மோட்டோ ஜி5, ஜி5 ப்ளஸ் முழு அம்சங்களும் 'அவுட்'.!

இந்த தகவலை வெளியிட்டு இருப்பது 'இவான் ப்ளாஸ்' என்பதால் இதுவே கருவியின் இறுதி அம்சங்களாக இருக்கலாம்.!

Written By:
லெனோவா நிறுவனத்தின் மோட்டோ ஜி5 தொடர் இம்மாத இறுதியில் நிகழும் மொபைல் வேர்லட் காங்கிரஸ் 2017 நிகழ்வில் வெளியாவது உறுதியாகிவிட்டது. அதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யும் வண்ணம் லெனோவா நிறுவனம் பிப்ரவரி 26-ல் பார்சிலோனாவில் நிகழும் எம்டபுள்யூசி 2017 நிகழ்விற்கான அழைப்பிதழ்களை ஏற்கனவே அனுப்பிவிட்ட நிலையில் மோட்டோ ஜி5 மற்றும் ஜி5 ப்ளஸ் கருவி கருவியின் முழு அம்சங்களும் அவுட் ஆகியுள்ளது.

முன்பே சில மோட்டோ ஜி5 கருவிகள் சார்ந்த கசிவை நாம் பார்த்திருந்த போதிலும் இந்த தகவலை வெளியிட்டு இருப்பது இவான் ப்ளாஸ் என்பதால் இதுவே கருவியின் இறுதி அம்சங்களாக இருக்கலாம்.!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

விளம்பர புகைப்படம்

இக்கருவி சார்ந்த தகவல்களை வெளியிட்ட இவன் ப்ளாஸ் அவரது டிவிட்டர் பக்கத்தில் மோட்டோ ஜி5 ப்ளஸ் கருவி சார்ந்த விளம்பர புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். மேலும் தொலைபேசியின் முழு குறிப்பு பட்டியலையும் வழங்கியுள்ளார்.

முழு எச்டி பதிப்பு

வெளியான தகவலின்படி மோட்டோ ஜி5 கருவிகளானது முந்தைய கருவிகள் போல ஒரு 5.5 அங்குல டிஸ்ப்ளே கொண்டு வெளியாகதாம் அதற்கு பதிலாக 5 இன்ச் முழு எச்டி பதிப்பு, அதாவது மோட்டோ ஜி5 கருவி மற்றும் ஒரு 5.2 இன்ச் முழு எச்டி பதிப்பு, அதாவது மோட்டோ ஜி5 ப்ளஸ் கருவி வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ப்ராசஸர்

மேலும் மோட்டோ ஜி5 ப்ளஸ் கருவியானது ஸ்னாப்டிராகன் 625 ப்ராசஸரும் மற்றும் மோட்டோ ஜி5 கருவியானது ஸ்னாப்டிராகன் 430 ப்ராசஸரும் கொண்டிருக்கும்.

சேமிப்பு

சேமிப்பு அடிப்படையில் பார்த்தால் மோட்டோ ஜி5 கருவியானது 2ஜிபி ரேம் கொண்டிருக்க அதேசமயம் ஜி5 ப்ளஸ் ஒரு 64ஜிபி சேமிப்பு விருப்பத்தை கொண்டிருக்க வேண்டும்.

கேமரா

கேமரா துறையை பொறுத்தமட்டில் மோட்டோ ஜி5 பிளஸ் கருவி டூவல் ஆட்டோ போகஸ் கொண்ட ஒரு 12 மெகாபிக்சல் பின்புற கேமராவும், ஜி5 அக்கருவி ஒரு 13எம்பி பின்புற கேமராவும் கொண்டுள்ளது.

விலை

முந்தைய இவான் ப்ளாஸின் ட்வீட்ஸ் படி, மோட்டோ ஜி5 கருவியின் 2ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பு பதிப்பின் விலை சுமார் ரூ.13,500/- என்றும், 3ஜிபி பதிப்பின் விலை ரூ.14,800/- என்று நிர்ணயம் பெறலாம் என்று குறிப்பிடுகிறது. ஆனால் சமீபத்திய அறிக்கையின் குறிப்புகள் மோட்டோரோலாவின் இரண்டு போன்களுமே 2ஜிபி ரேம் கொண்டு வெளிவரும் என்கிறது.

ஜி ஸ்மார்ட்போன்கள்

மோட்டோ ஜி ஸ்மார்ட்போன்கள் பொதுவாக இந்தியாவில் ஒரு நல்ல கடந்த காலத்தையே பெற்றுள்ளன குறிப்பாக மோட்டோ ஜி4 ப்ளஸ் ரூ.15,000/- என்ற பட்ஜெட்டிற்கு கீழ் விலை கொண்ட பிரிவில் அதன் 16எம்பி கேமரா சிறப்பம்சமாக திகழ்ந்தது. அதே போல மோட்டோ ஜி5 கருவிகளும் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெறுமா என்பது இம்மாத இறுதிக்குள் தெரிந்து விடும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Moto G5, Moto G5 Plus photos, full specifications leaked online. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்