மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் மேட் A94 சிறப்பம்சங்கள்...

By Keerthi
|

தனது புதிய மொபைகளை வெளிவிடம் வரிசையில் மைக்ரோமேக்ஸ் தற்போது புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை, கான்வாஸ் மேட் ஏ 94 (Canvas Mad A94) என்ற பெயரில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் சிறப்பு என்ன வெனில், இதில் உள்ள MAd அப்ளிகேஷன், நீங்கள் பார்க்கும் விளம்பரங்களுக்கு, உங்களுக்குப் பரிசு அளிக்கிறது. பரிசுகள் புள்ளிகளாக உங்கள் கணக்கில் சேர்க்கப்படும். பின்னாளில், இந்த புள்ளிகளைப் பணமாக நீங்கள் மாற்றி உஙக்ள் போஸ்ட் பெய்ட் அல்லது பிரீ பெய்ட் அக்கவுண்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

இதில் 4.5 அங்குல அகலத்தில் டிஸ்பிளே காட்டும் வண்ணத்திரை உள்ளது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் ப்ராசசர் இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன். இதில் 5 எம்.பி. திறன் கொண்ட, எல்.இ.டி.ப்ளாஷ் இணைந்த கேமரா இயங்குகிறது. முன்னால் உள்ள கேமராவும் அதே 5 எம்.பி. திறனுடன், ஆட்டோ போகஸ் கேமராகவாக உள்ளது.

மேலும் இந்த MAd அப்ளிகேஷன் ஆனது நாம் வாங்கும் போனில் இணைந்து கிடைக்கும் MAd அப்ளிகேஷன், நம்மை விளம்பரங்களைக் காண அனுமதிக்கிறது. ஒருவர் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் புள்ளிகள் அவர் கணக்கில் சேரக்கப்படும். இதற்கு ஒரு முறை வாடிக்கையாளர், தனக்கு மொபைல் சேவை தரும் நிறுவனத்தின் பெயரோடு தன்னைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் மேட் A94 சிறப்பம்சங்கள்...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

இந்தியாவில் எந்த ஒரு மொபைல் எண்ணை டயல் செய்திட முயற்சிக்கையில், விளம்பரம் ஒன்றைப் பார்க்கிறீர்களா? என்ற கேள்வி காட்டப்படும். விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, எண்ணை டயல் செய்திடலாம். விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, நீங்கள் ஏற்படுத்தும் ஒவ்வொரு அழைப்பிற்கும், உங்கள் கணக்கில் புள்ளிகள் சேர்க்கப்படும். இந்த புள்ளிகள் குறிப்பிட்ட அளவு சேர்ந்தவுடன், இவற்றைப் பணமாக மாற்றி, உங்கள் மொபைல் சேவை நிறுவனத்தில் நீங்கள் கொண்டுள்ள அக்கவுண்ட்டில் வரவு வைக்கப்படும்.

இத்துடன் இன்னும் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் பதிந்தே கிடைக்கின்றன. இலவச திரைப்படங்கள் பார்க்க Spuul, Kingsoft Office, Opera Mini மற்றும் பல புரோகிராம்கள் தரப்படுகின்றன. மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் ஷர்மா இது குறித்து பேசுகையில், இந்த போனை அறிமுகப்படுத்துவதன் மூலம், மக்களின் பொழுது போக்குத்தேவைகளை நாங்கள் அறிந்து கொள்ள ஒரு வழி கிடைத்துள்ளது என்றார்.

மேலும் புதுமையான இந்த வழிகள், தங்கள் நிறுவனத்திற்கு ஒரு வெற்றிப் புள்ளியைத் தரும் என்றார். விற்பனையிலும் இது ஒரு பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும் என்று குறிப்பிட்டார்.

இந்த போனின் மற்ற சிறப்பம்சங்கள்: இரண்டு சிம் இயக்கம், 512 எம்பி ராம் மெமரி, 4 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, அதனை 32 ஜிபிக்கு அதிகப்படுத்தும் வசதி, 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, வை-பி, புளுடூத், ஜி.பி.எஸ்.என நெட்வொர்க் வசதிகள் ஆகியவை கிடைக்கின்றன.

இதன் பேட்டரி 1800 mAh திறன் கொண்டது. 5 மணி நேரம் தொடர்ந்து பேச மின் திறன் அளிக்கிறது. கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் வரும் இந்த போனின் விலை ரூ. 8,500 ஆகும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X