அடுத்த தலைமுறை போன் ஆக வருகிறது மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் போன்

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்கள் வெற்றி பெற்ற அளவுக்கு மைக்ரோசாப்ட் போன்கள் சந்தையில் வெற்றி பெற முடியவில்லை. நோக்கியா நிறுவனத்தின் லூமியா உள்பட மைக்ரோசாப்ட் போனுக்கு கிடைத்தது தோல்வியே.

அடுத்த தலைமுறை போன் ஆக வருகிறது மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் போன்

இந்நிலையில் ஒரு சிறு இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஸ்மார்ட்போன் சந்தையில் தனது விண்டோஸ் 10 மொபைலை அறிமுகம் செய்ய சரியான நேரத்தை எதிர்நோக்கியுள்ளது மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் என்று கூறப்படும் இந்த புதிய மாடலின் அம்சங்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து அறிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களும், வாடிக்கையாளர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சமீபத்தில் மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் போனின் ஒருசில விபரங்கள் இணையதளங்கள் கசிந்தன.

தனிச்சிறப்பு போன்களை கூடுதலாக வைத்திருப்பதால் ஏற்படும் பயன்கள்

ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து அதிகாரபூர்வமாக எந்த தகவல்களும் வராத நிலையில் இந்த விபரங்கள் உண்மையானவையா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. இருப்பினும் மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் போனில் என்ன மாதிரியான அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்பது குறித்து தற்போது பார்ப்போம்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
விண்டோஸ் 10 மொபை ஓஎஸ் இருக்க வாய்ப்பு:

விண்டோஸ் 10 மொபை ஓஎஸ் இருக்க வாய்ப்பு:

மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் ஸ்மார்ட்போனை டிசைன் செய்த போலந்து நாட்டின் டிசைனர் ஒருவர் இந்த போன் குறித்து தெரிவித்த ஒருசில கருத்துக்களில் இருந்து இந்த போன் விண்டோஸ் 10 மொபைல் ஓஎஸ் ஆகத்தான் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த போனில் பெஸல் இருக்கும் வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது

மெட்டல் பாடி மற்றும் கவர்:

மெட்டல் பாடி மற்றும் கவர்:

மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் மொபைல் மெட்டல் பாடியுடன் பாடியை சுற்றிலும் கவர் இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது. டேப்ளட்டுக்களில் இருப்பது போன்ற கவர் இருக்கும் என்பதால் பாதுகாப்பு நிச்சயம் இருக்கும்.

மேலும் இந்த மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் போனில் சர்பேஸ் பென் இருக்கும் என்றும் ஆனால் கேலக்ஸி நோட் சீரிஸ்களில் உள்ள பென் போன்று இல்லாமல் புதிய வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த போனில் ஃபிளாட் கீபோர்டு இருக்கும் வாய்ப்பும் உள்ளது.

எட்ஜ் டு எட்ஜ் டிஸ்ப்ளே

எட்ஜ் டு எட்ஜ் டிஸ்ப்ளே

விலை உயர்ந்த போன்களில் பொதுவாக எட்ஜ் டு எட்ஜ் டிஸ்ப்ளே இருப்பது தற்போது வழக்கமாகி வரும் நிலையில் இந்த மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் போன் மாடலிலும் அதே போன்ற டிஸ்ப்ளேதான் இடம்பெறும் என தெரிகிறது.

மேலும் டிஸ்ப்ளேவின் அளவு 6 இன்ச் இருக்கும் என்றும், அதில் பிசிக்கல் பட்டனுக்கு பதிலாக சென்சார் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Microsoft Surface Phone renders are out showing a way too futuristic design. Take a look at the same from here.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்