்லை.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Moto X Play might soon get upgraded to Android 7.1, and reports state that it might happen by the end of January 2017.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X