Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

பட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்!

Updated: Monday, March 25, 2013, 20:05 [IST]

micromax announces ninja 2 a56 budget rage smartphone
பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போன்போனை அறிமுகம் செய்துள்ளது மைக்ரோமேக்ஸ் நிறுவனம். நின்ஜா-2 ஏ-56 என்ற இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி கொண்டது.

இதன் மூலம் நிறைய புதிய தொழில் நுட்பங்களையும், அதிக ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன்களையும் எளிதாக பயன்படுத்த முடியும்.

800 மெகாஹெர்ட்ஸ் வேகம் கொண்டு இயங்கும் பிராசஸர் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் சிறப்பான இயக்கத்தினையும் அளிக்கும்.

3.5 இஞ்ச் திரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் தகவல்களை முழுமையாகவும், சிறப்பாகவும் பார்க்க முடியும். இந்த ஸ்மார்ட்போனில் முகப்பு கேமரா கொடுக்கப்படவில்லை. இதில் 3 மெகா பிக்ஸல் கேமராவினையும் பெற முடியும். இதன் மூலம் அழகான புகைப்படங்களை இன்னும் அழகாக பெறலாம்.

இந்த ஸ்மார்ட்போனில் முக்கிய வசதியும் ஒன்று உள்ளது. இதில் ஆயிஷா என்ற வாய்ஸ் அசிஸ்டன்ட் அப்ளிக்கேஷன் ப்ரீ-லோடடு செய்யப்பட்டுள்ளது.

512 எம்பி மற்றும் 256 எம்பி ரோம் வசதிகளை வழங்கும் இந்த மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்டாக 32 ஜிபி வரை மெமரி வசதிக்கு எளிதாக சப்போர்ட் செய்யும். 1,400 எம்ஏஎச் பேட்டரி வசதியின் மூலம் சிறந்த டாக் டைம் மற்றும் ஸ்டான்ட்-பை டைமினையும் பெறலாம்.

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இந்த குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 5,999 விலையில் கொண்டதாக இருக்கும்.

Story first published:  Wednesday, July 4, 2012, 12:59 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll