ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் இந்த 8 தவறுகளை செய்ய வேண்டாம்

Written By:

இன்றைய டெக்னாலஜி உலகில் ஸ்மார்ட்போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டு ஒருசில வருடங்கள் ஆகின்றது.

ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் இந்த 8 தவறுகளை செய்ய வேண்டாம்

உலகில் உள்ள ஸ்மார்ட்போன்கள் அத்தனையும் ஒருநாள் செயல் இழந்தால் உலகில் பலர் பைத்தியக்காரர்களாக மாறிவிடும் அபாயம் உள்ளது.

ஜியோ தயவில் குறைக்கப்பட்ட டேட்டா கட்டணங்கள் சிறந்த விலையைத் தேர்வு செய்வது எப்படி.??

இந்நிலையில் உங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக மாறிவிட்ட இந்த ஸ்மார்ட்போனை எப்படி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

ரூ.1/-க்கு 300 நிமிடங்கள் ஆப்-டு-ஆப் கால், ரிலையன்ஸின் அடுத்த அதிரடி..!

உங்கள் ஸ்மார்ட்போனில் வங்கி பாஸ்வேர்டு, சமூக வலைத்தளங்கள், உள்பட முக்கிய அம்சங்களை எளிதில் லாக்-இன் செய்யும்படி வைத்திருப்பீர்கள் அதில் தவறில்லை. ஆனால் கண்டிப்பாக அதை நீங்கள் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

லாக் செய்ய மறக்க வேண்டாம்:

உங்கள் ஸ்மார்ட்போனை பாஸ்வேர்டு போட்டு லாக் செய்து கொள்வது பாதுகாப்பானது. உங்கள் போன் தொலைந்துவிட்டால் அதில் உள்ள டேட்டாக்களை எளிதில் மற்றவர்கள் உபயோகப்படுத்தாமல் இருக்க பாஸ்வேர்டு உதவும். அதேபோல் ஸ்க்ரீன் லாக்கையும் ஆட்டொமெட்டிக்காக வைத்து கொள்ளுங்கள்

பப்ளிக் வைஃபை பயன்படுத்துவதை தவிர்க்க முயலுங்கள்

பப்ளிக் வைஃபை விலை மலிவானதுதான். ஆனால் பாதுகாப்பு திறன் குறைவு. நீங்கள் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகளை ஹேக்கர்கள் மிக எளிதில் பார்க்க முடியும். அதே நேரத்தில் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ரகசியங்களை திருடவும் வாய்ப்பு உள்ளது. எனவே விழிப்புடன் இருங்கள்

ஆண்ட்டி வைரஸ் கண்டிப்பாக வேண்டும்

கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் அனைவரும் ஆண்ட்டி வைரஸ் பயன்படுத்துவதை பார்த்திருக்கின்றோம். ஆனால் 96% ஸ்மார்ட்போன் பயனாளிகள் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர்களை பயன்படுத்தவில்லை என ஒரு சர்வே கூறுகிறது. நீங்களும் பயன்படுத்தியிருக்க மாட்டீர்கள் என்று தெரியும். எனவே உடனே ஆண்ட்டி வைரஸை இன்ஸ்டால் செய்யுங்கள்

அப்டேட்டை கவனிப்பது உண்டா?

பெரும்பாலான ஆப் டெவலப்பர்கள் அவ்வப்போது தங்கள் ஆப்ஸ்களை அப்டேட் செய்து கொண்டே இருப்பார்கள். நமது ஸ்மார்ட்போனிலும் அப்டேட் செய்ய வேண்டுமா? என்று கேட்கும். அப்படியான நேரத்தில் உடனே ஆப்ஸ்களை அப்டேட் செய்ய மறக்க வேண்டாம்

இதையும் முக்கியமா கவனிக்கனும்:

கூகுள் ப்ளே ஸ்டோரில் சென்று ஒரு ஆப்ஸ்-ஐ பார்த்தவுடன் உடனே டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய கூடாது. அந்த ஆப்ஸ்-ஐ செய்தது யார்? அவருடைய முந்தைய ஆப்ஸ்-இன் ரிசல்ட் என்ன? இந்த ஆப்ஸ்-க்கு கிடைத்திருக்கும் விமர்சனம் என்ன என்பதை பார்த்தபின்னர்தான் ஒரு ஆப்ஸ்-ஐ டவுன்லோடு செய்ய வேண்டும். தேவையில்லாத ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்தால் வைரஸ் நுழைந்துவிட வாய்ப்பு அதிகம்

லிங்க்-ஐ க்ளிக் செய்கிறீர்களா? கவனம் தேவை

உங்கள் ஸ்மார்ட்போனுக்கு வரும் எஸ்.எம்.எஸ் அல்லது மெசேஜிங் ஆப்ஸ்களில் இருந்து ஏதாவது லிங்க் வந்தால் உடனே அதை க்ளிக் செய்ய முயல வேண்டாம். போலியான லிங்க்-ஐ க்ளிக் செய்தால் உங்கள் போன் பாதிக்கப்படுவதோடு, ஹேக்கர்களின் கைவரிசைக்கும் ஆளாக வேண்டும். இமெயிலில் இருந்து வரும் லிங்குகளை மட்டும் தைரியமாக க்ளிக் செய்து கொள்ளுங்கள்

புளூடூத்தை ஆஃப் செய்து வைக்கவும்

புளூடூத்தை தேவைப்படும்போது மட்டும் ஆன் செய்து மீதி நேரங்களில் ஆப் செய்யுங்கள். புளூடூத் ஆன் செய்திருந்தால் ஹேக்கர்கள் உங்கள் ரகசிய தகவல்களை அதன்மூலம் மிக எளிதில் கைப்பற்றிவிடுவார்கள்

லாக்-அவுட் ரொம்ப முக்கியம்

வங்கி ஆப்ஸ்கள், அமேசன், இபே போன்ற வர்த்தக ஆப்ஸ்கள் ஆகியவற்றை உபயோகப்படுத்திய பின்னர் கண்டிப்பாக லாக்-அவுட் செய்துவிடுங்கள். ஏனெனில் அதில் உங்கள் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டை பயன்படுத்தியிருப்பீர்கள். நீங்கள் லாக்-அவுட் செய்யவில்லை என்றால் அதன் மூலம் வேறொருவர் மிஸ்யூஸ் செய்ய முடியும்.

ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பவர்கள் மேற்கண்ட எட்டு தவறுகளை செய்யாமல் இருந்தால் ஸ்மார்ட்போன்களால் எப்போதும் இன்பம்தான்.

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
Smartphone users do a lot of common mistakes that actually expose them to some great security threats such as stealing their data, exposing their financial details, etc. Take a look at these mistakes and how you can avoid them from here.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்