ரூ.2,999 விலையில் மைக்ரோமேக்ஸ்-இன் பாரத் சீரீஸ் ஸ்மார்ட்போன்கள்

பாரத் சீரீஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன வசதிகள் இருக்கின்றது தெரியுமா?

By Siva
|

சீன மற்றும் தென்கொரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இணையான போட்டியை கொடுத்து வரும் இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸ், இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களை சேமித்து வைத்துள்ளது.

ரூ.2,999 விலையில் மைக்ரோமேக்ஸ்-இன் பாரத் சீரீஸ் ஸ்மார்ட்போன்கள்

இந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் மைக்ரோமேக்ஸ் வெளியீடான மைக்ரோமேக்ஸ் டூயல் 5 ரூ.24,999 என்ற விலையில் வெளியானது .இந்நிலையில் தற்போது இதே நிறுவனம் பட்ஜெட் விலையிலும் ஒரு ஸ்மார்ட்போனை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் பாரத் சீரிஸ் என்ற பெயரில் இரண்டு வித மாடல் ஸ்மார்ட்போனை வெளியிட முடிவு செய்துள்ளது. பாரத் 1 என்ற ஸ்மார்ட்போன் 4G சப்போர்ட் செய்யும் வகையிலான ஒரு புதிய மாடல் என்றும், பாரத் 2 மாடலானது மிகக்குறைந்த பட்ஜெட் விலையில் அதே நேரத்தில் 4G சப்போர்ட் செய்யும் நடுத்தர மக்களின் வரப்பிரசாதமாக வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சியாமி நிறுவனம் தரும் புதிய வசதி. இனி ரயில் பயண விபரங்களையும் பார்க்கலாம்

இப்போதைக்கு பாரத் 2 மாடலில் என்னென்ன புதிய வசதிகள் இருக்கும் என்று சொல்ல முடியவில்லை, அதே நேரத்தில் இந்த போன் எப்போது வெளியாகும் என்பது குறித்த அதிகாரபூர்வ தகவலும் இல்லை

இந்த போன் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இல்லை என்றாலும் வழக்கம்போல் மற்ற மாடல்களை போலவே பாரத் சீரீஸ் மாடல்களின் விபரங்களும் ஆன்லைனில் லீக் ஆகி வருகின்றது. அவ்வாறு லீக் ஆன தகவல்களில் இருந்து பாரத் சீரீஸ் போன்கள் எப்படி இருக்கும் என்பதை ஒரு பார்வை பார்ப்போம்

பர்ஸை பதம் பார்க்காத விலையில் ஒரு ஸ்மார்ட்போன்

பர்ஸை பதம் பார்க்காத விலையில் ஒரு ஸ்மார்ட்போன்

ஒரு ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று சந்தைக்கு சென்றால் குறைந்தபட்சம் ரூ.10000க்கு நம்முடைய பர்ஸில் இருந்து வேட்டை வைக்கப்படும் நிலையில் இந்த பாரத் 2 மாடல் வெறும் ரூ.2,999க்கு விற்கப்படும் என்ற தகவல் காதில் தேன் பாயும் தகவலாக உள்ளது.

4G சப்போர்ட் செய்யும் இந்த போனின் விலை ரூ.1,999 என்றும் ஒருசிலர் கூறு வருகின்றனர். இருப்பினும் இந்த போனின் விலை மற்றும் வெளியாகும் தேதி குறித்த அதிகாரபூர்வ தகவலுக்காக காத்திருப்போம்

ஸ்மார்ட்போனின் அடிப்படை வசதிகள்

ஸ்மார்ட்போனின் அடிப்படை வசதிகள்

இந்த பாரத் 2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.2999ஆக இருந்தாலும் வசதி வாய்ப்புகளை பொறுத்த வரையில் அடிப்படை தேவைகள் அனைத்துமே இருக்கும். அதாவது குவாட்கோர் ஸ்பெட்ரம் பிராஸசர், 512 MB ரேம் மற்றும் 4GB இண்டர்னல் ஸ்டோரேஜ் மேலும் தேவை என்றால் மைக்ரோ எஸ்டி கார்ட் போடும் வசதி என அடிப்படை வசதிகள் அனைத்தும் இந்த போனில் உள்ளது.

என்ன ஓஎஸ் இருக்குது தெரியுமா?

என்ன ஓஎஸ் இருக்குது தெரியுமா?

ஒரு ஸ்மார்ட்போனின் இதயம் என்று கூறப்பட்ம் ஓஎஸ் குறித்து பார்த்தோம் என்றால் இந்த போனில் ஆண்ட்ராய்ட் 6.0 மார்ஷெல்லா ஓஎஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கபப்டுகிறாது. இந்த ஓஎஸ் ஒரு வருடத்திற்கு முந்தைய ஒஎஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. பாரத் 2 ஸ்மார்ட்போனின் விலையை ஒப்பிடும்போது இந்த ஓஎஸ் வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டமே

5-6 மில்லியன் டார்கெட்

5-6 மில்லியன் டார்கெட்

பாரத்1 மற்றும் பாரத் 2 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் இதில் உள்ள வசதிகள் காரணமாக இந்தியாவில் மட்டும் இந்த போன் 5-6 மில்லியன் அளவுக்கு விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த போன் வெளிவந்தவுடன் தான் இந்த போனுக்கு கிடைக்கும் வரவேற்பு மற்றும் விற்பனை நிலவரம் குறித்து சரியாக கணிக்க முடியும்

Best Mobiles in India

English summary
Micromax Bharat 2 with the 4G VoLTE support has been spotted on an online retailer at a price tag of Rs. 2,999. Here we have listed what all we know about this smartphone so far.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X