
ரூட்டர் கருவியின் சிறப்பு என்ன என்பதையும் பார்க்கலாம். இந்த ரூட்டர் கருவியன் மூலம் டேப்லட், ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர் என்று ஒரே நேரத்தில் பல எலக்ட்ரானிக் சாதனங்களில் வைபை வசதியை வழங்கும்.
இப்போது கோபியன் நிறுவனம் தயாரித்து இருக்கும் 3ஜி மொபைல் ரூட்டர் தொழில் நுட்பத்தின் மூலம் 3ஜி வசதியையும் பெற முடியும்.
கோபியன் தயாரித்து இருக்கும் இந்த 3ஜி மொபைல் ரூட்டரை மெர்குரி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இத்தகைய இந்த 3ஜி மொபைல் ரூட்டர் பயன்பாடுகளே தனி தான். இதில் லியான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
மிக உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட இந்த 3ஜி மொபைல் ரூட்டரின் விலை அதிகமாக இருக்கும் என்று நினைக்க தோன்றும்.
ஆனால் மெர்குரி நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டிருக்கும் இந்த 3ஜி மொபைல் ரூட்டர் ரூ.5,200 விலையில் ஒரு வருட வாரண்டியுடன் பெறலாம்.





























