மோட்டோ இ ஏன் இவ்வளவு விற்பனை??? இதோ காரணங்கள்

|

இன்றைக்கு குறைந்த விலையில் ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்து வைத்து ஸ்மார்ட் போன் சந்தையை கைப்பற்றியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

சில மாதங்களுக்கு முன்பு வெளியான மோட்டோ ஜி (Moto G) இன்னும் விற்பனையில் அசத்தி கொண்டு இருக்கிறது அதற்குள் சென்ற மாதம் மோட்டோ இ(Moto E) மொபைலை வெளியிட்டு விட்டது மோட்டோரோலா.

இன்றுவரை தொடர்ந்து விற்பனையில் அசத்தி கொண்டு இருக்கிறது மோட்டோ இ மொபைல் இதோ அதன் சிற்ப்பம்சங்களை பார்ப்போமா.

4.3 இன்ச் டிஸ்பிளே உடன் கிடைக்கும் இந்த மொபைலில் கொரில்லா கிளாஸூடன் நமக்கு கிடைக்கின்றதுங்க.

மேலும், 4GB க்கு இன்பில்ட் மெமரியுடன் கிடைக்கும் இந்த மொபைலில் 32GBக்கு மெமரி கார்டு போடும் ஆப்ஷனும் இருக்கிறது.

அடுத்து இதன் கேமரா திறனை பொருத்தவரை 5MP கேமரா இதில் உள்ளது 1GB க்கு ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு கிட்கேட் ஓ.எஸ் உடன் நமக்கு இது ப்ளிப்கார்டில்(Flipkart) கிடைக்குதுங்க.

இதோ மேலும் இந்த மொபைல் பற்றி சில...

#1

#1

மோட்டோ இ விற்பனைக்கு முக்கியமான காரணம் அதிலுள்ள அதிக ஆப்ஷன்கள் தான் ஆகும் 1GB ரேம் மற்றும் 5MP க்கு கேமரா இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்

#2

#2

இதன் டிஸ்பிளே மிகவும் தெளிவாக மற்றும் துல்லியமாக உள்ளது

#3

#3

ஆண்ட்ராய்டின் புதிய வரவான கிட்கேட் ஓ.எஸ் உடன் கிடைக்கும் குறைந்த விலை மொபைல் இதுதான்

#4

#4

7 ஆயிரம் ரூபாய்க்கு கம்பெனி மொபைலான மோட்டோரோலாவே கிடைக்கும் போது மற்ற மொபைல்களான மைக்ரோமேக்ஸ், சோலோ ஆகியவற்றை தற்போது யாரும் அதிகம் விரும்புவதில்லை

#5

#5

இதன் பின்புற பேனல் ஸ்கேரட்ச் புரூப் கொண்டதாகும் மேலும் இதன் டிஸ்பிளே கிளாஸூம் கொரில்லா கிளாஸ் எனப்படும் கீறல்கள் விழா வண்ணம் பாதுகாக்கும் கிளாஸ் ஆகும்

#6

#6

மொபைல் பாக்கெட் பிரெண்ட்லியாக இருக்கின்றது எடையும் அதிகமில்லை மிகவும் குறைவே

#7

#7

இதிலுள்ள அனைத்து ஆப்ஷன்களுடன் வரும் மொபைலை வேறு கம்பெனி மாடல்களான சாம்சங், எச்.டி.சி, சோனி ஆகியவற்றில் பார்க்க போனால் அனைத்தும் நிச்சயம் 10 ஆயிரம் விலைக்கு மேல் தான் இருக்கும் இதனால் தான் இதன் விற்பனை தொடர்ந்து அமோகமாக நடந்து வருகிறது....அடுத்து இதோ 64GB இன்பில்ட் மெமரியுடன் அமேசான் வெளியிட்ட அமேசான் பயர் மொபைலை பற்றி படிக்க இங்கு கிளிக் செய்யவும்

<center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/WcLsXKnTK5s" frameborder="0" allowfullscreen></iframe></center>

Best Mobiles in India

Read more about:

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X