மைக்ரோமேக்ஸின் புதிய மொபைல் யுனைட் 2 A106...!

Written By:

மொபைல் சந்தையில் தனக்கென ஒரு இடம் பிடித்திருக்கும் மைக்ரோமேக்ஸ் தற்போது புதிதாக ஒரு மொபைல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் யுனைட் 2 A106 என்ற பெயர் கொண்ட இந்த மொபைலை அவசர அவசரமாக தற்போது வெளியிட்டுள்ளது மைக்ரோமேக்ஸ்.

இதற்கு காரணம் தற்போது சமீபத்தில் வெளியாகி விற்பனையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் மோட்டோ இ மொபைலை கருத்தில் கொண்டே ஆகும்.

இதனால் தான் என்னவோ இந்த மொபைலை மோட்டோ இ விலையான 7 ஆயிரம் ரூபாய்க்கே வெளியிட்டுள்ளது மைக்ரோமேக்ஸ்.

மைக்ரோமேக்ஸின் புதிய மொபைல் யுனைட் 2 A106...!

ஆண்ட்ராய்டு கிட்கேட் உடன் வெளிவரும் இந்த மொபைல் 4.7இன்ச் நீளம் கொண்டதாகும் 1.3GHz பிராஸஸருடன் இது நமக்கு கிடைக்கின்றது.

மேலும் இதில் 1GB க்கு ரேம் 5MP க்கு கேமரா 2MP பிரன்ட் கேமரா என அனைத்தையும் கொண்டு நமக்கு இந்த மொபைல் கிடைக்கின்றது.

4GB க்கு இன்பில்டு மெமரி கொண்டுள்ள இந்த மொபைலில் 2000mAh பேட்டரி உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்