மோட்டோ ஜி5 விலை குறையுமாம் - உடன் அம்சங்கள் என்னென்ன.?

மோட்டோ ஜி5 கருவி அதன் முன்னோடி (மோட்டோ ஜி4) கருவியை விட குறைந்த விலையில் அறிமுகம் ஆகும்.!

Written By:
இம்மாத இறுதியில் பார்சிலோனாவில் நடைபெறவுள்ள மொபைல் வேர்லட் காங்கிரஸ் 2017 நிகழ்வில் லெனோவா நிறுவனத்தின் மோட்டோரோலா பிராண்ட் பெயர் கருவியான மோட்டோ ஜி5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீப காலமாகவே மோட்டோ ஜி5 மற்றும் மோட்டோ ஜி5 ப்ளஸ் கருவிகளின் லீக்ஸ் தகவல்கள் வெளியாகி அக்கருவிகளின் விலை நிர்ணயம் மற்றும் அம்சங்கள் ஆகிய குறிப்பை வழங்கி வந்த வண்ணம் உள்ளன.

கருவியின் வெளியீட்டு விழா நெருங்கிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் சமீபத்திய லீக்ஸ் தகவல் ஒன்று மோட்டோ ஜி5 கருவி அதன் முன்னோடி (மோட்டோ ஜி4) கருவியை விட குறைந்த விலையில் அறிமுகம் ஆகும் என்று கூறியுள்ளது.!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சேமிப்பு மாதிரி

இந்த சமீபத்திய குறிப்பின்படி மோட்டோ ஜி5 கருவியின் 2ஜிபிரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு மாதிரியானது சுமார் ரூ.13,500/- என்ற விலைக்கும், மறுபுறம் 3ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு மாதிரி கருவியானது சுமார் ரூ.15,000/- என்ற விலை நிர்ண்யத்தையும் பெரும் என்று கூறப்பட்டுள்ளது.

விரைவிலேயே விற்பனை

மேலும் அந்த சமீபத்திய அறிக்கை மோட்டோ ஜி5 கருவியானது மோட்டோரோலா நிகழ்வு முடிந்த விரைவிலேயே விற்பனைக்கு வரும் என்றும் கூறுகிறது. இந்த ஐரோப்பிய விலை லீக்ஸ் தகவலை லெனோவா எதிர்வரும் ஸ்மார்ட்போன்கள் தொடர்பான கசிவை வெளியிடும் வின்பியூச்சர்.டி மூலம் வெளியாக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அறிமுக ஆரம்ப விலை

இந்த தகவல் உண்மையானால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகமான லெனோவா மோட்டோ ஜி4 கருவியின் அறிமுக ஆரம்ப விலையான ரூ.12,499/- என்பதை விட குறைவான விலைக்கு மோட்டோ ஜி5 கருவி வெளியாகும்.

செயலி, சேமிப்பு

இக்கருவியின் அம்சங்களி பொறுத்தமட்டில் ஒரு க்வால்காம் ஸ்னாப்டிராகன் 430 செயலி, 3ஜிபி ரேம், மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128ஜிபி வரை நீட்டிப்பு ஆதரவு கொண்ட 32ஜிபி சேமிப்பு ஆதரவு ஆகிய அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

கேமரா, பேட்டரி

உடன் 5 இன்ச் முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) டிஸ்ப்ளே, 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு 5-மெகாபிக்சல் முன்பக்க கேமரா, 2800எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டிருக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க

மோட்டோ ஜி5 ப்ளஸ் : விலை, அம்சங்கள் & வெளியீட்டு தேதி.!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Moto G5 Price Rumoured to Be Lower Than Moto G4's Launch Price. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்