ரூ.4,999க்கு எக்கச்சக்க அம்சங்களை வழங்கும் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 3.!!

Written By:

இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் இந்திய சந்தையில் கேன்வாஸ் ஸ்பார்க் 3 Q385 எனும் புதிய கருவியை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான மைக்ரோமேக்ஸ் ஸ்பார்க் 2 கருவியின் அடுத்த மாடல் தான் கேன்வாஸ் ஸ்பார்க் 3 Q385. இந்த கருவியின் விற்பனை ஏப்ரல் 7 ஆம் தேதி ப்ளாஷ் விற்பனையில் ஸ்னாப்டீல் தளத்தில் நடைபெற இருக்கின்றது. இதற்கான முன்பதிவு ஏப்ரல் 1 ஆம் துவங்கியது.

 ரூ.4,999க்கு எக்கச்சக்க அம்சங்களை வழங்கும் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 3.!!

சிறப்பம்சங்களை பொருத்த வரை கேன்வாஸ் ஸ்பார்க் 3 Q385 கருவியில் 5.5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 1280*720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கின்றது. 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், 1 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

மெமரியை பொருத்த வரை கேன்வாஸ் ஸ்பார்க் 3 கருவியில் 8 ஜிபி இன்டர்னல் மெமரியும், கூடுதலாக மைக்ரோ எஸ்டி மூலம் 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் கேன்வாஸ் 3 கருவியானது ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் இயங்குதளம் கொண்டிருக்கின்றது.

 ரூ.4,999க்கு எக்கச்சக்க அம்சங்களை வழங்கும் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 3.!!

கேமராவை பொருத்த வரை கேன்வாஸ் ஸ்பார்க் 3 Q385 கருவியில் 8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது கனெக்டிவிட்டியை பொருத்த வரை 3ஜி HSPA+, வை-பை 802.11 b/g/n, ப்ளூடூத் 4.0, ஜிபிஎஸ், போன்ற ஆப்ஷன்களும் 2500 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க் 3 Q385 கருவியானது கருப்பு, ஷேம்பெய்ன் கோல்டு நிறங்களில் கிடைக்கின்றது. இதன் விலை ரூ.4,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

English summary
Micromax launched a Rs 4,999 smartphone in Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்